Published:Updated:

ஹெல்மெட் அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள்! - காரணம் தெரியுமா?!

ஹெல்மெட் அணிந்துவந்த அதிமுக கவுன்சிலர்கள்

திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், தங்கள் வேட்பாளர்களை யாரும் விலைபேசிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை வெளியூரில் பத்திரமாகத் தங்கவைத்திருந்தனர்.

ஹெல்மெட் அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள்! - காரணம் தெரியுமா?!

திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், தங்கள் வேட்பாளர்களை யாரும் விலைபேசிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை வெளியூரில் பத்திரமாகத் தங்கவைத்திருந்தனர்.

Published:Updated:
ஹெல்மெட் அணிந்துவந்த அதிமுக கவுன்சிலர்கள்

நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அவற்றில் போட்டியிட்ட திமுக-வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து 14 இடங்களில் போட்டி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். தி.மு.க-வின் பேரூர் செயலாளர் அளித்த பரிந்துரை அடிப்படையில், மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து கட்சியினரே போட்டியிட்டதால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.

திசையன்விளை பேரூராட்சி அலுவலகம்
திசையன்விளை பேரூராட்சி அலுவலகம்

அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே தேர்தல் முடிவு தி.மு.க-வுக்கு பெரும் அடியை கொடுத்தது. போட்டி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டதால் தி.மு.க-வால் இரு இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இரு இடங்கள் மட்டுமே கிடைத்தன.அ.தி.மு.க ஒன்பது வார்டுகளிலும், பாரதிய ஜனதா ஒரு வார்டிலும் வென்றன. சுயேச்சைகள் மூன்று வார்டுகளிலும் தே.மு.தி.க வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு கவுன்சிலர்களை மட்டுமே வைத்துள்ள தி.மு.க-வினர் பேரூராட்சியைக் கைப்பற்ற தீவிரம்காட்டினார்கள். அதனால் கவுன்சிலர்களுக்குப் பணம் மற்றும் பரிசுகளைக் கொடுப்பதாக ஆசைவார்த்தைகளைச் சொல்லியுள்ளனர். அதனால் அ.தி.மு.க நிர்வாகிகளான நாராயண பெருமாள், ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அ.தி.மு.க நிர்வாகிகளுடன் வந்த கவுன்சிலர்கள்
அ.தி.மு.க நிர்வாகிகளுடன் வந்த கவுன்சிலர்கள்

பத்திரமாக வெளியூரில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக தரப்பு கவுன்சிலர்களைப் பிடித்து, அவர்களின் ஆதரவைப் பெற தி.மு.க-வினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டும் எதுவும் நடக்கவில்லை. அதனால் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசிய தி.மு.க-வினர் சிலர் கோபமடைந்து மிரட்டல்விடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் தங்களுக்கு வாக்களிக்க மறுத்தால், அடித்து மண்டையை உடைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்களுக்கு மிரட்டல் விடுத்த தி.மு.க-வினரைக் கண்டிக்கும் வகையில் இன்று அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் ஹெல்மெட் அணிந்தபடி பேரூராட்சி அலுவலகம் வந்தார்கள். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள்
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள்

அதன் பின்னர் அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். அதன் பின்னர் அனைவரும் மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளின் ஏற்பாட்டில் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனாலும் கடைசி நேரத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்கிற எதிர்பார்ப்பில் தி.மு.க தரப்பினர் இருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism