Published:Updated:

ஈரோடு இடைத்தேர்தல்: "திமுக-வின் எதிர்மறை ஓட்டுகள், எங்களுக்குச் சாதகமாக அமையும்”- ஜி.கே.வாசன்

ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்

``எங்களின் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க., த.மா.கா., பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது." - ஜி.கே.வாசன்

ஈரோடு இடைத்தேர்தல்: "திமுக-வின் எதிர்மறை ஓட்டுகள், எங்களுக்குச் சாதகமாக அமையும்”- ஜி.கே.வாசன்

``எங்களின் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க., த.மா.கா., பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது." - ஜி.கே.வாசன்

Published:Updated:
ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா, கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்
ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்

இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், ``அ.தி.மு.க-வோடு த.மா.கா சுமுகமான உறவு வைத்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் என்பது முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளரை நேரடியாக அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்.

தமிழக அரசியல் சூழல், மத்தியில் இருக்கும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினோம். நேற்று தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே நான் அவருடன் தொலைபேசியில் பேசினேன். இன்றைக்கு அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். எங்களின் இலக்கு, கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க., த.மா.கா, பா.ஜ.க வெற்றிபெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. அதற்கேற்றவாறு மாநிலத்தில் மக்கள் மனநிலையைப் பிரதிபலிக்காத ஆட்சியாளர்களாக தி.மு.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்
ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இன்று தி.மு.க செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்மறை வாக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எனவே, இதெல்லாம் எங்கள் கூட்டணிக்குத் தேர்தலில் சாதகமாக அமையும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இதைவைத்து ஒத்த கருத்தோடு ஓரிரு நாள்களில் அதிகாரபூர்வமாக எங்களுடைய கூட்டணிக் கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றிபெறுவோம். கடந்த முறை நாங்கள்தான் போட்டியிட்டோம். இந்தத் தேர்தலில் எங்களுடைய வெற்றி, வருங்காலத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும்.

இதனடிப்படையில் வியூகங்கள் செய்து நிச்சயமாக வெற்றிக்கு வழிவகுக்கக்கூடிய நிலையைக் கூட்டணித் தலைவர்கள் ஏற்படுத்துவோம். அது எங்களுடைய கடமையாக இருக்கிறது. த.மா.கா, கூட்டணியின் மிக முக்கியமான கட்சி. எங்களுடைய முடிவு வெற்றிக்கான ஒத்த கருத்துடைய முடிவு. அந்த முடிவையே நாங்கள் ஒருசேர எடுப்போம். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் குறைந்த மாதங்களிலேயே அதிக அளவில் மக்களின் அவநம்பிக்கையைப் பெற்ற ஆட்சியாளர்களாக இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக இந்த ஆட்சிக்கு எதிர்மறை ஒட்டு நாளுக்கு நாள், மணிக்கு மணி கூடிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மைநிலை" என்று கூறினார்.

ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்
ஜெயக்குமார் - ஜி.கே.வாசன்

அவரைத்தொடர்ந்து தேர்தலில் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ``கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் வேட்பாளரை முடிவு செய்த பிறகு அடுத்ததாக இந்தக் கேள்விக்கு வர முடியும்'' என்றார்.