Published:Updated:

"நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால், திமுக கோட்டையைவிட்டே சென்றுவிடும்!"- ஜெயக்குமார்

ஸ்டாலின் - ஜெயக்குமார்

``2024-ல் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால் அவர்கள் கோட்டையைவிட்டு போய்விடுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்." - ஜெயக்குமார்

"நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால், திமுக கோட்டையைவிட்டே சென்றுவிடும்!"- ஜெயக்குமார்

``2024-ல் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால் அவர்கள் கோட்டையைவிட்டு போய்விடுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்." - ஜெயக்குமார்

Published:Updated:
ஸ்டாலின் - ஜெயக்குமார்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``2024-ல் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வந்தால் அவர்கள் கோட்டையைவிட்டு போய்விடுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதேபோல அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பிரச்னை இல்லை. ஓ.பி.எஸ், சசிகலா, தினகரனைப் பற்றி எந்தவொரு விவாதமும் இங்கு செய்வது கிடையாது. எங்களுடைய ஒரே நோக்கம் 2024-ல் தி.மு.க-வை வீழ்த்துவது. பாண்டிச்சேரி உட்பட 40 சீட்டுகள் பிடிக்கணும். அந்த இலக்கை நிர்ணயிக்கிற வகையில்தான் இந்தக் கூட்டம். அதனால அவர்களைப்பற்றி ஆலோசித்து எங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பல. நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான்.

ஸ்டாலின் - ஜெயக்குமார்
ஸ்டாலின் - ஜெயக்குமார்

பொதுவாக இந்த ஆட்சியில் ஆதி திராவிடர் மக்கள், பழங்குடியினர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அத்தனை பேருக்கும் இன்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதைவிட மோசமான ஆட்சி உலகத்திலேயே இருக்க முடியாது. 920 கோடி ரூபாயை செலவு பண்ணாமல் இன்றைக்கு திருப்பி அனுப்புகின்ற நிலைமையை விடியாத அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் இதை வட ஆதி திராவிடர் மக்களுக்குத் துரோகம் செய்த கட்சி உலகத்திலே இருக்க முடியாது" என்று கூறினார்.

அ.தி.மு.க-வின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.