Published:Updated:

``ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகனா... அவர் போராட்டக்காரர்கள்மீது தடியடி நடத்தியவர்!" - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

``மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவைப்போல தைரியம் இல்லை.'' - ஜெயக்குமார்

Published:Updated:

``ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகனா... அவர் போராட்டக்காரர்கள்மீது தடியடி நடத்தியவர்!" - ஜெயக்குமார்

``மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவைப்போல தைரியம் இல்லை.'' - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

``ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகானா... அவர்தான் போராட்டக்காரர்களை தடியடி நடத்திக் காயப்படுத்தியவர்’’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "ஜல்லிக்கட்டு, தமிழர்களின் உணர்வுபூர்வமான விளையாட்டு. இதைத் தடைசெய்தபோது, தமிழர்கள் ஒன்று கூடி மெரினாவை ஸ்தம்பிக்க வைத்தார்கள்.

ஜல்லிக்கட்டுப் போட்டி
ஜல்லிக்கட்டுப் போட்டி

அதன் பிறகு தமிழர்களின் உணர்வுபூர்வ விளையாட்டுக்கு தடைவிதிக்க முடியாது என்பதால், சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது. குடியரசு தினத்தில், கோட்டையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஓபிஎஸ்-ஸின் கனவு. ஆனால், அதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் தடையாக இருந்தது.

அதன் காரணமாகத்தான் அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் காவல்துறையை ஏவி, தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றார். அப்போது, போராட்டக்காரர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினர் காயமடைந்தனர். மீனவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தடுக்க முயன்ற இவரா ஜல்லிக்கட்டு நாயகன்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசின் முயற்சி, எடப்பாடி அரசின் தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றால் இன்று ஜல்லிக்கட்டு சாத்தியமாகியிருக்கிறது.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

இந்த உண்மையை மறைக்க தனக்குத் தானே விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். கள்ளச்சாராயம், செயின் பறிப்பு, கொலை என சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு அமளிப் பூங்காவாக மாறியிருக்கிறது. அரசின் வரி விதிப்பால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்களின் பார்வையிலிருந்து, அவர்களின் தேவையறிந்து திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பேனா சின்னம் என்ற பெயரில் வீணாகக் கடலில் கோடிகளைக் கொட்டவில்லை.

திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குத் தாலி, பணம் வழங்கிய திட்டத்தை நிறுத்தியிருக்கிறார்கள். மாணவர்களுக்கு லேப்டாப் கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை. அம்மா உணவகத்தைத் தற்போது சரியாக நடத்தாமல், அதன் மூடுவிழாவுக்குத் தயாராக்கிவிட்டார்கள். குறைந்தபட்சம் அளித்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. அரசுக்கு எதிராக செவிலியர்கள் போராடிவருகிறார்கள். பழைய ஓவ்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

கள்ளச்சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது என்றால், மின்சார டிரான்ஸ்ஃபார்ம் மூலமோ அல்லது யானை தாக்கியோ மரணிப்பவர்களுக்கும் ரூ.10 லட்சம் வழங்குங்கள். அதுவும் அரசின் அஜாக்கிரதையால் நடக்கும் மரணம்தானே... இந்த ரூ.10 லட்சம் விவகாரமெல்லாம் தன்னுடைய திறனில்லாமையை மூடிமறைக்கும் திட்டம், அவ்வளவுதான். ஆளுங்கட்சி கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா. அவருக்கு செஞ்ஜி மஸ்தான் கேக் ஊட்டுகிறார். இவர்கள்மீது எப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்... அதனால்தான் இந்த மரணங்கள் நடந்திருக்கின்றன.

தற்போது கைதுசெய்திருப்பதுபோல, ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்து கட்சியைவிட்டு நீக்கியிருந்தால், இத்தனை மரணங்கள் நடந்திருக்காது. கள்ளச்சாராய மரண வழக்குகளை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி-யிடம் கொடுத்ததற்கு பதிலாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ-யிடம் கொடுங்கள். அப்போதுதான் உண்மை வெளியே வரும். கட்சிக்காரர்கள் தவறு செய்தபோதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவைப்போல தைரியம் இல்லை" எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.