Published:Updated:

``தேனி எம்.பி ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிட்டு ஜெயித்தால்..!" - ஆர்.பி.உதயகுமார் சவால்

ஆர்.பி.உதயகுமார்

``ஏற்கெனவே தர்மயுத்தம் நடத்தியவர், தற்போது துரோக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் சிரிப்பு மர்மச் சிரிப்பாக இருக்கிறது. துரோகச் சிரிப்பாக இருக்கிறது." - ஆர்.பி.உதயகுமார்

``தேனி எம்.பி ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிட்டு ஜெயித்தால்..!" - ஆர்.பி.உதயகுமார் சவால்

``ஏற்கெனவே தர்மயுத்தம் நடத்தியவர், தற்போது துரோக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் சிரிப்பு மர்மச் சிரிப்பாக இருக்கிறது. துரோகச் சிரிப்பாக இருக்கிறது." - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் வகித்துவந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. அ​வர் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ்-ஸின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நடக்கும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் மாஸ் காட்ட வேண்டும் என்ற நோக்கில் கூட்டத்தைத் திரட்டியிருந்தார். ஆனால் காலை 10 மணிக்கு தொடங்கவேண்டிய ஆர்ப்பாட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் தேனி பங்களாமேட்டில் திரண்டிருந்த கூட்டம் பெருமளவில் கலைந்து செல்லத் தொடங்கியது.

மதுரை ரோட்டில் கலைந்து செல்லும் கூட்டம்
மதுரை ரோட்டில் கலைந்து செல்லும் கூட்டம்

அரண்மனைப்புதூர் விலக்கிலிருந்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் நடந்தே வந்த ஆர்.பி.உதயகுமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ``காலை​ 10 மணிக்கு தொடங்கவேண்டிய ஆர்ப்பாட்டம் போலீஸாரின் கெடுபிடியால் தாமதமாகிவிட்டது. தேனி நகரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அந்தக் கூட்டம் கலையட்டும். அதன் பிறகு செல்லலாம் என போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து வேறு தேனிக்குள் எப்படி வருகிறார்கள் எனப் பார்க்கலாம் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

​இங்கு கூடியிருக்கிற கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஸ்டாலின் உத்தரவிட்டாரா அல்லது ஓ.பி.எஸ் தூண்டுதலா எனத் தெரியவில்லை.​ ​எதிர்க்கட்சியை முடக்கும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாக இருப்பவர்களைக் கண்டிக்கிறேன்.​​ ​ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடுபவர்கள் தேனி மாவட்ட மக்கள்.​ ​அப்படி விஸ்வாசமான மக்கள் உள்ள தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக்கிறது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஏற்கெனவே தர்மயுத்தம் நடத்தியவர், தற்போது துரோக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் சிரிப்பு மர்மச் சிரிப்பாக இருக்கிறது. துரோகச் சிரிப்பாக இருக்கிறது. அவரின் சிரிப்புக்கு என்ன அர்த்தம் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பை நம்பியதால்தான் துரோகத்துக்கு ஆளாகியிருக்கிறோம். அவர் பதவிக்கு ஆபத்து என்றால் தர்மயுத்தம் நடத்துவார், தொண்டர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் கண்டுகொள்ள மாட்டார். அ.தி.மு.க-வினர்-மீது பொய்வழக்கு போடும் தி.மு.க-வைப் பார்த்து கும்பிடுகிறார். அவர் மகனோ முதல்வரைச் சந்தித்து தி.மு.க ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்கிறார். தி.மு.க-வை எதிர்த்துதான் அ.தி.மு.க தொடங்கப்பட்டது. ஆனால் அவர்களின் ஆட்சியைப் பாராட்டுபவர்களுக்கு இங்கு என்ன வேலை... அப்பாவுடன் சேர்ந்து போய் அங்கேயே சேர்ந்துவிடலாமே!

​ஒன்​றே ஒன்று கண்ணே கண்ணு என நமக்குக் கிடைத்த அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிக்கு ரவீந்திரநாத் காரணம் இல்லை.‌​ ​இங்குள்ள ஒவ்வொரு தொண்டனின் உழைப்பு. ரவீந்திரநாத்துக்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறட்டும்.​ நான் அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன். ​

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

​டெல்லியில் ஜனாதிபதி பிரிவு உபசார விழாவுக்கு அ.தி.மு.க-வின் முகமாக அழைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.​ ​எதிரிகள், துரோகிகளை வீழ்த்துவதற்கு தேனியில் கூட்டம் தன்னெழுச்சியாகக் கூடியிருக்கிறது.‌ மக்கள் ஆதரவு இல்லாததால் தேனியில் உள்ள வீட்டை ஓ.பி‌.எஸ் காலி செய்துவிட்டு மாலத்தீவுக்கு இடம் பெயர்ந்துவிடுவார்.

​கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க 99 சதவிகிதம் பேர் ஆதரவளித்தனர்.‌ ஆனால் ஓ.பி.எஸ் அதற்கு மறுப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டுவந்தார்.​ ​தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகளை நீக்கிவருவதைப் பார்த்தால் இறுதியில் ஓ.பி.எஸ் மற்றும் அவருடன் இருக்கும் சில பேர் மட்டுமே எஞ்சியிருப்பர். அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கண்ணில் ரத்தம் வரவைக்கிறது.​ ​உங்கள் வீட்டைச் சூறையாட எவ்வளவு நேரமாகும் எனத் தெரியவில்லை.

கூட்டம்
கூட்டம்

​அ.தி.மு.க அலுவலகம் சூறையாடப்பட்ட பிறகு உடனடியாக வருவாய்த்துறையினர் வந்து சீல் வைத்தது எப்படி... ​நான்​ 10​ ஆண்டுகளாக வருவாய்த்துறை அமைச்சராக ​இருந்திருக்கிறேன். அப்போது அதிகாரிகள் அவ்வளவு விரைவில் செயல்பட்டதில்லை.​ தகவல் கொடுத்தால் எப்படியும் வருவதற்கு மூன்று மணி நேரமாவது ஆகும். ஆனால் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்க அவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டனர்.​

​ரௌடிகளுடன் அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வந்தவர்கள் கொள்ளையர்கள். அங்கிருந்த பொருள்கள், ஆவணங்களைத் திருடிச் சென்றிருக்கின்றனர். தி.மு.க பார்த்து இருக்க வேண்டும். அறிவாலயத்திலும் திருட வருவார்கள்.​ அது தொடர்பாகவும் போலீஸாரிடம் புகார் அளிக்கவிருக்கிறோம்.​

கலைந்த கூட்டம்
கலைந்த கூட்டம்

​முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பின்போது 11 நாள்கள் மௌன விரதம் இருந்தார். அதனால் 5 சதவிகிதம் வாக்கு குறைந்தது.​ முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கவே தயங்கினார். அவருடைய போடி தொகுதியைத் தவிர, பக்கத்துத் தொகுதிக்குக்கூட சென்று பிரசாரம் செய்யவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

​சேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள் எனக் கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ந்திருக்கின்றன. ஆனால் மூன்று முறை முதலமைச்சர், ஒரு முறை துணை முதலமைச்சராக இருந்த தேனியில் ஒரு மேம்பாலம்கூட கட்டவில்லை. வீடு மேல் வீடு... காடு மேல் காடு​, தீவு​ மேல் தீவு என ஓ.பி.எஸ் மட்டும் சொத்து சேர்த்தார்.

கூட்டம்
கூட்டம்

​பொதுக்குழு கூடியபோது தேனி மாவட்டம் முழுவதும் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர். அவர் தேனி வரும்போது இதேபோல அலைகடலெனத் திரண்டு வரவேற்பளிக்கக் காத்திருங்கள்" என்றார்.