Published:Updated:

கோவை: `வெளியூர் ஆட்களை இறக்கி அதிமுக கவுன்சிலர்களைத் தாக்குகின்றனர்!' - எஸ்.பி.வேலுமணி காட்டம்

எஸ்.பி.வேலுமணி புகார் ( கே.அருண் )

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது அ.தி.மு.க., தி.மு.க இடையே மோதல் ஏற்பட்டதால், சட்டம், ஒழுங்கு பிரச்னை காரணமாக மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை: `வெளியூர் ஆட்களை இறக்கி அதிமுக கவுன்சிலர்களைத் தாக்குகின்றனர்!' - எஸ்.பி.வேலுமணி காட்டம்

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது அ.தி.மு.க., தி.மு.க இடையே மோதல் ஏற்பட்டதால், சட்டம், ஒழுங்கு பிரச்னை காரணமாக மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
எஸ்.பி.வேலுமணி புகார் ( கே.அருண் )

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க 8 இடங்களிலும், தி.மு.க 7 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மை இருப்பதால் அ.தி.மு.க பேரூராட்சியைக் கைப்பற்றியது. இதற்கிடையே, மறைமுகத் தேர்தலான இன்று அ.தி.மு.க., தி.மு.க இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்னை காரணமாக மறைமுகத் தேர்தலை ஒத்திவைத்தனர். தேர்தல் தள்ளி வைத்ததற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

எஸ்.பி வேலுமணி
எஸ்.பி வேலுமணி
கே.அருண்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி , "கோவையில் மிகப்பெரிய வன்முறையை திமுக நடத்தியுள்ளது. திட்டம்போட்டு முறைகேடு செய்து அதிமுக-வின் வெற்றியைப் பறித்தனர். இவ்வளவு முறைகேடுகளையும் கடந்து, வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இன்று எங்கள் கவுன்சிலர்கள் பதவி ஏற்கப் போகும்போது, வெளியூரிலிருந்து ஆட்களை இறக்கி கத்தி, கம்பு வைத்து தாக்கியுள்ளனர். அதிமுக-வினர் அமைதியாக இருந்தனர். ஆனால், அதிகாரிகள் தேர்தலை ஒத்திவைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.பி வேலுமணி
எஸ்.பி வேலுமணி
கே.அருண்

நீதிமன்றம், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டும் பாதுகாப்பு செய்யவில்லை. எங்களை அடித்துவிட்டு அவர்கள் காவல்,நிலையத்தில், எங்கள்மீதே போலியான புகார் அளித்துள்ளனர். நாங்களும் காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். வெள்ளலூர் பேரூராட்சியில் நியாயமாகத் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் முறையிடுவோம்" என்றார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியிலும் மறைமுகத் தேர்தல் முடிவில், தி.மு.க-வினருக்கும் போலீஸாருக்குமிடையே இன்று தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism