Published:Updated:

``தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும்!’’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

``தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும்!’’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,``ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல... அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது’’ என்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையானது.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

இதைத் தொடர்ந்து , அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் கறுப்பு தமிழன்னையின் ஓவியம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், தமிழணங்கு, "இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது. இது இந்தியா முழுவதும் பேசுபொருளானது.

இந்த நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகுக்கே தமிழ்தான் முதன்மை மொழி. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடரும். ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதுபோல் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism