Published:Updated:

ஒன் பை டூ: பா.ஜ.க இல்லாததால், அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா?

டி.ஜெயக்குமார், பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
டி.ஜெயக்குமார், பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்

“பா.ஜ.க எங்களது கூட்டணியில் இல்லாததால், அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்று திரியைக் கொளுத்தியிருக்கிறார் அ.தி.மு.க தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்! என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“ஆமாம், அ.தி.மு.க தனித்துப் போட்டியிடுவதால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதால் தி.மு.க மீதான அதிருப்தி வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க-வுக்கு மட்டுமே வரும். இடையில் பா.ஜ.க இந்த வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என நினைத்து, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்கிற அவர்களின் எண்ணம் பகல் கனவாகவே கலைந்துவிடும். தி.மு.க-வின் கடந்த எட்டு மாத கால ஆட்சியால் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்திருக்கும் மக்கள் தாலிக்குத் தங்கம் கொடுத்தது, பொங்கல் நிதி கொடுத்தது, சட்டம், ஒழுங்கைக் காத்து தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருந்தது என அ.தி.மு.க தந்த ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஆவலோடு இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தயாராகிவருகிறார்கள். அதற்கேற்ப எங்களுக்கென்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய வாக்குவங்கி இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள் துணை இருக்கிறார்கள்... வெற்றிச் சின்னம் இரட்டை இலை இருக்கிறது... எங்கள் ஆட்சியில் நாங்கள் செய்த சாதனைகள் இருக்கின்றன. மேலும், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்பதே எங்களுக்கான மிகப்பெரிய பலம்!”

ஒன் பை டூ: பா.ஜ.க இல்லாததால், அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா?
ஒன் பை டூ: பா.ஜ.க இல்லாததால், அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா?

பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன், பா.ஜ.க பொதுச்செயலாளர்

“அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தில்தான் துளியும் உடன்பாடு இல்லை. `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லாமல் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்’ என்றால், அவர்கள் தோல்விக்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்வதைப்போல இருக்கிறது. இதை எந்த வகையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க-வுக்கு என வாக்குவங்கி இருக்கிறது; தனித்துவம் இருக்கிறது என்பதை அ.தி.மு.க-வினரால் மட்டுமல்ல... யாராலும் மறுக்க முடியாது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தோல்வியைச் சந்திக்கும், சந்திக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க-வினரைப்போல எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அந்த அளவு போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை தி.மு.க ஏமாற்றியிருக்கிறது. ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க தனித்துப் போட்டியிடுவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியில் வந்துவிட்டன என்று பொருளில்லை’ என்று இரண்டு கட்சித் தலைவர்களும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், இடையில் இருப்பவர்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்பதுதான் இப்போதுவரை புரியவில்லை. எங்கள் பலம் என்னவென்று எங்களுக்குத் தெரிய வேண்டும்; அடிமட்டத் தொண்டர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனித்துத் தேர்தலைச் சந்திக்கிறோமே தவிர அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் எந்த முரண்பாடும் இல்லை. இப்போதும் நட்புறவுடன்தான் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி தொடர்கிறது!”