Published:Updated:

இந்தி விவகாரம்: ``திமுக-வின் இரட்டை வேடத்தை ஒப்புக்கொண்ட அமைச்சருக்கு நன்றி" - ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்

``இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க-வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒப்புக்கொண்ட அமைச்சர் அவர்களுக்கு நன்றி" என ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்தி விவகாரம்: ``திமுக-வின் இரட்டை வேடத்தை ஒப்புக்கொண்ட அமைச்சருக்கு நன்றி" - ஓ.பி.எஸ்

``இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க-வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒப்புக்கொண்ட அமைச்சர் அவர்களுக்கு நன்றி" என ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
ஓ.பி.எஸ்

இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என தமிழக முதல்வரைக் குறிப்பிட்டு ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு, உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமியை ஓ.பி.எஸ் ஏன் மறந்துவிட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சரின் இத்தகைய பேச்சு மூலம் ``தி.மு.கவின் இரட்டை வேடத்துக்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது" என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, தங்கம் தென்னரசு
எடப்பாடி பழனிசாமி, தங்கம் தென்னரசு

அந்த அறிக்கையில், ``இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது, தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் முதலமைச்சர் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதற்கு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். அவருடைய பதில் அறிக்கையைப் பார்க்கும்போது, இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. இந்தி மொழி குறித்த மத்திய உள்துறை அமைச்சரின் கருத்திற்குத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைப்பாட்டினை உறுதிபட முதலமைச்சர் தெரிவித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலைப்பாடு ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓபிஎஸ் அறிக்கை
ஓபிஎஸ் அறிக்கை

இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து ‘ஒன்றுமே தெரியாது’ என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும், அதனை நான் கண்டித்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து முதலில் அவருக்குத் தெரியாததால் ‘ஒன்றுமே தெரியாது’ என்று கூறினார். பின்னர், அதற்கு மறுநாளே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டு விட்டதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. எது எப்படியோ, ‘நுணலும் தன் வாயால் கெடும்‘ என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க-வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒப்புக் கொண்ட அமைச்சர் அவர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism