Published:Updated:

“முதல்வருக்கு எடப்பாடிதான் பெஸ்ட் சாய்ஸ்!”

அரங்கநாயகம்
பிரீமியம் ஸ்டோரி
அரங்கநாயகம்

அரங்கநாயகம் ‘பளிச்’ பேட்டி

“முதல்வருக்கு எடப்பாடிதான் பெஸ்ட் சாய்ஸ்!”

அரங்கநாயகம் ‘பளிச்’ பேட்டி

Published:Updated:
அரங்கநாயகம்
பிரீமியம் ஸ்டோரி
அரங்கநாயகம்

எம்.ஜி.ஆர் மறைந்து `ஜெயலலிதா’, `ஜானகி’ என அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டிருந்த நேரம் அது. ஜானகி அணியிலிருந்த ஆர்.எம்.வீரப்பனின் கட்டுப்பாட்டில் 98 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். வெறும் 29 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவே ஜெயலலிதா அணிக்கு இருந்தது. ஆனாலும், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஜெ-க்கு ஆதரவளித்தனர். அந்தச் சமயத்தில், ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அன்றைய கல்வி அமைச்சரும், ‘ஜெ’ அணியைச் சேர்ந்தவருமான அரங்கநாயகம் வீட்டில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர்... என ‘ஜெ’ ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அரங்கநாயகம், ‘‘புரட்சித்தலைவி ஜெயலலிதாவைக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்மொழிகிறேன்’’ என்று பிள்ளையார் சுழியைப் போட்டார். ஜெயலலிதாவின் அரசியல் ஆட்டம் அன்றிலிருந்து ஆரம்பமானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் 90 வயது அரங்கநாயகத்தை சென்னை அடையாறு, இந்திரா நகரிலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.

‘‘தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதே..?’’

‘‘நான் கல்வி அமைச்சராக இருந்தபோதே இந்த மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முயன்றது. ஆனால், ஒருபோதும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டதில்லை. இந்த விவகாரத்தில் எம்.ஜி.ஆர் தீவிரமாக இருந்தார். ஒவ்வொரு முறையும் டெல்லியில் நடைபெற்ற கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பேசும்போது, என்னை மும்மொழிக் கொள்கையை எதிர்த்து பேசச் சொன்னார். அன்றைய காலகட்டத்தி லேயே, விமானநிலையங்களில் இந்தி தெரிந்தவர்களை மட்டுமே பணியிலமர்த்தும் போக்கு இருந்தது. அதை நாங்கள் கடுமையாக எதிர்த்ததால், தமிழ் தெரிந்தவர்களையும் பணியமர்த்தினார்கள். மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்க யார் விரும்பினாலும் அது தவறாகிவிடும்.”

‘‘எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?’’

‘தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்த பிறகு, `மதியழகன் கோஷ்டியைச் சேர்ந்தவன்’ என முத்திரை குத்தி என்னை கருணாநிதி ஒதுக்கினார். அந்த நேரத்தில்தான், கே.ஏ.கிருஷ்ணசாமி மூலமாக எம்.ஜி.ஆரைச் சந்தித்து, அ.தி.மு.க-வில் இணைந்தேன். நான் தி.மு.க-வின் வழக்கறிஞர் அணிச் செயலாளராக இருந்ததால், என்மீது எம்.ஜி.ஆருக்கு எப்போதும் மதிப்பு உண்டு. கிணத்துக்கடவு தொகுதியில் பிரசாரம் முடித்துவிட்டு காரில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது, ‘கோவை செழியன் இன்னிக்கு நம்மகிட்ட இருந்திருந்தா அவர்தான் மந்திரி. ஆமா அரங்கநாயகம், நீங்க என்ன படிச்சிருக்கீங்க?’ என்று எம்.ஜி.ஆர் கேட்டார். நானும் பதில் சொன்னேன். அப்போது அமைந்த அமைச்சரவையில் எனக்குக் கல்வி அமைச்சர் பதவி கிடைத்தது. கல்வியில் பல சீர்திருத்தங்களை என் மூலமாக எம்.ஜி.ஆர் கொண்டுவந்தார்.”

அரங்கநாயகம்
அரங்கநாயகம்

‘‘கட்சி பிளவுபட்டபோது, ஜெயலலிதாவை ஏன் ஆதரித்தீர்கள்?”

“ஏனென்றால், ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் ஆதரவுபெற்றவர். நான் எம்.ஜி.ஆர் விசுவாசி. எம்.ஜி.ஆர் உத்தரவுப்படி கோயம்புத்தூரில் ஜெயலலிதாவைவைத்து முதல் கூட்டம் போட்டவன் நான்.”

“பிறகு எதற்காக அ.தி.மு.க-விலிருந்து விலகினீர்கள்?”

“அன்று ‘ஜெ’வை நான், எஸ்.டி.எஸ்., திருநாவுக்கரசர் போன்றவர்கள்தான் பாதுகாத்தோம். ஜெயலலிதா சொன்ன வேலையை மட்டும்தான் சசிகலா குடும்பத்தினர் பார்த்தார்கள். கார்டனில் குமாஸ்தா வேலையைத்தான் டி.டி.வி.தினகரன், திவாகரன் போன்றவர்கள் பார்த்தார்கள். பின்னர், ஜெ- சசிகலா நட்பு வலுவானது. நான் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டேன். அங்கேயிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தேன். பழைய பகை காரணமாக கருணாநிதி எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. பின்னர் அ.தி.மு.க-வில் ஒரு அடிமட்டத் தொண்டனாகத் தொடர்கிறேன்.”

“அ.தி.மு.க-வில் நடைபெறும் ‘யார் முதல்வர்?’ பஞ்சாயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கடந்த ஒரு வருடத்தில் பல நலத்திட்டங்களை அ.தி.மு.க அரசு செய்துள்ளது. இப்போதுகூட இரண்டு நாள்களுக்கு ஒரு முறை வீதம் பல திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்கள். இது அடிமட்ட மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வர் வேட்பாளருக்கு என்னுடைய சாய்ஸ் எடப்பாடி பழனிசாமிதான். ஓ.பி.எஸ் நல்லவர்தான் என்றாலும், எடப்பாடி அளவுக்கு உறுதியான ஆள் கிடையாது. கட்சியில் இனி ஒற்றைத் தலைமைக்கு வாய்ப்பு இல்லை. இரு தரப்பும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும். சசிகலா விடுதலையாகி வெளியே வந்தாலும் தேர்தலில் நிற்க முடியாது. ஆக, அவரால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. ஓ.பி.எஸ்., எடப்பாடி என யார் வேண்டு மானாலும் சசிகலாவைப் பார்த்துப் பேசுவார்கள். அதற்காக, சசிகலா கன்ட்ரோலில் அ.தி.மு.க சென்று விடும் என்பதை ஏற்பதற்கில்லை. இப்போது இருக்கும் அதிகாரத்தை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.”

“இனி தி.மு.க-வுக்கு மாற்று பா.ஜ.க-தான் என்று வி.பி.துரைசாமி கூறியிருக்கிறாரே..?”

‘‘தமிழ்த் திருமுறைகள் நமக்கு சமத்துவத்தைத்தான் போதித்துள்ளன. வடநாட்டு அரசியலைப் போன்று மதத் துவேஷத்தை விதைத்து, வாக்குகளை அறுவடை செய்யலாம் என பா.ஜ.க கணக்குப் போட்டால், அது தவறாகிவிடும். 1967, 1971 தேர்தல்களில் மதப் பிரச்னையைத் தூண்டிவிட்டு, தி.மு.க-வை வீழ்த்த முயன்றார்கள். அது பூமராங் ஆனதுதான் மிச்சம். அந்த வியூகம் இனி எடுபடாது. இந்துத்துவா அரசியலை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொண்டதில்லை. வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism