Published:Updated:

``ஓபிஎஸ்-ஸுக்கு ஊதுகுழலாக இருங்கள், ஆனால்..!" - பண்ருட்டி ராமச்சந்திரனை விமர்சித்த ஜெயக்குமார்

ஜெயக்குமார்

``நான் சாகும்வரை அ.தி.மு.க-வோடுதான் இருப்பேன். இதேபோலத்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்திருக்க வேண்டும்." - ஜெயக்குமார்

``ஓபிஎஸ்-ஸுக்கு ஊதுகுழலாக இருங்கள், ஆனால்..!" - பண்ருட்டி ராமச்சந்திரனை விமர்சித்த ஜெயக்குமார்

``நான் சாகும்வரை அ.தி.மு.க-வோடுதான் இருப்பேன். இதேபோலத்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்திருக்க வேண்டும்." - ஜெயக்குமார்

Published:Updated:
ஜெயக்குமார்

`அ.தி.மு.க அணிகளை ஒன்று சேர்ப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக சசிகலா தெரிவித்திருப்பது வடிகட்டின பொய்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது என ஓ.பி.எஸ்-ஸின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். உண்மையில் பல கட்சிகளில் பண்ருட்டி ராமச்சந்திரன் இணைந்து பணியாற்றியிருந்தாலும், உலகுக்கு அவரை அடையாளம் காட்டியது அ.தி.மு.க-தான்.

நான் அ.தி.மு.க-வுக்கு இவ்வளவு விசுவாசமாக இருப்பதற்குக் காரணம், என்னை அடையாளம் காட்டியது அ.தி.மு.க-தான். என் உடலில் ஓடும் ரத்தத்திலும் அ.தி.மு.க-வின் விசுவாசம் கலந்திருக்கிறது. நான் சாகும்வரை அ.தி.மு.க-வோடுதான் இருப்பேன். இதைபோலத்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்திருக்க வேண்டும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது என அவர் சொல்கிறார் என்றால், அவர் தி.மு.க-வின் பி டீமாகத்தான் இருக்கிறார். நீங்கள் தி.மு.க-வுக்கு பி டீமாக இருங்கள் அல்லது ஓ.பி.எஸ்-ஸுக்கு ஊதுகுழலாக இருங்கள். ஆனால், உங்களை வளர்த்த இயக்கத்துக்கு சிறுமை ஏற்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டாம். இது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்யும் துரோகம். அ.தி.மு.க-வை இணைக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்வதாக சசிகலா கூறிவருவது ஜமுக்காளத்தால் வடிகட்டின பொய். சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எடப்பாடியின் தலைமையில் கட்சி சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியின்போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசுப்பொருள்கள் கொடுத்தோம். ஆனால் தி.மு.க ஆட்சியில் கொடுப்பதே ரூ.1,500. ஆனால், அதிலும் ரேஷன் கார்டில் பாகுபாடு பார்க்கிறார்கள்" என்றார்.