Published:Updated:

`ஜெயலலிதா சீரியஸாக இருந்தபோது இ.பி.எஸ் ரியாக்‌ஷன்..!' -அப்போலோ மர்மங்களை உடைக்கும் முன்னாள் எம்.பி

நாகராஜன்
News
நாகராஜன்

``அவசர அவசரமா ஓடிப் போனேன். கீழ ஒரு வராண்டால எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. நான் பதறிப் போய் அம்மாக்கு சீரியஸ் ஆகிடுச்சுனு தகவலைச் சொன்னேன்." - நாகராஜன்.

சசிகலாவின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர் நாகராஜன். கோவை எம்.பி-யாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுமே இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அணிகளுக்குச் செல்லாமல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்தார். விளைவு அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

நாகராஜன்
நாகராஜன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சசிகலாவின் அரசியலும் நிலை இல்லாததால் நாகராஜன் அரசியலிலிருந்தே விலகியிருந்தார். இதைப் புரிந்துகொண்ட தி.மு.க., நாகராஜனைத் தங்கள் பக்கம் இழுத்துவிட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு வழக்கறிஞர் குழுவில் இருந்த நாகராஜன், சசிகலாவின் தீவிர ஆதரவாளர். சசிகலா கணவர் நடராஜன் உயிரிழந்தபோது, அவர் பரோலில் வெளிவர நாடாளுமன்ற உறுப்பினராகக் கையெழுத்து போட்டது நாகராஜன்தான். சொத்துக்குவிப்பு வழக்கு, அப்போலா மர்மங்கள், கொடநாடு வழக்கு போன்ற பல விஷயங்கள் நாகராஜனுக்குத் தெரியும்.

நாகராஜன் ஸ்டாலின்
நாகராஜன் ஸ்டாலின்

அதனால்தான் தி.மு.க அவரை இழுத்திருக்கிறது என்கிறார்கள். தோட்டத்தில் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். சின்னம்மா புகழ் பாடிக்கொண்டிருந்தவரின் பேச்சில் உதயநிதி புகழ் அதிகம் எட்டிப் பார்க்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணையவேண்டிய அவசியம் என்ன..?

``அ.தி.மு.க அம்மாவோட பாதைல போகவே இல்லை. அழிவுப் பாதையில போய்க்கிட்டு இருக்கு. அ.தி.மு.க இப்போ பல கிளைகளாகப் பிரிஞ்சுருச்சு. ஒவ்வொரு மாவட்டத்துலயும் தனித்தனியா பட்டாபோட்டு எடுத்துட்டாங்க. கடந்த நாலு வருஷமா மக்களுக்குச் சேவை செய்ய முடியலை. தி.மு.க-வுல சேர்ந்ததை மக்களுக்கு சேவை செய்யறதுக்கான வாய்ப்பாகப் பார்க்கறேன். எதிர்பார்ப்போட எல்லாம் நான் தி.மு.க-வுக்கு வரலை. அப்படிப் போகணும்னா எடப்பாடிகூடயே போயிருப்பேன்.’’

நாகராஜன்
நாகராஜன்

``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் நடைபெற்ற மாற்றங்கள் பற்றிச் சொல்லுங்களேன்..?”

``பல ராஜ ரகசியங்களுக்கு நான் ஒரு சாட்சி. உள் அரங்கத்துல நடந்த பல விஷயங்களை இப்போ பேசறது அரசியல் நாகரிகமா இருக்காது. அப்போலோ மருத்துவமனையிலேயே மாற்றங்கள் தெரிஞ்சுது. ஒரு அமைச்சர் ஜெயலலிதா அப்போலோ-வுல மூணு ஸ்வீட் சாப்பிட்டாங்கன்னு சொல்லிட்டு அப்புறம் இல்லைனு சொன்னார். ஆனா, அவங்க ஸ்வீட் சாப்பிட்டது உண்மைதான். சீரியலெல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க. திடீர்னு ஒருநாள் கொலாப்ஸ் ஆகிட்டாங்க. அந்த ரூம்லயே ஆபரேஷன் பண்ணினாங்க. அப்போ அவங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டுச்சு. அப்போ நான் அவசர அவசரமா ஓடிப் போனேன். கீழே ஒரு வராண்டாவுல எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. நான் பதறிப்போய் அம்மாவுக்கு சீரியஸ் ஆகிடுச்சுனு தகவலைச் சொன்னேன். அவங்க, ‘எங்களுக்கு ஏற்கெனவே நியூஸ் வந்துடுச்சு’னு ரொம்ப கேஷுவலா சொன்னாங்க.

அப்போலோ ...
அப்போலோ ...
விகடன்

அம்மா இறந்தப்ப சாயங்காலம் எல்லா அமைச்சர்களும் எப்படி உட்கார்ந்துட்டு இருந்தாங்கனு க்ளோஸ்அப்ல பாருங்க. நான் ஒரு இடத்துல உட்கார்ந்து இருந்தப்ப, ரெண்டு பெரிய தலைவருங்க என்னையத் தள்ளினாங்க. அப்புறம்தான் இன்னொரு அமைச்சர், ‘கேமரா ஆங்கிளை மறைக்கறீங்கனுதான் உங்களை தள்ளிவிட்டாங்க’னு சொன்னார். அதுக்கப்புறம் நடந்தது எல்லாருக்குமே தெரியுமே.’’

``அ.தி.மு.க-வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சசிகலா என்ன சொன்னார்?”

``எம்.ஜி.ஆர் மறைவுக்கப்புறம் அ.தி.மு.க-வை, ஜெயலலிதாவை உருவாக்கக் காரணமே சின்னம்மாதான். அவங்க இல்லாட்டி, அ.தி.மு.க எப்பவோ அழிவுப் பாதைக்குப் போயிருக்கும். அவங்க கால்ல விழுகாம யாரும் பதவி வாங்கலை. யாரையாவது இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். பெங்களூர் ஜெயில்ல நான் சசிகலாவைப் பார்த்தேன். `எல்லாரும் சொன்னீங்க. உங்க பேச்சையெல்லாம் கேட்டுத்தான் இந்த முடிவை எடுத்தோம். நமக்கு துரோகம் பண்ணிட்டாங்க. பரவாயில்லை, நாம வளர்த்த பிள்ளைங்கதான்’னு பெருந்தன்மையாக ஏத்துக்கிட்டாங்க.’’

சசிகலா
சசிகலா

``கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``எல்லாரும் அம்மா தெய்வம். அவங்க வாழ்ந்த இடம் கோயில்னு சொல்றாங்க. அந்தச் சம்பவம் நடந்தப்ப நான் காலைல 6 மணிக்கு அங்கே போயிட்டேன். எந்தத் தலைவர் அங்கே எட்டி பார்த்தாங்க..? மனிதாபிமானம் இருக்கறவங்க, நாலு வீடு தள்ளி நடக்குற கொள்ளையைக்கூட கேப்பாங்க. எல்லாம் சும்மா நாடகம் நடத்திக்கிட்டு இருக்காங்க. ஒரு ஆள்கூட அங்க போகலை. கொடநாடு எஸ்டேட்டுக்கு அஸ்திவாரம் எடுத்ததுல இருந்து எல்லா நேரத்துலயும் நான் இருந்துருக்கேன். சாதாரணமான ஒரு நபர் அங்க போக முடியாது. அதைப் பத்தி எல்லாம் தெரிஞ்சவங்களாலதான் உள்ளே போக முடியும். அதுக்காகத்தான் அவங்க கனகராஜைத் தேர்ந்தெடுத்திருக்கணும். கொடநாடு எஸ்டேட் அமைப்பு பத்தி கனகராஞுக்கு எல்லாம் தெரியும்.’’

கொடநாடு
கொடநாடு

``இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பலரின் பெயர்கள் அடிபடுகின்றனவே..?”

``கொடநாடு மறுவிசாரணைல நானும் விசாரணைக்குப் போயிட்டு வந்துருக்கேன். அதனால, அதைப் பத்தி ஆழமா பேசினா... அது விசாரணையை பாதிக்கும். ஒரு வழக்கறிஞரா அந்த வழக்குல இருக்கற சில ஓட்டைகளைச் சொல்ல முடியும். வழக்கு விசாரணை ரொம்ப வேகமாக இருந்துச்சு. வழக்கை வேகமாக விசாரிக்கறதுக்காகவே, நிறைய சாட்சிகளை விடுவிச்சுருக்காங்க. 100 சாட்சிகள் வரைக்கும் இருந்துருக்காங்க. ஆனா, 40 சாட்சிங்ககிட்டதான் விசாரணை பண்ணியிருக்காங்க. 60 சாட்சிகளை விட்டிருக்காங்க. இதனாலதான் மறுவிசாரணை தொடங்கியிருக்காங்க. மடியில் கனம் இல்லாட்டி, வழியில பயம் தேவையில்லை. தேவையில்லாம பதற்றப்படறது சந்தேகத்தை அதிகமாக்கும்.’’

நாகராஜன்
நாகராஜன்

``கடைசிவரை அ.தி.மு.கவில்தான் இருப்பேன்... அரசியலே வேண்டாம் என்று கூறிவந்தீர்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அங்கு சேர்வது சுயநல அரசியல் இல்லையா..?’’

நாகராஜன்
நாகராஜன்

“வருங்கால சந்ததிகளை... தமிழ்நாட்டை யார் காப்பாத்தறது... அது தி.மு.க கையிலதான் இருக்கு. அவங்களால மட்டும்தான் அது முடியும். நான் தி.மு.க வர்றதக்கு அதுதான் காரணம். உண்மையைச் சொல்லணும்னா எம்.பி-யா இருந்தப்ப என்னால சரியா வேலை செய்ய முடியலை. `கோவை வளர்ச்சிக்கு என்ன தேவையோ சொல்லுங்க பார்த்துக்கலாம்’னு தலைவரும், சின்ன தலைவரும் இப்ப சொல்லிருக்காங்க. கோவை மக்களுக்கு சேவை செய்ய ஒரு நல்ல வாய்ப்பாத்தான் இதைப் பார்க்கறேன். நான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்தான். போகப் போக பாருங்க. இந்தப் பேட்டி வெளியாகறதுக்குள்ள, நிறைய பேர் தி.மு.க-வுக்கு வந்துடுவாங்க.”