Published:Updated:

``ஓபிஎஸ் தரப்பில் 4 பேர்தான், இபிஎஸ் தலைமையில்தான் அதிமுக இருக்கிறது!'' - ஜெயக்குமார்

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

``மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் விஷயங்களை அ.தி.மு.க ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

``ஓபிஎஸ் தரப்பில் 4 பேர்தான், இபிஎஸ் தலைமையில்தான் அதிமுக இருக்கிறது!'' - ஜெயக்குமார்

``மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் விஷயங்களை அ.தி.மு.க ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கும், இ.பி.எஸ்-ஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிற நிலையில், சட்டசபையிலும் இந்தப் பிரச்னை எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் பழைய நடைமுறை தொடர்கிறது என சபாநாயகர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இ.பி.எஸ் சட்டசபைக்கு வராமல் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தமிழ்நாட்டில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். சபாநாயகர் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட முடியும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக பலமுறை கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக மாண்புடைய சபாநாயகராக இருக்கிற பட்சத்தில், நாங்கள் வழங்கியிருக்கிற கடிதத்துக்கு மதிப்பளித்து, அ.தி.மு.க-வின் உரிமையை நிலைநாட்டவேண்டியது சபாநாயகரின் கடமை.

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டைப் பின்பற்றிவருகிறோம். மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் விஷயங்களை அ.தி.மு.க ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஓ.பி.எஸ் நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்று அவரிடமிருக்கும் நான்கு எம்.எல்.ஏ-க்களிடம் கூறுகிறார். அதை அ.தி.மு.க தொண்டர்களிடம் கூறுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நான்கு பேரும் அவரைவிட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ் இவ்வாறு கூறுகிறார். ஓ.பி.எஸ் தரப்பில் நான்கு பேர்தான், இ.பி.எஸ் தலைமையில்தான் அ.தி.மு.க இருக்கிறது" என்றார்.