Published:Updated:

``ஒற்றைத் தலைமை என்ற அதிமுக-வின் நோக்கம்; நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது” - வழக்கறிஞர் இன்பதுரை

இன்பதுரை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்து இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சென்னையில் கடந்த ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு, `அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்’ இன்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த உத்தரவை இபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடிவருகின்றனர்.

``ஒற்றைத் தலைமை என்ற அதிமுக-வின் நோக்கம்; நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது” - வழக்கறிஞர் இன்பதுரை

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை, ``எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்திருக்கின்றனர். இதன்படி ஒற்றைத் தலைமை என்ற அதிமுக-வின் நோக்கம், கோஷம் அதனுடைய முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதான் தொண்டர்களின் விருப்பம். அதிமுக-வின் சட்ட விதிகளின்படிதான் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டிருக்கிறது என்பதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது'' என்றார்.