Published:Updated:

``எழுதி வெச்சுக்கோங்க... அடுத்த முதல்வர் எடப்பாடி தான்" - அடித்து சொல்லும் வேலுமணி

வேலுமணி

``தைரியம் இருந்தால் திமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வையுங்கள். இன்றைக்கு தேர்தல் நடந்தால் எடப்பாடி தான் முதல்வர்" - எஸ்.பி வேலுமணி

``எழுதி வெச்சுக்கோங்க... அடுத்த முதல்வர் எடப்பாடி தான்" - அடித்து சொல்லும் வேலுமணி

``தைரியம் இருந்தால் திமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வையுங்கள். இன்றைக்கு தேர்தல் நடந்தால் எடப்பாடி தான் முதல்வர்" - எஸ்.பி வேலுமணி

Published:Updated:
வேலுமணி

திமுக அரசைக் கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் அதிமுக சார்பில் வருகிற டிசம்பர் 2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள உள்ளார். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

வேலுமணி
வேலுமணி

அப்போது பேசிய வேலுமணி, “திமுகவை எதிர்ப்பதில் எடப்பாடியை போல ஒரு எதிர்க்கட்சி தலைவர் யாருமில்லை. ஊடகங்கள் அதிமுக தொடர்பான செய்திகளை இருட்டடிக்கின்றன. அதனால், அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்கின்றனர்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிளையிலும் திமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடிய சக்தி அதிமுகவுக்கு மட்டும் தான் இருக்கிறது. சிலர் அஜென்டாவுக்காக மாயை உருவாக்க பார்க்கின்றனர். அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தைரியம் இருந்தால் திமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வையுங்கள். இன்றைக்கு தேர்தல் நடந்தால் எடப்பாடி தான் முதல்வர். இந்த ஆட்சி ஒரு குப்பை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும்.” என்றார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, “கோவையில் .அனைத்து சாலைகளும் பழுதடைந்து மக்கள் சிரமப்படுகின்றனர். கோவைக்கு முதலமைச்சர் எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கேட்ட திட்டங்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார்.

கோவை சாலை
கோவை சாலை

ஆனால், திமுக அரசு அவற்றையெல்லாம் செயல்படுத்தவில்லை. கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காதீர்கள். மக்களுக்காக தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார். மக்களுக்காக செயல்படக் கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான்.” என்றார்.