Published:Updated:

ரூ.110 கோடி டெபாசிட் தொகைக்கு `செக்’.. சிக்கிய 1,000 பக்க ஆவணங்கள்! - சிக்கலில் வேலுமணி?!

வேலுமணி

`சென்னை, கோவை மாநகராட்சிகளில் பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

ரூ.110 கோடி டெபாசிட் தொகைக்கு `செக்’.. சிக்கிய 1,000 பக்க ஆவணங்கள்! - சிக்கலில் வேலுமணி?!

`சென்னை, கோவை மாநகராட்சிகளில் பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.’ - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

Published:Updated:
வேலுமணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி டெபாசிட் தொகை ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வேலுமணி, அவருக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர்.

வேலுமணி ரெய்டு
வேலுமணி ரெய்டு

இது குறித்து வேலுமணி, அவரின் சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ரெய்டின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கே.சி.பி இன்ஃப்ரா, ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.110.93 கோடி டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

டெபாசிட் தொகை முடக்கம்
டெபாசிட் தொகை முடக்கம்
சித்திரிப்புப் படம்

அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்டையே இந்தத் தொகை வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக, முறைகேடாகச் சேர்த்தது என்ற குற்றச்சாட்டின் கீழ் வருவதால், அதைப் பறிமுதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டெபாசிட் தொகையை இடைக்காலமாகப் பறிமுதல் செய்து விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இது குறித்து கே.சி.பி இன்ஃப்ரா, ஆலன் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரெய்டு
ரெய்டு

தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த உத்தரவால் இது வேலுமணி தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் வேலுமணி டீமை பொருளதாரரீதியாக முடக்கி, செயல்படவிடாமல் வைப்பதற்கான செக் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து வேலுமணி வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் மற்றும் விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ``ரெய்டு நடத்தியதிலிருந்தே தீவிர விசாரணை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகளை விசாரித்துள்ளோம்.

வேலுமணி
வேலுமணி

முக்கியமாக கோவை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் சம்பந்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்றனர்.

இந்த உத்தரவு அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ``காவல்துறையை வைத்து என்னை மிரட்டப் பார்க்கின்றனர். என்னுடைய வீட்டிலோ, சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிலோ எந்த ஆவணமோ, பணமோ பறிமுதல் செய்யப்படவில்லை” என்று வேலுமணி கூறியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க-வினர் உச்சகட்ட பதற்றத்தில் உள்ளனர். வழக்கு அதிகபட்சம் ஓராண்டில் முடிவதற்கான வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

கோவை தேர்தல்
கோவை தேர்தல்

குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் வேலுமணி, அவர் தொடர்புடையவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.க-வை மிரளவைத்துள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் தி.மு.க-வுக்கு அ.தி.மு.க கடுமையான போட்டியை அளிக்க திட்டம் போட்டுவருகிறது. எனவே இந்த வழக்கை வைத்து தி.மு.க-வினர், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளை மிரட்டி தேர்தல் களத்தில் பின்வாங்க வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவை அ.தி.மு.க அலுவலகம்
கோவை அ.தி.மு.க அலுவலகம்

தேர்தல் நெருங்க நெருங்க மேலும் அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றவும் தி.மு.க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கோவை அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் அமைதியோ அமைதி நிலையில் இருக்கின்றனர்!