Published:Updated:

``திருப்பிக் கொடுக்கும் காலம் வரும்..!" - எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

ஸ்.பி.வேலுமணி

``அ.தி.மு.க-வை எப்படி நடத்த வேண்டும் என்று எடப்பாடியாருக்கு தெரியும். பா.ஜ.க உட்பட யாரின் ஆலோசனையைக் கேட்டும் கட்சியை வழிநடத்த வேண்டிய அவசியம் எடப்பாடிக்கு இல்லை." - எஸ்.பி.வேலுமணி

``திருப்பிக் கொடுக்கும் காலம் வரும்..!" - எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

``அ.தி.மு.க-வை எப்படி நடத்த வேண்டும் என்று எடப்பாடியாருக்கு தெரியும். பா.ஜ.க உட்பட யாரின் ஆலோசனையைக் கேட்டும் கட்சியை வழிநடத்த வேண்டிய அவசியம் எடப்பாடிக்கு இல்லை." - எஸ்.பி.வேலுமணி

Published:Updated:
ஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தி.மு.க-வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, ``பொதுச்செயலாளராக எடப்பாடி வரவேண்டும் என்றுதான் அத்தனைபேரும் நினைத்தார்கள். அது நடந்துவிட்டது. எடப்பாடி பொதுச்செயலாளரானால் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக-வுக்கும் பயம்.

வேலுமணி
வேலுமணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் 1.5 சதவிகிதம் வாக்குதான் வித்தியாசம். கடந்த ஒன்றரை ஆண்டில் எதுவும் செய்யாமல் மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓ.பி.எஸ் உடன் சேர்ந்து நம் கோயிலை (அ.தி.மு.க அலுவலகம்) மு.க.ஸ்டாலின் உடைக்கிறார். நாட்டில் என்ன நடந்தாலும் சரி, ஸ்டாலினைப் பொறுத்தவரை தினமும் ஏதாவது விளம்பரத்தில் வந்தால் போதும். மத்திய அரசு சொன்னதால் மின் கட்டணம் உயர்த்தியதாகக் கூறினர். நாங்கள் இருந்தபோது மத்திய அரசு அப்படி சொல்லவில்லை.

அதிமுக ஆர்பபாட்டம்
அதிமுக ஆர்பபாட்டம்

எப்போதும் மத்திய அரசை திட்டுபவர்கள், இதில் மட்டும் ஏன் கேட்க வேண்டும். என் மேல் வழக்கு போடுவதுதான் உங்கள் வேலை. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.

காவல்துறையினர் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள். தி.மு.க மு.க. ஸ்டாலினுக்கு அடிமை கிடையாது நீங்கள். எங்கள் தொண்டர்கள், தம்பிகள்மீது வழக்கு போட்டால் இதையெல்லாம் திருப்பிக் கொடுக்கக் கூடிய காலம் வரும். மக்களைப் பற்றிய கவலைப்படாத ஆட்சியாக தி.மு.க இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பிரதமர் ஏற்பாடு செய்த ஜனாதிபதி பிரிவு உபசார விழாவுக்கு தமிழ்நாட்டிலேயே எடப்பாடியார், பா.ஜ.க-வின் அண்ணாமலைக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டது. எங்கள் கட்சி விவகாரத்தில் பா.ஜ.க பேசாது. அதை அண்ணாமலை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

அ.தி.மு.க-வை எப்படி நடத்த வேண்டும் என்று எடப்பாடியாருக்கு தெரியும். பா.ஜ.க-வினர் அவர்கள் கட்சியைப் பார்த்துக் கொள்வார்கள். யாரின் ஆலோசனையைக் கேட்டும் கட்சியை வழிநடத்த வேண்டிய அவசியம் எடப்பாடிக்கு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமை வகிக்கக் கூடிய எங்கள் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்.

பாஜக
பாஜக

2026-ம் ஆண்டு எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் கொண்டு வந்தத் திட்டத்தை எல்லாம் முடக்கி, ஸ்வாஹா செய்கின்றனர். கட்டண உயர்வை வாபஸ் பெறாவிடின், எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றார்.