Published:Updated:

தேனி: திமுக-வுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் - கட்சியிலிருந்து நீக்கிய தலைமை!

திமுக அய்யம்மாள்

வெற்றி பெற்ற அய்யம்மாளுக்கு ஆதரவாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கட்சித் தலைமைக்கு சென்றவுடன்...

தேனி: திமுக-வுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் - கட்சியிலிருந்து நீக்கிய தலைமை!

வெற்றி பெற்ற அய்யம்மாளுக்கு ஆதரவாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கட்சித் தலைமைக்கு சென்றவுடன்...

Published:Updated:
திமுக அய்யம்மாள்

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 20 வார்டுகளில் வென்றன. அ.தி.மு.க 6 வார்டுகளிலும், பா.ஜ.க ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தன. இதில் 25-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற தி.மு.க-வைச் சேர்ந்த அய்யம்மாள் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

சின்னமனூர் நகராட்சி
சின்னமனூர் நகராட்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க பெரும்பான்மை பெற்றிருந்ததால் கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், சின்னமனூர் நகராட்சியில் கட்சித் தலைமை அறிவிப்பை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த 19-வது வார்டு கவுன்சிலர் செண்பகம் என்பவர் நகராட்சித் தலைவர் பதவிக்கு கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட அய்யம்மாளுக்கு எதிராக போட்டியிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண் கவுன்சிலர்கள்
பெண் கவுன்சிலர்கள்

முடிவில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட 25-வது வார்டு கவுன்சிலர் அய்யம்மாள் மொத்தமுள்ள 27 ஓட்டுகளில் 16 ஓட்டுகள் பெற்று நகராட்சித் தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செண்பகம் 11 ஓட்டுகளை பெற்று தோல்வியைத் தழுவினார்.

இதில் வெற்றி பெற்ற அய்யம்மாளுக்கு ஆதரவாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் 6 பேர் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கட்சித் தலைமைக்கு சென்றவுடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்களித்த, 10-வது வார்டு கவுன்சிலர் ஜெகதீசன், 13-வது கவுன்சிலர் உமாராணி, 14-வது வார்டு கவுன்சிலர் கவிதாராணி, 18-வது வார்டு கவுன்சிலர் பிச்சை கணபதி, 22-வது வார்டு கவுன்சிலர் செல்வி, 26-வது வார்டு கவுன்சிலர் தவசி ஆகியோரையும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த சின்னமனூர் நகரச் செயலாளர் ராஜேந்திரனையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் போலீஸார்
பாதுகாப்புப் பணியில் போலீஸார்

பி.சி.பட்டி பேரூராட்சியில் அ.தி.மு.க ஆதரவுடன் அ.ம.மு.க வெற்றி!

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க 7 வார்டுகளிலும், அ.ம.மு.க 6 வார்டுகளிலும், அ.தி.மு.க 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், தி.மு.க சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 15-வது வார்டு உறுப்பினர் பவானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.ம.மு.க சார்பில் 11-வது வார்டு உறுப்பினர் மிதுன்சக்கரவர்த்தி போட்டியிட்டார்.

இதனால் தி.மு.க, அ.ம.மு.க இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், இன்று நடந்த தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில், அ.ம.மு.க வேட்பாளர் மிதுன்சக்கரவர்த்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism