Published:Updated:

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

வர்ற தேர்தல் வரலாற்றில் நிக்கும் பாருங்க. கட்சி பலம், கூட்டல் கழித்தல், இந்தத் தேர்தல் கணிப்பு எல்லாம் எதுவும் இந்தத் தடவை செல்லாது

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

வர்ற தேர்தல் வரலாற்றில் நிக்கும் பாருங்க. கட்சி பலம், கூட்டல் கழித்தல், இந்தத் தேர்தல் கணிப்பு எல்லாம் எதுவும் இந்தத் தடவை செல்லாது

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம்

தேர்தல் இதோ இதோ’ என அருகிலிருக்க, தீவிர பிரசாரத்தில் இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கிராமம்தொட்டு நகரங்கள் வரை சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் உச்சி வெயில், வீசும் காற்று, நெருங்கி வரும் தொண்டர்கள், காத்திருக்கும் மக்கள் என எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து, நமக்கும் சற்று நேரம் ஒதுக்கி வந்து உட்கார்கிறார். ஒற்றைத் தொகுதியாக தேனியைத் தட்டிக் கொண்டு வந்தது வரைக்கும் இறங்கி அடிப்பதுதான் ஓ.பி.எஸ்ஸின் சக்சஸ் பார்முலா! வேட்டி, சட்டை, விபூதி, நெற்றியில் தீற்றலாகக் குங்குமம், புன்னகைபூத்த முகம்... தொகுதி முழுக்கச் சுற்றி வந்ததில் கிடைத்த வரவேற்பில் மலர்ந்து சிரித்துப் பேசுகிறார்.

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

“அம்மா ஆட்சியில் மக்கள் நல்லாருந்தாங்க. எதுவும் கெட்டதாக இருந்தால் மக்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் ஏதாவது மாற்றம் நடந்திருக்கணுமே. அப்படி ஒண்ணுமே நடக்கலை. நல்லது கெட்டதைப் பகிர்ந்துக்க, பிரச்னைகளைப் பேசித் தீர்க்க இந்த அரசு சௌகரியமாக இருக்கும்னு நினைக்கிற மாதிரி ஒரு நம்பிக்கையை அம்மா உருவாக்கினாங்க. அப்புறம் அவங்களுக்குப் பின்னாடி ஒரு சீரான ஆட்சியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கோம். அதுக்கு முன்னாடி ஒரு குடும்ப அரசியலைப் பார்த்துட்டோம். தட்டிக்கேட்டும் தடுத்துக் கேட்டும் ஒன்றும் செய்ய முடியாமல், மக்கள் சக்தி என்னன்னு அம்மா புரிய வச்சாங்க. ஒன்று தெளிவாப் புரிஞ்சுக்கங்க... நாங்க பண்ண ஆசைப்படறது மக்களுக்கான அரசியல்; குடும்ப அரசியல் அல்ல. இனிமேலும் என்ன செய்யணும்னு மக்கள் சொல்லட்டும். எப்படிச் செய்யலாம்னு நாம் பேசுவோம்” - நிதானமாகத் தொடங்குகிறார் துணை முதல்வர். எளிமையாக, தெளிவாக ஆங்காங்கே கோபம் கொப்பளிக்கிற விறுவிறு சுறுசுறு உரையாடல் இது.

“தி.மு.க ஆட்சியில்தான் பத்து வருஷத்திற்கு முன்னாடி தமிழகம் இருந்தது. என்ன நடந்தது? ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்து, நிலப்பறிப்புன்னு அராஜக ஆட்சி நடந்தது. இன்னும் குடும்பத்தை விட்டுவிட்டு கட்சித் தலைமை வெளியே வர மாட்டேங்குது. கை தட்டுறதுக்கும், கொடிபிடிக்குறதுக்கும், போஸ்டர் ஒட்டுறதுக்கும்தான் அங்கே தொண்டன் பயன்படுறான். உங்களுக்கு நல்லது நடக்கணும்னா எது நல்லதுன்னு முதலில் முடிவு பண்ணுங்க. அப்படிப் பார்த்தால் மறுபடியும் அ.தி.மு.க அரசை மக்கள் கொண்டு வந்து நிறுத்துவாங்க” என்றவரிடம், அடுத்தடுத்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

``தொடர்ச்சியாக மக்களைச் சந்திக்கிறீங்க... எப்படி இருக்கு ரெஸ்பான்ஸ்?’’

“வர்ற தேர்தல் வரலாற்றில் நிக்கும் பாருங்க. கட்சி பலம், கூட்டல் கழித்தல், இந்தத் தேர்தல் கணிப்பு எல்லாம் எதுவும் இந்தத் தடவை செல்லாது. நினைச்சதுக்கும் மேலே மக்கள் அன்பா இருக்காங்க. நான் பேசுவதை ஆர்வத்தோடு கேட்கிறாங்க. ஆதரவு தர்றோம்னு உறுதி சொல்லி அனுப்புறாங்க. பார்த்துப் பார்த்துத் தேர்தல் அறிக்கை தயாரிச்சிருக்கோம். தி.மு.க மாதிரி இரண்டு ஏக்கர் நிலம் தர்றோம்னு காமெடி பண்ணினது மாதிரி இல்லாமல், தீர ஆராய்ந்து அறிந்து திட்டங்களை வகுத்திருக்கோம். மக்களில் ஒருத்தரா அவங்க மனசறிஞ்சு பேசுறேன்... அ.தி.மு.க அரசு சொன்னது எல்லாத்தையும் செய்திருக்கு. இங்கே தொண்டர்களாக வந்தவங்கதான் பதவியில் உட்கார்ந்திருக்கிறோம். உழைச்சாதான் தெரியும் வலி. உழைச்சு வந்ததால் மக்களின் கஷ்டம் புரியும். நல்லதை எதிர்பார்க்கிற மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கோம். வீட்டுப் பெண்களுக்கு 1,500 ரூபாய், கேஸ் சிலிண்டர், விலையில்லா வாஷிங் மெஷின்னு சரியாக வந்து சேரும். தன்னோட குடும்பத்திற்காகவே மட்டும் உழைக்கிற கட்சிக்கு மறுபடியும் டாட்டா சொல்ற நேரம் வந்தாச்சு. மறுபடியும் தவிர்க்க முடியாத கட்சியாக அ.தி.மு.க உருவெடுக்கும்.”

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

``தி.மு.க-வுக்குத்தான் வாய்ப்புன்னு கருத்துக்கணிப்புகள் சொல்கின்றனவே?’’

“ஏங்க, மக்கள் மனதைக் கணிக்க முடியுமா? நூறு விதமா கருத்துக்கணிப்புகள் வருது. அதையெல்லாம் எப்படிக் கணக்கில் சேர்க்கிறது? இந்த விஞ்ஞான யுகத்தில் எப்படி எப்படியோ கணக்கு சொல்றாங்க. தி.மு.க ஆட்சியில் என்னென்ன அட்டூழியம் நடந்ததுன்னு மக்கள் தெரிஞ்சிருக்காங்க. நான் ஜனங்ககிட்ட யதார்த்தமா பேசிக்கிட்டே இருக்கேன். அவங்க நாடித்துடிப்பு தெரியுது. இத்தனை நாள் அனுபவத்தில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும், ஓட்டு போடுற கூட்டத்தையும் எனக்குத் தெரியும். அது அம்மாகூடவே இருந்து கற்ற அரசியல் பாடம். குடும்ப அரசியலை மக்கள் பார்த்துப் பார்த்து நொந்து தி.மு.க-விற்கு பத்து வருஷத்துக்கு முன்னாடியே ஃபுல் ஸ்டாப் வச்சுட்டாங்க. மக்கள் பத்து வருஷம் காட்டின அன்புக்கும், இன்னும் ஆதரிக்கப் போவதற்கும் சேவை செஞ்சு நன்றிக்கடனைத் திருப்பித் தரணும். அதற்கான வாய்ப்பாகத்தான் அடுத்த அஞ்சு வருஷத்தையும் கேட்கிறோம். இனிமேலும் வீடுதேடி நாங்கள் சொன்னது எல்லாம் வரணும்; வரும். இதுதான் எங்க முதல் வேலை!”

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

``பா.ஜ.க உங்களுக்குத் துணையா, சுமையா?’’

“இது தேர்தல் கூட்டணி. கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும் ஓட்டுகள் சிதறாமல் இருக்க ஒரு ஏற்பாடு. எங்களுக்குன்னு ஒரு கொள்கை நெடுங்காலமாய் இருக்கு. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதான்னு ஒரு தொடர்ச்சி இருக்கு. இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வச்சவங்கதான். இது ஒண்ணும் பஞ்சமாபாதகம் இல்லை. தேர்தல் முடிந்ததும் அவங்கவங்க கொள்கை வழியில் நடக்கப்போறோம், அப்படித்தான். நாங்க நாகரிகமான அரசியல் பண்ண ஆசைப்படுகிறோம். என்னை விமர்சனம் பண்றவங்களுக்குக்கூட நான் பதில் சொல்றதில்லை. கட்சியை விமர்சிக்கற வங்களுக்கு மட்டுமே என் பதில் அமையுது. ஏன்னா, வாரிசுதாரர்களாக இங்கே நாங்கள் வரலை. பதவியில் இருக்கிற அத்தனை பேரும் கட்சியில் உழைச்சு முன்னேறியவங்கதான்.”

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

``ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மனப்பூர்வமாக இணைந்துதான் செயல்படுகிறார்களா?’’

“என்னங்க சந்தேகம்! எல்லோருக்கும் அடிப்படை இந்தக் கட்சிதானேங்க! அவர் ஒரு பக்கம் நின்னு வந்தார்னா, நான் மறுபக்கம் இருந்து கட்சியில் உழைத்து வந்திருக்கேன். எளிமை, ஈரமான மனசு, நல்லது கெட்டது என முந்திப் போய் நின்னு வேலை பார்க்கிற வேகம், எதற்கும் கலங்காத துணிச்சல்னு நாங்க இரண்டு பேருமே அம்மாகிட்ட இருந்துதானே கத்துக்கிட்டு வந்தோம். முதல்வர் பழனிசாமி நல்லபடியாகச் செயல்படுகிறார். அவருக்குப் பக்கபலமா நான் துணையா இருந்து செயல்படுகிறேன் என்பதுதானே உண்மை.”

``அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு சாத்தியப்படுமா?’’

“அதற்கான முன்முனைப்பாக நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கு. அது கட்சியில் எல்லோரும் உட்கார்ந்து கூடிப்பேசி நடத்துகிற செயல்பாடு. இதில் நான் மட்டும் எதையும் சொல்லிட முடியாது. இயக்கம் நான் மட்டுமேயில்லை. கடைசித் தொண்டன் வரைக்கும் இணைஞ்சு சேர்ந்து வருவது. ஒண்ணு சொல்றேன், எந்த சக்தியும் எங்களை திசை திருப்பிவிட முடியாது. எங்கள் தொண்டர்களின் நடுவே யாரும் விளையாட முடியாது.”

``அ.தி.மு.க-வை பி.ஜே.பி தொடர்ந்து கட்டுப்படுத்து கிறது எனக் குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையென்ன?’’

“நான் பதில் சொல்ல வேண்டிய கேள்விதான் இது. சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டித்தான் இருக்கு. புரட்சித்தலைவர் ஆரம்பிச்ச அ.தி.மு.க-வுக்குத் தனிப்பட்ட கொள்கை இருக்கு. அப்புறம் புரட்சித்தலைவி வந்து அதை வழிநடத்தினாங்க. அவர்கள் இருவருமே சேர்ந்து காட்டிய வழியில் நாங்கள் போய்க்கிட்டிருக்கோம். அம்மாவின் ஆசையே எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதுதான். நாங்க ஜாதி மதம் எதையும் பார்க்கிறதில்லை. இதுகூட மாண்புமிகு அம்மா வழிதான். ஒரு கட்சி மாதிரி இன்னொரு கட்சி எப்படி இருக்கும்? அம்மாவின் ஆட்சி அமைந்த தனித்தன்மையில்தான் நாங்க தொடர்ந்து போறோம். இதில் அவங்க எப்படி எங்களைக் கட்டுப்படுத்த முடியும்? உரிமைகளைக் கேட்டுப்பெறுகிறோம். தொடர்ந்து எங்கள் உரிமைக்காகப் போராடிக்கிட்டே இருக்கோம். அதில் எந்த சமரசமும் இல்லை.”

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

``கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பெரும்பாலான மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டீர்கள் என்ற விமர்சனத்திற்கு என்ன பதில்?’’

“தஞ்சையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியது. நாங்கள் அதை `பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்துவிட்டோம். இது என்ன, உரிமையை விட்டுக்கொடுப்பதன் அடையாளமா? தமிழ்நாட்டிற்கான உரிமைகள், செயல்பாடுகள், வேண்டியவற்றைக் கேட்டுப் பெறுவது என்பதில் நாங்கள் எப்பவும் முன்முனைப்போடுதான் செயல்படுகிறோம். நமக்கான உரிமைகளைப் பெறாமல் எப்படி நாங்கள் அம்மாவின் ஆட்சியைத் தொடர்கிறோம் என்று சொல்லிக்கொள்ள முடியும்? இப்படி ஒவ்வொண்ணா மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க நிறைய இருக்கு. மக்களுக்கான நலனை நோக்கிச் செல்வதிலிருந்து எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆதரிக்கிற மக்களின் விருப்பம்தான் எங்கள் விருப்பமும்.”

``கூட்டணியில் இருந்தாலும் ‘நீட்’டில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, ஏழு தமிழர் விடுதலை போன்ற உங்கள் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்கவில்லையே?’’

“ஐயா, ‘நீட்’டைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. அப்போது கூட்டணியாக இருந்தது தி.மு.க. இப்பவும் நாங்க ‘நீட்’ விலக்குக்கான போராட்டத்தைத் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கோம். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கிட்டே இருக்கு. இப்ப அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு கொடுத்தோம். அதனால் 435 மாணவ மாணவிகள் வாய்ப்பு பெற்றார்கள். வரும் ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கும்போது இன்னும் 600 இடங்களுக்கு மேலே அரசுப்பள்ளி மாணவர் களுக்கு இடங்கள் கிடைக்கும். `நீட்’டிலிருந்து விலக்கு பெறவோ, அல்லது, முழுமையாக நீக்கிவிடவோ எங்களாலான முயற்சியை விட்டுக்கொடுக்கவே இல்லை.

அம்மாதான் சிறையில் இருக்கும் எழுவரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார். அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து வாடியது போதுமென மனிதாபிமான ரீதியில் அம்மா முயற்சியை முன்வைத்தார்கள். இப்போது குடியரசுத் தலைவரின் கையில் இருக்கு என்கிறார்கள். எப்படியாவது அந்த ஏழு தமிழர்களுக்கு விடுதலை வரட்டும்.”

``சசிகலா அரசியலை விட்டு விலகியதாக அறிவித்த போது உங்கள் மனநிலை என்ன?’’

“இது எல்லாமே சசிகலா அவர்களின் முடிவு. அவர்களின் மனசாட்சியின் அடிப்படையில் அவர் மனதில் எழுந்த முடிவாக இருக்க வேண்டும். இதற்கான காரண காரியங்கள் அவர்களுக்குத்தான் தெரியும். இதில் நான் சொல்ல எதுவும் இல்லை.”

``தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க சசிகலா கைகளுக்குச் சென்றுவிடும் என்கிறார்களே...’’

“தவறான கருத்து. அ.தி.மு.க தொண்டர்களாக இருந்து இப்போது நிர்வாகிகளாக மாறியிருப்பவர்களின் மூலம்தான் அ.தி.மு.க இயங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது நானும் எடப்பாடி பழனிசாமியுமாக இணைந்திருந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறோம். எங்கள் காலத்திற்குப் பிறகு தொண்டர்கள் தங்கள் உழைப்பினால் முன்வந்து கழகத்தை வழி நடத்த வாய்ப்பு இருக்கு. அதனால் அ.தி.மு.க தனிநபரின் கையிலோ, மீண்டும் ஒரு குடும்பத்தின் கையிலோ நிச்சயம் போய்விடாது.”

“அ.தி.மு.க மீண்டும் ஒரு குடும்பத்தின் கையில் நிச்சயம் போய்விடாது!”

``எப்போதும் அமைதியைக் கைக்கொள்கிறீர்கள்.அதன் ரகசியம் என்ன?’’

“அது இறைவனின் அருளில் வந்தது. எதையும் உள்வாங்கி யோசிப்பேன். சிறுவயதிலிருந்தே அப்படித்தான்; அரசியலுக்கு வந்தபிறகான மாற்றமல்ல. அம்மா அவர்களும் ‘‘உங்களின் இந்த அமைதி ரொம்பவும் பிடிக்கும்’ என ஒரு முறை சொல்லியிருக்கிறார். அம்மாவின் மேல் நிறைய வழக்குகளைப் போட்டு சிரமப்படுத்தினார்கள். அவர்கள் பட்ட கஷ்டமெல்லாம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அவர்களே நிதானமாகச் செயல்பட்டபோது என்னோட அமைதியெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.”

``சதா பரபரப்பு, பிடித்து வைத்திருக்கிற வேலைகள், அரசியல் தவிர பொழுதுபோக்கு என்ன?’’

“அப்படி ஒண்ணு தனியா இல்லையே. புரட்சித்தலைவர் இருந்த வரைக்கும் அவரோட படங்களை விரும்பிப் பார்ப்பேன். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’தான் கடைசியாகப் பார்த்த படம்.”

``ஸ்டாலினிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?’’

“கலைஞருக்குப் பிறகு தி.மு.க-வை ஒரு உறுதிப்பாட்டோடு நடத்திக்கொண்டிருக்கிறார். அது ஒரு சிறப்புத் தகுதிதான். அது பிடிக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism