அ.தி.மு.க-வின் தி.நகர் எம்.எல்.ஏ., சத்யா என்கிற சத்யநாராயணன். அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும் அமைச்சருக்குரிய அத்தனை செல்வாக்குடன் கட்சியிலும் ஆட்சியிலும் வலம்வருபவர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர். இவர் மீது, ‘அடுத்தடுத்த பத்திரப்பதிவுகள் மூலம் கொடைக்கானல், சென்னை என சொத்துகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார்’ என்ற சர்ச்சைப் புகார்களைக் கிளப்பிவருகின்றனர் அவருடைய எதிரிகள்.

தமிழகத்தின் அதிகார மையமாக போயஸ் கார்டன் இருந்தவரை, தங்கள்மீது எந்தவிதமான புகாரும் சென்றுவிடாத வகையில் அ.தி.மு.க-வினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுவந்தனர். அப்படியும் புகாருக்கு ஆளானவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், ஒரே நாளில் பதவியிறக்கம் செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறின.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க பிரமுகர்கள் பலரும் குறுநில மன்னர்கள்போல் மாறிவிட்டனர். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள எம்.எல்.ஏ-க்களின் தயவு வேண்டும் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மௌனம் சாதிக்கிறார். விளைவு, கட்சிப் பதவிகள் உள்பட அனைத்திலும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.

இதனால் கொந்தளிக்கும் கீழ்மட்ட நிர்வாகிகள், தலைமையகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் சம்பவங்களும் நடந்தன. ``கோட்டையில் ஆதிக்கம் செலுத்தும் எம்.எல்.ஏ-க்கள் வரிசையில் தி.நகர் எம்.எல்.ஏ-வும், தென்சென்னை வடக்கு மா.செ-வுமான சத்யா முதல் இடத்தில் இருக்கிறார்’’ என்கின்றனர் அ.தி.மு.க-விலேயே இருக்கும் அவருடைய எதிரிகள்.

சம்பவம் 1:

2018, மே மாதம் 25-ம் தேதி கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 3.88 ஏக்கர் புஞ்சை நிலம், எஸ்.ரவீந்திரன் என்பவரிடமிருந்து கணேஷ்குமார் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சந்தை மதிப்பு 20 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதி கணேஷ்குமாரிடமிருந்து சத்யநாராயணன் (தி.நகர் எம்.எல்.ஏ சத்யா) பெயருக்கு எழுதிக் கொடுக்கப் பட்டுள்ளது. இதற்கான சந்தை மதிப்பு, சில லட்சம் ரூபாய் எனக் கூறுகிறார்கள். அடுத்து, கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப் பூண்டி எம்.எல்.ஏ) பெயருக்கு 2018, ஆகஸ்ட் 10-ம் தேதி அதே 3.88 ஏக்கர் நிலத்தில் 25 சென்ட் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதே இடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வி.என்.ரவிக்கு (விருகம் பாக்கம் எம்.எல்.ஏ) 25 சென்ட் நிலம் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்ற மாதம் 21-ம் தேதி கணேஷ்குமாரிடமிருந்து அ.பிரபு (கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ) பெயருக்கு வடக்குப் பக்கம் மையத்தில் உள்ள 25 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரைத் தவிர, பானு பிரசாத், ராம்குமார், பூர்ணிமா பிரித்தி, கீர்த்தி வாசகர் ஆகியோரின் பெயர்களிலும் மீதம் உள்ள நிலங்களைப் பிரித்துப் பதிவுசெய்துள்ளனர்.

இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென் றால், அ.ம.மு.க தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, கடந்த ஜூலை 20-ம் தேதி முதல்வரைச் சந்தித்து தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நடந்த ஒரே மாதத்தில் கொடைக் கானலில் அவருக்கு நிலத்தை வாங்கிக் கொடுத் திருக்கிறார் சத்யா. சத்யாவால் நிகழ்த்தப்பட்ட இந்தப் பகிரங்கப் பத்திரப்பதிவு, கோட்டை வட்டாரத்தின் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

‘‘நிலத்தை வாங்கிக் கொடுத்ததன் மூலம், தனக்கு ஆதரவான டீமை உருவாக்கிக்கொள்ளும் வேலை களைச் செய்துவருகிறார் சத்யா. கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்யாமீது ஏராளமான புகார்கள் வந்துள்ளன. ஆனாலும் அவரை அசைக்க முடியவில்லை. கட்சிப் பதவியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே எம்.எல்.ஏ-க்களுக்கு நிலத்தைப் பரிசாக அளித்திருக்கி றார். `மாவட்டப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கினால், வேறு முடிவை எடுக்க வேண்டிவரும்’ என்று முதல்வரையே மறைமுகமாக சத்யா மிரட்டுகிறார்” என்றெல்லாம் அவர்மீது புகார் வாசிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

சம்பவம் 2:

வடபழநியில் சத்யாவின் வீட்டுக்கு அருகே `பாலாஜி சீனிவாஸ்’ என்ற பெயரில் பங்களா ஒன்று இருக்கிறது. இதை பாதிரியார் இஸ்ரேல் ஜெபராஜ் என்பவர் நான்கு கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தார். வீட்டை வாங்கிய நாள்முதல், பல்வேறு இன்னல் களை பாதிரியார் அனுபவித்துவந்ததாகச் சொல் கின்றனர். இந்த வீடு இப்போது சத்யாவின் வசம் வந்துவிட்டது.

‘‘வீட்டை வாங்கியதிலிருந்து பாதிரியாரால் அங்கு நிம்மதியாக வசிக்க முடியவில்லை. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தாலும், சத்யாவுக்கு ஆதரவாகவே அனைத்தும் நடந்துள் ளன. இதனால் வேறு வழியில்லாமல் சத்யாவுக்கே அந்த வீட்டை விற்றுவிட்டார் பாதிரியார். கடந்த ஜனவரி 30-ம் தேதி, சத்யா நடத்திவரும் ‘ரோஸ் லேண்ட் பிராப்பர்ட்டீஸ்’ என்ற நிறுவனத்தின் பெயருக்கு பாதிரியாரின் வீடு பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ரோஸ்லேண்ட் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், கடந்த சில வருடங் களாகச் செயல்படாமல் இருக்கிறது என்பதுதான். அதாவது, இல்லாத நிறுவனத்தின் பெயரில் பவர் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர் இதன் உள்விவரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்து பாதிரியார் இஸ்ரேல் ஜெபராஜிடம் பேச முயன்றோம். அவரின் தரப்பு, ``பேச விரும்பவில்லை’’ என்றது.

``நிலம், வீடு ஆகியவற்றை வாங்கும்போது, நாள், கிழமை, நேரம், வாஸ்து ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பார் சத்யா. அதில் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலான பத்திரப்பதிவுகள் புதன்கிழமைகளில்தான் நடக்கும். பாதிரியார் வீட்டுக்கான பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கப்பட்டதும் புதன்கிழமையில்தான் (30.1.2019). கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பெயருக்கு பத்திரப்பதிவு நடந்த 2019 ஆகஸ்ட் 21-ம் தேதியும் புதன்கிழமைதான். பாதிரியாரிடம் பவர் வாங்கிய அதே தினத்தில், அதாவது ஜனவரி 30-ம் தேதி அன்றே ஆந்திராவில் சத்யாவின் மனைவி ஜெயசித்ரா பெயரில் நிலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் புதன்கிழமைதான்.

மத்திய சென்னைக்கு உட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில், சத்யா தொடர்பான பத்திரப் பதிவுகள் அடிக்கடி நடந்துவருகின்றன. ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர் உள்ளிட்ட இடங்களைத்தான் முக்கிய இலக்காக வைத்துச் செயல்படுகின்றனர். தென் சென்னை வடக்கு மாவட்டம் முழுவதும் சத்யாவின் ஆதிக்கத்தில் இருக்கிறது. இந்தப் பகுதி களில் எந்த வேலை நடந்தாலும் `அவருக்கு உரியது’ சென்றுவிட வேண்டும். ஆட்சி முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுக்காலம் மட்டுமே இருக்கும் நிலையில், முடிந்தவரை `சேர்த்துக்கொள்வதில்’ உறுதியாக இருக்கிறார்’’ என்கின்றனர் தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க-வினர்.

கொடைக்கானல் டீலிங் குறித்து விளக்கமறிய, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். ‘‘நான் சொத்து வாங்கியது உண்மைதான். 2016-ல் நான் உட்பட ஆறு எம்.எல்.ஏ-க்கள் தலா 25 சென்ட் நிலத்தை இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானலில் வாங்கினோம். இது என்னுடைய சம்பளப் பணத்திலிருந்து முறையாக வாங்கப்பட்டது. இதற்கான ஆவணங்களும் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக தினகரனுடன் இருந்த காரணத்தால், அப்போது பத்திரப் பதிவு செய்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன். இப்போது, என் தொகுதியின் நன்மை கருதியும், தொகுதிக்கு ஆக்கபூர்வமான திட்டங்களைக் கொண்டு வருவதற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். பத்திரப்பதிவு செய்வதற்கும் இப்போதுதான் நேரம் கிடைத்தது. மற்றபடி, இதில் முறைகேடாக எதுவும் நடைபெறவில்லை’’ என்றார்.

பத்திரப்பதிவு குறித்து விளக்கம் பெறுவதற்காக தி.நகர் எம்.எல்.ஏ அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு தரையில் அமர்ந்திருந்த சத்யா, நம்மை வரவேற்றார். ‘‘தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது தான் என் வழக்கம். நீங்கள் மேலே உட்காருங்கள். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன்’’ என்றவரிடம், அவர்மீதான சர்ச்சை களைப் பட்டியலிட்டோம்.

ஓவர் டு சத்யா...

‘‘முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். நான் கவுன்சிலர் ஆவதற்கு முன்பு, ஃபைனான்ஸ் தொழில் செய்துவந்தேன். பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன். இதெல்லாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடந்த விஷயங்கள். எம்.எல்.ஏ ஆன பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து விலகிவிட்டேன். சில நேரங் களில் ஏதாவது லாபம் கிடைக்கும் என நினைத்தால், பவர் வாங்கி விற்பனை செய்வேன். இவை அனைத் தையும் நான் சம்பாதித்த பணத்திலிருந்து செய்கி றேன். இதற்கு முறையான வருமான வரியும் கட்டுகி றேன். இதில் என்ன தவறு இருக்கிறது?”

‘‘உங்கள் மனைவி ஜெயசித்ரா பெயரிலும் நிலம் வாங்கப்பட்டுள்ளதே?’’

‘‘என் மனைவி, அவரிடம் உள்ள சேமிப்புப் பணம் குறித்துச் சொன்னார். அதை வைத்து கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் ஒரு நிலத்தை அவரின் பெயரில் வாங்கினேன். கவுன்சிலர் தேர்தல், எம்.எல்.ஏ தேர்தல் என அனைத்திலும் முறையான கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் காட்டியிருக்கிறேன்.”

‘‘கொடைக்கானலில் எம்.எல்.ஏ-க்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பது சர்ச்சை ஆகியுள்ளதே?’’

‘‘நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சில இடங் களை வாங்குவோம். அப்படி வாங்கியது தான் கொடைக்கானல் வில்பட்டி நிலம். வி.என்.ரவி, கே.எஸ்.விஜயகுமார், கள்ளக்குறிச்சி பிரபு என நாங்கள் அனைவருமே நண்பர்கள். நிலத்தை வாங்கியபோது, என் சம்பளக்கணக்கைப் பரா மரிக்கும் வங்கியில் இருந்துதான் செக் கொடுத்தேன். நியாயமாக வந்த வருமானத்தில்தான் நிலம் வாங்கினேன். எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்ததால் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால், வேறு யாராவது நிலம் வாங்கினால்கூட என் பினாமி என சிலர் கிளப்பிவிடுகிறார்கள்.’’

‘‘ரோஸ்லேண்ட் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனம் இப்போது இயங்கவில்லை. அதன்பெயரில் பாதிரியார் வீட்டுக்கு பவர் வாங்கியது சரிதானா?’’

‘‘அந்த நிறுவனம் இயங்கவில்லை எனச் சொல்வதில் உண்மையில்லை. அது இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் அந்த நிறுவனத்தின் கணக்கு இன்னும் ஆக்டிவாகத்தான் இருக்கிறது. நிறுவனத்தின் பெயரில் இடம் வாங்கியதால், அந்தக் கணக்கின் மூலம்தான் பணம் கொடுக்கிறேன். மிரட்டி வீட்டை வாங்கினேன் என்றெல்லாம், அடிப்படை ஆதாரமற்றக் குற்றசாட்டுகளைக் கிளப்பி விடுகிறார்கள்.

அம்மா இருக்கும்போதே இதைவிட பெரிய அவதூறுகளைச் சந்தித்தவன் நான். கட்சியில் தொண்டனாகப் பணியாற்றும்போதே என்னைப்பற்றி இல்லாத சில விஷயங்களை அம்மாவிடம் கூறினார்கள்.

உடனே அம்மா என்னைக் கூப்பிட்டு, `என்ன தொழில் செய்கிறாய்?’ எனக் கேட்டார். நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகக் கூறினேன். `வேறு எதுவும் செய்வது இல்லையா?’ என்றார். நான் உடனே, `அம்மா, உங்களிடம் என்ன சொல்லியிருப் பார்கள் என எனக்குத் தெரியும். ஆனால், நான் அப்படிக் கிடையாது’ என விளக்கினேன். இதன் பிறகே எனக்கு கட்சியில் பொறுப்பும் தேர்தலில் சீட்டும் கொடுத்தார். இதுதான் உண்மைக்குக் கிடைக்கும் பரிசு’’ என்றவர்,

‘‘அரசியலில் எனக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அவதூறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். கட்சியில் சரியாக வேலைபார்க்காத ஒருவரை பொறுப்பிலிருந்து நீக்கினேன். அந்தக் கோபத்தில் இப்படிச் செய்கிறார் என நினைக்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எனக்கு நெருக்கம். அவரும் இதுதொடர்பான தகவல்கள் வெளியாகும்போது விளக்கம் கேட்பார். நான் அவரிடம் உண்மை நிலையை விளக்குவேன். கட்சிப் பதவிக்குப் பணம் வாங்கினேன் என எங்கேயாவது என்மீது புகார் வந்திருக்கிறதா... சொல்லுங்கள். உண்மை எப்போதும் ஜெயிக்கும் சார்’’ என்றபடியே நமக்கு விடைகொடுத்தார்.