Published:Updated:

``தற்போது தர்மம் வென்றிருக்கிறது..!" - அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``ஓ.பி.எஸ் உட்பட பலரைக் கட்சியிலிருந்து நீக்கியதை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது." - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``தற்போது தர்மம் வென்றிருக்கிறது..!" - அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து

``ஓ.பி.எஸ் உட்பட பலரைக் கட்சியிலிருந்து நீக்கியதை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது." - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published:Updated:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். மேலும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்தார். அதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம், ``அ.தி.மு.க-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பிருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை நடத்த வேண்டும்" எனத் தீர்ப்பளித்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு, "அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது” என உத்தரவிட்டனர். தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று எடப்பாடி தரப்பு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடிவருகிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இது தொடர்பக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில், ``இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. சட்டப்படி ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும், ஓ.பி.எஸ் உட்பட பலரைக் கட்சியிலிருந்து நீக்கியதை அங்கீகரித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் கொண்டாடிவருகின்றனர். ஓ.பி.எஸ் தரப்பு மேல் முறையீடு சென்றால், எங்கள் சட்டத்துறை வல்லுநர்கள் அதைக் கையாள்வார்கள். தற்போது தர்மம் வென்றது" எனக் கூறினார்.