கோவை சுகுணாபுரம் பள்ளி வாசலில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறாடாவுமான எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி,


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“இஸ்லாமியர்களுக்கு நோன்புக் காலத்தில் தேவையான உதவிகளை அதிமுக அரசு செய்துவந்தது. ஹஜ் பயணத்துக்கான தொகையை ரூ.10 கோடியாக உயர்த்திக்கொடுத்தோம். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளன. அதிமுக ஆட்சியில் சாலைகள் மேம்பாடு தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. திமுக அரசு அதை ரத்து செய்துள்ளது. சாலைகள் சீரமைக்கும் பணியைச் செய்யவில்லை.

குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. கோவை மக்களைப் புறக்கணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணியை கிடப்பில் போட்டு வைத்துள்ளது. விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு செயல்படாத நிர்வாகமாக கோவை மாநகராட்சி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகம் முழுவதும் பாலியல் வழக்குகள் அதிகரித்துள்ளன.

மக்களுக்குப் பாதுகாப்பு தரும் அரசாக திமுக மாற வேண்டும். விளம்பரத்தில்தான் தற்போதைய அரசு ஒடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. இனியாவது செய்ய வேண்டும்” என்றார்.