Published:Updated:

தஞ்சை விபத்து விவகாரம்: சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக-வினர்! - விளக்கமளித்த சபாநாயகர்

அதிமுக

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அதன் பிறகு தமிழக சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சை விபத்து விவகாரம்: சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக-வினர்! - விளக்கமளித்த சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அதன் பிறகு தமிழக சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Published:Updated:
அதிமுக

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு அப்பர் கோயில் தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அதன் பிறகு தமிழக சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசு திருவிழாக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து தேர் விபத்து குறித்து மீண்டும் பேச அனுமதி கோரி சட்டப்பேரவையில் அ.தி.மு.க-வினர் தர்ணா செய்தனர். அ.தி.மு.க உறுப்பினர்கள் தர்ணா செய்ததால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

அதிமுக-வினர்
அதிமுக-வினர்

அதையடுத்து அதிமுக-வினர் வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, ``அ.தி.மு.க-வினருக்குத் தீர்மானங்கள் மீதான பதிலுக்குப் பிறகு பேச அனுமதி தருகிறேன் என்று கூறினேன். அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்துவிட்டு, அதன் பிறகு எங்கிருந்தோ ஞானோதயம் வந்ததுபோல மீண்டும் வந்து பேசுவது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் போதுமான அளவு பேச வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது. மதத்தைவைத்து அரசியல் செய்ய தமிழக முதலமைச்சர் நினைத்ததில்லை. சபை அரசியல் நாகரிகத்துடன் செயல்பட்டுவருகிறது. தமிழக அரசு எல்லா மதத்தினருக்கும், சம வாய்ப்பு கொடுத்திருக்கிறது’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism