Published:Updated:

``பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு... ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?!" - ஓ.பி.எஸ் காட்டம்

தஞ்சாவூரில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்

`தேர்தலின் போது தி.மு.க 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனால், 10 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்வி கடனையும் ரத்து செய்யவில்லை.' - ஓ.பி.எஸ்

``பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு... ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?!" - ஓ.பி.எஸ் காட்டம்

`தேர்தலின் போது தி.மு.க 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனால், 10 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்வி கடனையும் ரத்து செய்யவில்லை.' - ஓ.பி.எஸ்

Published:Updated:
தஞ்சாவூரில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொண்டார். தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கம், முன்னாள் கொறடா, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொணடனர்.

தேர்தல் பிரசாரத்தில் ஓபிஎஸ்
தேர்தல் பிரசாரத்தில் ஓபிஎஸ்

இந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. கடந்த 10 மாதங்களில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலின்போது தி.மு.க 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனால், 10 மாதங்களாகியும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்வி கடனையும் ரத்து செய்யவில்லை. இப்படிப் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறிய தி.மு.க மக்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாதம் ரூ.1,000 தருவதாகக் கூறினீர்களே என உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் கேட்கின்றனர். இன்னும் 4 ஆண்டுகள் இருக்கின்றன என பதிலளிக்கிறார். நீட் தேர்வு ரத்து குறித்து கேட்டாலும், அதற்கும் நான்காண்டுகள் இருக்கின்றன எனக் கூறுகிறார். இந்த அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் உறுதியாக வரும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்களை வழங்கிய ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சியாகத்தான் இருக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்கள் வழங்கியிருப்பது தெரியவந்தது. இதற்காக ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

அடுத்து வருகிற தேர்தலில் நாம் ஆட்சியில் அமர்வதற்கு அச்சாரமாக இந்தத் தேர்தல் உள்ளது. அதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் ஓரணியாக இருந்து அ.தி.மு.க 100 சதவிகிதம் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எங்குச் சென்றாலும் மக்கள் நமக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதை வெற்றியாக மாற்றுவதற்கு நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்றார்.