Published:Updated:

“எம்.ஜி.ஆரை பார்த்திருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?” - கேட்கிறார் பள்ளிப்பட்டு நரசிம்மன்

பள்ளிப்பட்டு நரசிம்மன்
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிப்பட்டு நரசிம்மன்

அ.தி.மு.க-வை மீட்டெடுப்பேன் என்றுதான் ஆரம்பத்திலிருந்து தினகரன் சொல்லிவருகிறார். அனைவரும் இணைய வேண்டும் என்கிற கருத்தை வரவேற்றுத்தான் பேசியிருக்கிறார்.

“எம்.ஜி.ஆரை பார்த்திருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?” - கேட்கிறார் பள்ளிப்பட்டு நரசிம்மன்

அ.தி.மு.க-வை மீட்டெடுப்பேன் என்றுதான் ஆரம்பத்திலிருந்து தினகரன் சொல்லிவருகிறார். அனைவரும் இணைய வேண்டும் என்கிற கருத்தை வரவேற்றுத்தான் பேசியிருக்கிறார்.

Published:Updated:
பள்ளிப்பட்டு நரசிம்மன்
பிரீமியம் ஸ்டோரி
பள்ளிப்பட்டு நரசிம்மன்

அ.தி.மு.க-வில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், அரசு கொறடா, டெல்லி சிறப்புப் பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் பள்ளிப்பட்டு நரசிம்மன். தற்போது சசிகலாவின் தீவிர ஆதரவாளராக வலம்வருகிறார். அவரிடம், அ.தி.மு.க-வில் தற்போது நிலவிவரும் சூழல், சசிகலாவின் அடுத்தகட்டத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்...

``சசிகலா - ஓ.பி.எஸ் - டி.டி.வி.தினகரன் மூவரும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?’’

``சின்னம்மா ஆரம்பத்திலிருந்தே அதைத்தான் சொல்லிவருகிறார். எல்லோரும் இணைய வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். அதற்காகத்தான் புரட்சிப் பயணம், மக்கள் சந்திப்பு, கட்சி நிர்வாகிகள் சந்திப்பு எனத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்.’’

``ஆனால், சசிகலா சிறையிலிருந்து வெளிவந்தது முதல் தற்போதுவரை முக்கிய நிர்வாகிகள் யாரும் அவரைச் சென்று சந்திக்கவில்லையே?’’

``நிர்வாகிகள் யாரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற தேவையே இல்லை. தொண்டர்களின் ஆதரவு இருந்தால் போதும். எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து நீக்கியது நீங்கள் சொல்லும் நிர்வாகிகள்தான். ஆனால், அவருக்குப் பக்கபலமாகத் தொண்டர்கள் நின்றார்கள். அதேபோல, தலைவரின் மறைவுக்குப் பிறகு, ஆர்.எம்.வீரப்பன், காளிமுத்து, முத்துச்சாமி என மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலர் அம்மாவுக்கு எதிரணியில்தான் இருந்தார்கள். ஆனால், தொண்டர்களின் ஆதரவோடு அம்மா வென்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் எப்போதும் லாப நஷ்டக் கணக்கோடு அதிகாரத்தை உறிஞ்சுவதில்தான் குறியாக இருப்பார்கள். அவர்களை விடுங்கள்... தொண்டர்கள்தான் முக்கியம். அவர்கள் தற்போது சின்னம்மாவின் பக்கம் நிற்கிறார்கள்.’’

“எம்.ஜி.ஆரை பார்த்திருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?” - கேட்கிறார் பள்ளிப்பட்டு நரசிம்மன்

``ஆனால், `சசிகலாவுக்கு திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் தாண்டி எங்கேயும் தொண்டர்களின் ஆதரவு இல்லை. அதனால்தான் அந்த மூன்று மாவட்டங் களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகிறார்’ என்கிறார்களே?’’

``அப்படியெல்லாம் இல்லை. சின்னம்மா வைத் தவிர வேறு எந்தத் தலைவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்... இ.பி.எஸ்-ஸும் ஓ.பி.எஸ்-ஸும் நிரூபிக்கப்பட்ட, வெற்றிபெற்ற தலைவர்கள் இல்லை. ஆனால், சின்னம்மா நிரூபிக்கப்பட்ட, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். காரணம், 2016-ம் ஆண்டு அம்மா இறந்த பிறகு ஆட்சியைத் தக்கவைத்த பெருமை சின்னம்மாவைத்தான் சேரும்.’’

``அ.தி.மு.க-வில் அப்போதிருந்த அதே ஆளுமை, அதிகாரத்தோடு சசிகலா இப்போதும் இருக்கிறாரா என்ன?’’

