Published:Updated:

அதிமுக பொதுக்குழு: முக்கிய தீர்மானங்களும், கழக விதியின் முக்கிய திருத்தங்களும்!

அதிமுக பொதுக்குழு

அதிமுக சட்ட திட்ட விதி பிரிவு-20, 7-ன் படி கழக இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி நியமனம்.

அதிமுக பொதுக்குழு: முக்கிய தீர்மானங்களும், கழக விதியின் முக்கிய திருத்தங்களும்!

அதிமுக சட்ட திட்ட விதி பிரிவு-20, 7-ன் படி கழக இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி நியமனம்.

Published:Updated:
அதிமுக பொதுக்குழு

அதிமுக-வில் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக நீடித்துவந்த ஒற்றைத் தலைமை குறித்த விவகாரமானது, இறுதியாக பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

பொதுக்குழு நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் காலை 9 மணியளவில் தீர்ப்பு வழங்கியதையடுத்து, வானகரத்தில் தொடங்கிய அதிமுக பொதுக்குழுவில், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

கழக பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்ட திட்ட விதி பிரிவு-20, 7-ன் படி கழக இடைக்கால பொதுச் செயலாளராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழுவின் சிறப்பு தீர்மானத்தின் மூலம், கட்சி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாக அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்டார். வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக பொதுக்குழு: முக்கிய தீர்மானங்களும், கழக விதியின் முக்கிய திருத்தங்களும்!

கழகப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கள், தேர்தல் இன்றைய தேதியிலிருந்து 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர்களான, நத்தம் விசுவநாதன் மற்றும் V.ஜெயராமன் ஆகியோர் நியமனம். 11.07.2022 வரை கழக உறுப்பினர்கள் பதிவேட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க உரிமை பெற்றவர்களாவர்.

கழக சட்ட திட்ட விதி 43-ன்படி, கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். அதன்படி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச்செயலாளர் என்ற தலைமையை மீண்டும் உருவாக்கி தற்போதுள்ள இரட்டை தலைமையான கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

ஜெயலலிதா
ஜெயலலிதா

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்.

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசுக்கு கண்டனம்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

மேக்கேதாட்டூ அணைக்கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்

நெசவாளர் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்

அதிமுக-வின் தற்போதைய நிலைகுறித்து விவாதித்து, கட்சி வளர்ச்சி குறித்து முடிவெடுத்தல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிமுக விதிகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய திருத்தங்கள்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த கழக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்ற விதி ரத்து செய்யப்படுகிறது.

கழக துணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்குப் பதில், துணைப் பொதுச்செயலாளர் என்று விதி திருத்தப்படுகிறது. கழக துணைப் பொதுச் செயலாளர்களை கழகப் பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

அவைத் தலைவர், பொருளாளர், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் ஆகியோர்களைக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர், தலைமைச் செயற்குழுவை அமைப்பார்.

கழகப் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், தலைமை கழகச் செயலாளர்களும், கழகப் பொதுச் செயலாளர் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்கள்.

பொதுக்குழு, செயற்குழு கூடாத நேரங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், கொள்கை திட்டம் ஆகியவற்றைப் பற்றி தக்க முடிவுகள் எடுக்க கழகப் பொதுச்செயலாளருக்கு உரிமை உண்டு.

இரட்டை இலை
இரட்டை இலை

கழகத்தின் தேவையை முன்னிட்டு, கழகத்தின் பொறுப்பில் மேற்படி நிறுவனங்களில் கழக உடைமைகளின் பேரில் கடன் வாங்கவும், கொடுக்கவும், முக்கிய நடவடிக்கைகளில் கழகத்தின் சார்பாக ஈடுபடவும் கழகப் பொதுச் செயலாளருக்கு உரிமை உண்டு.

அ.தி.மு.க-வின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதும் அனுமதி படிவங்களில் கழகபப்பொதுச் செயலாளருக்கு கையொப்பமிட அதிகாரம்.