Published:Updated:

``நெய்வேலி சுரங்க விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன!" - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

"அண்மையில்கூட, நெய்வேலியில் 300 பொறியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். அதில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவரில்லை." - சி.வி.சண்முகம்

``நெய்வேலி சுரங்க விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன!" - சி.வி.சண்முகம்

"அண்மையில்கூட, நெய்வேலியில் 300 பொறியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். அதில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவரில்லை." - சி.வி.சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "கடலூர் மாவட்டம், நெய்வேலி சுரங்கத்துக்காக நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகமும், மத்திய அரசும், அந்த நிலங்களைப் பெற்றுக்கொடுத்த மாநில அரசும், கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரையில் நிறைவேற்றவில்லை.

நெய்வேலி
நெய்வேலி

நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்படவில்லை. 'அவை வழங்கப்பட வேண்டும்' என கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கான இழப்பீடே இன்னும் முழுவதுமாக வந்து சேரவில்லை. இந்த நிலையில் 3-ம் கட்ட பணியும் தொடங்கவிருக்கிறது. மாநில அரசும், மத்திய அரசும் இந்த மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன... வஞ்சித்துக் கொண்டிருக்கின்றன... சுரண்டிக்கொண்டிருக்கின்றன.

எனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அண்மையில்கூட, அங்கு 300 பொறியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஆனால், இங்குள்ள மாநில அரசோ... `தமிழ்... தமிழ்' என்று சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. 39 எம்.பி-க்களை வைத்திருக்கும் திமுக, நாடாளுமன்றத்தில் இதை வலியுறுத்தி, அந்த உரிமைகளை பெற்றுத் தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

எனவே, மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்பது... இந்த மக்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதுதான். இன்னொரு மோசடியான வேலையை இந்த அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்துகொண்டிருக்கின்றன. கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பதிலாக மாற்று இடம் தருவதாகக் கூறி, நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. அங்கு சென்றால், `இது நீர்ப்பிடிப்பு இடம், தர முடியாது' எனக் கூறி பித்தலாட்ட வேலைகளை இந்த அரசு செய்துகொண்டிருக்கிறது. எனவே, இந்த பித்தலாட்ட வேலைகளை விட்டுவிட்டு, சொன்னதைச் செய்ய வேண்டும். ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால், அந்தக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை. அது உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

இன்று பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் எங்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, நிறைவேற்றுவதற்காக அதிமுக, உடனிருந்து போராடும்" என்றார். "தமிழ்நாட்டிலுள்ள அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்" என கே.என்.நேரு கூறியிருந்ததைப் பற்றிய பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, "முதலமைச்சர் பயந்தால்தான், தலைமைச் செயலர் பயப்படுவார். அதனால்தான் முதலமைச்சர் பம்மி படுத்திருக்கிறார்போல" என்று சாடினார்.

மேலும், "கோவையில் குண்டு வெடித்ததா என்று நாம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஆளுகிற மு.க.ஸ்டாலின் அரசுக்கு நயன்தாரா முறையாகக் குழந்தை பெற்றாரா என்பதில்தான் கவலை" என்றார்.