``கண்டிப்பாக... அ.தி.மு.க-வில் ஆளுமைமிக்க ஒருவர்தான் தலைவராக வர முடியும். சின்னம்மா ‘உட்கார்’ என்றால் உட்காருவார்கள். வேறு யாருக்காவது ராணுவக் கட்டுப்பாட்டோடு கட்சியை வழிநடத்தும் திறமை இருக்கிறதா... பிறகு எப்படிக் கட்சியை வழிநடத்த முடியும், ஆட்சியைக் காப்பாற்ற முடியும்... ஆனால், அப்போதும் சின்னம்மா ‘தனியாகவே எல்லாவற்றையும் செய்துவிடுவேன்’ என்று சொல்லவில்லை. ‘அனைவரும் இணைந்து நின்றால்தான் இயக்கத்துக்கு நல்லது’ என்கிறார்கள். 2021 தேர்தலில்கூட, தனியாக வேட்பாளரை நிறுத்தவோ, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் முடிவையோ சின்னம்மா எடுக்கவில்லை. இரட்டை இலை வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைத்தார்.’’

``ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-ஸை விடுங்கள்... முதலில் தினகரனும் சசிகலாவும் ஓரணியில் நிற்கிறார்களா?’’

``அ.தி.மு.க-வை மீட்டெடுப்பேன் என்றுதான் ஆரம்பத்திலிருந்து தினகரன் சொல்லிவருகிறார். அனைவரும் இணைய வேண்டும் என்கிற கருத்தை வரவேற்றுத்தான் பேசியிருக்கிறார். சின்னம்மாவின் கருத்தை அவர் எப்போதும் மறுத்துப் பேசியதில்லையே!’’

``ஆனால், அவர் தனியாகக் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறாரே?’’

``புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் கொள்கைப்படித்தான் அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். காலப்போக்கில் சில விஷயங்கள் நடக்கும்.”

``அனைவரும் ஒன்றாக இணைவதற்குத் தடையாக இருப்பது யார் என்று நினைக்கிறீர்கள்?’’

``ஒரே ஒருவர்தான் தடையாக இருக்கிறார். அவர் எடப்பாடி பழனிசாமி. காரணம், அனைவரும் ஒன்றானால் தனக்குத் தலைவர் பதவி போய்விடும், கட்சியில் முக்கியத்துவம் போய்விடும் என அவர் நினைக்கிறார். அவர் தானாக வளர்ந்தவரா, சுயம்புவா... எம்.ஜி.ஆரைப் பார்த்திருக்கிறாரா... அம்மாவை நேரடியாகத் தெரியுமா அவருக்கு... சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்தானே அவர்?’’

``சசிகலாவைக் கட்சியில் இணைத்தால் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சிக்குள் மீண்டும் தலைதூக்கிவிடும் என்கிற கருத்துகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றனவே?’’

``அது உண்மையென்றால், அன்றைக்குத் தனது குடும்பத்தில் ஒருவரையே முதல்வர் ஆக்கியிருக்கலாமே... ஏன் எடப்பாடி பழனிசாமியை ஆக்கினார்... எம்.எல்.ஏ-வாக எடப்பாடிக்கு ஓட்டுப்போட்ட நாங்கள் அவரின் குடும்ப உறுப்பினர் அறிவிக்கப்பட்டிருந்தால் போட்டிருக்க மாட்டோமா... சொல்லுங்கள். இதெல்லாம் திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகள்.’’

``சசிகலாவுக்கு பா.ஜ.க கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. அதனால்தான் மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார் என்கிறார்களே?”

``இங்கு நடக்கும் எல்லா விஷயங்களும் அவர்களுக்குத் தெரியும். நல்ல விஷயங்களுக்கு அவர்கள் எப்போதுமே ஆதரவு கொடுப்பார்கள். அதனால்தான், டெல்லியில் ஓ.பி.எஸ்-ஸும், இ.பி.எஸ்-ஸும் பார்க்க முயன்றபோது அவர்கள் முகம் கொடுத்துப் பேசவில்லை. அ.தி.மு.க ஒன்றாக இணைய வேண்டுமென்பது சின்னம்மாவின் விருப்பம். பா.ஜ.க-வும் அப்படித்தான் விரும்புகிறது. ஓ.பி.எஸ்-ஸும் தற்போது அப்படிப் பேச ஆரம்பித்திருக்கிறார்.’’

``ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக ‘அன்புச் சகோதரர்’ என அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு அப்படி அழைப்பு விடுக்கவில்லையே?’’

``வழக்கு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருக்கும் இடையில்தான் நடந்தது. அதனால் அவரை நேரடியாகக் குறிப்பிட்டுச் சொன்னார்.”

``சசிகலா பணத்தைக் கொடுத்துத்தான் தான் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் சேர்க்கிறார் என்று குற்றம்சாட்டப்படுகிறதே?’’

``தவறான தகவல். தன்னெழுச்சியாகத்தான் தொண்டர்களும் பொதுமக்களும் சின்னம்மாவை வந்து சந்திக்கிறார்கள். அவரை வீட்டில் வந்து சந்திப்பவர்களும்கூட எளிய தொண்டர்கள்தான். வீடுகளில் ரெய்டு நடக்கும் அளவுக்கான பண முதலைகள் அல்ல!’’