Published:Updated:

எடப்பாடியின் நரித்தனமான செயல்களுக்கு பிரதமர் துணைபோகமாட்டார்!

- கோவை செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
- கோவை செல்வராஜ்

- கோவை செல்வராஜ் நம்பிக்கை!

எடப்பாடியின் நரித்தனமான செயல்களுக்கு பிரதமர் துணைபோகமாட்டார்!

- கோவை செல்வராஜ் நம்பிக்கை!

Published:Updated:
- கோவை செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
- கோவை செல்வராஜ்

``சசிகலா தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக அவர் இன்னும் நீடித்துவருகிறார். அவர் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறார்’’ என ஒரு புதிய சரவெடியைப் பற்றவைத்திருக்கிறார் ஓ.பி.எஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ். ஓ.பி.எஸ்-ஸால் கோவை மாநகர மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அவரிடம், சசிகலா விவகாரம், ஓ.பி.எஸ் அணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட சில கேள்விகளை முன்வைத்தேன்...

``2017-ம் ஆண்டு, செப்டம்பர் 12-ந் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, எந்த அடிப்படையில் அவர் இன்னும் கட்சியில் இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்?’’

``அன்றைக்கு தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருந்த பதவிதான் ரத்துசெய்யப்பட்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக அந்தக் கூட்டத்தில் அறிவிக்கவில்லை.’’

``உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அதுவும்தானே இருக்கிறது?’’

``நிச்சயமாக இல்லை... நானும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் உறுப்பினர்தான். எனக்குத் தெரியும். அவரைக் கட்சியைவிட்டு நீக்க முடியாது. அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாள ராக இருந்தவரை, உறுப்பினர் இல்லை என்று தான்தோன்றித்தனமாக எடப்பாடி உள்ளிட்டவர் கள்தான் சொல்லிவருகிறார்கள்.’’

``கட்சியைவிட்டு நீக்கும் தீர்மானத்தில், உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ததில் ஓ.பி.எஸ்-ஸும்தானே கையெழுத்திட்டார்?’’

``இல்லை. கட்சியைவிட்டு நீக்கிவிட்டோம் என அண்ணன் ஓ.பி.எஸ் ஓரிடத்திலும் கையெழுத்திட வில்லை. தற்காலிகப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவதற்குத்தான் இருவரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். சசிகலா இன்னும் அ.தி.மு.க உறுப்பினர்தான்.’’

எடப்பாடியின் நரித்தனமான செயல்களுக்கு பிரதமர் துணைபோகமாட்டார்!

``அப்படியானால், சசிகலா - ஓ.பி.எஸ் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?’’

``எடப்பாடி பழனிசாமி கட்சியைச் சின்னா பின்னமாக்கி அழிக்கப்பார்க்கிறார். அண்ணன் ஓ.பி.எஸ் கழகத்தைக் காப்பாற்ற, கடுமையாக உழைத்துவருகிறார். கட்சியின் ஒருங்கிணைப் பாளரான பன்னீர் அண்ணன், கட்சி வளர்ச்சிக்காக என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.’’

``ஆனால், தலைமைக் கழக சாவி, வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் உரிமை எடப்பாடி தரப்பிடம்தானே வழங்கப்பட்டிருக்கின்றன?’’

``தலைமைக் கழகத்தைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்றம் கூறிய கருத்துகள் தவறானவை. அதனால்தான், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். ஆனால், வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை, எந்த வங்கியும் அப்படியோர் அனுமதியை இன்னும் வழங்கவில்லை. வங்கிகள் எடப்பாடி தரப்புக்கு அனுமதியளித்ததற்கான ஆதாரம் என்ன இருக்கிறது?’’

``பிறகு ஏன் இந்திய ரிசர்வ் வங்கிக்குக் கடிதம் எழுதினார் ஓ.பி.எஸ்?’’

``வங்கிகள் தவறாக முடிவெடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அண்ணன் கடிதம் எழுதினார். தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகள் வரும்வரை யாரும் வங்கிக் கணக்குகளைப் பராமரிக்க அனுமதியளிக்கக் கூடாது எனக் கோரிக்கை வைத்தோம். வங்கிகளும் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.’’

``ஓ.பி.எஸ்-ஸின் அடுத்தகட்ட திட்டங்கள் என்னென்ன?’’

``எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரைக் கட்சியிலிருந்து நீக்கியதால், அந்தப் பொறுப்புகளுக்கு அண்ணன் ஓ.பி.எஸ் புதிய நிர்வாகிகளை நியமித்துவருகிறார். கடந்த நான்காண்டுகளில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து புறக்கணிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களெல்லாம் அண்ணனைத் தொடர்ச்சியாகச் சந்தித்துவருகிறார்கள். அண்ணன் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.”

``ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், விலையுயர்ந்த பொருள்களையும் ஆவணங்களையும் தலைமைக் கழகத்திலிருந்து திருடிச் சென்றுவிட்டதாகக் காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகாரளித்திருக்கிறாரே?’’

``அ.தி.மு.க அலுவலகத்திலிருந்து எங்கள் தரப்பினர் எதையும் திருடியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், கடந்த 11-ம் தேதிக்கு முன்பாகத் தலைமைக் கழகத்துக்குள் ஒரு வார காலம் ரௌடிகளின் துணையோடு, ஆண்களும் பெண்களும் குத்தாட்டம், கும்மாளம் போட்டுக்கொண்டு, பெரிய திரையில் சினிமா காட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருந் தார்கள். அதை மூடிமறைத்துவிட்டு அப்பட்டமாகத் தவறான கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள். அவர்களின்மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

`` `தி.மு.க-வுடன் இணைந்து அ.தி.மு.க-வை அழிக்கப்பார்க்கிறார் ஓ.பி.எஸ்’ எனத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?’’

``எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரோடு இருப்பவர்களுக்கு அண்ணனின்மீது வேறெந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை. அதனால்தான், தி.மு.க ஆதரவு என தான்தோன்றித்தனமாகச் சொல்கிறார்கள். தி.மு.க-வுக்கு ஆதரவாக நாங்களும் செயல்படவில்லை; எங்களுக்கு ஆதரவாக தி.மு.க-வும் இல்லை. அவர்கள்தான், நிறைய தவறுகளைச் செய்துவிட்டு வம்பு, வழக்குகளில் மாட்டியிருக்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அதற்கான தண்டனைகளை அனுபவிப்பார்கள்.’’

`` `பா.ஜ.க-வுடன் இணைந்து அ.தி.மு.க-வை அழிக்கப்பார்க்கிறார் ஓ.பி.எஸ்’ என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறதே?’’

``எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க-வைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார். இப்போது பிரதமரைச் சந்திக்க முயன்றுவருகிறார். ஆனால், அவரின் குறுகிய எண்ணத்துக்கும், நரித்தனமான செயல்களுக்கும் பிரதமர் துணைபோக மாட்டார் என நம்புகிறோம்.’’

`` `கடந்தகாலங்களில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள்’ என அறிக்கை வெளியிட்ட பன்னீர், மீண்டும் பலரையும் நீக்கியிருக்கிறாரே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?’’

``கடந்த நான்காண்டுகளில் எடப்பாடி பழனிசாமிக்குப் பிடிக்காதவர்கள், அவருக்கு எதிராகக் கருத்து சொல்லி பாதித்தவர்கள் பலர் கட்சியிலிருந்து அவரால் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் மீண்டும் தொடர்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய எடப்பாடி உள்ளிட்ட 83 பேரை நீக்கியது அப்படியேதான் இருக்கிறது!’’