‘‘நாட்டிலுள்ள 30 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். இதில் ஒப்பந்த விவசாயம் என்பது, இரு சமமற்ற சக்திகளுக்கு இடையிலான ஒப்பந்தமாகவே இருக்கும். இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், பதுக்கல், கறுப்புச் சந்தையில் விற்பது, அதிக லாபம் சம்பாதிப்பது போன்றவற்றில் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது” - மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, மாநிலங் களவையில் இப்படிக் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார் அ.தி.மு.க எம்.பி-யான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.

அதேநேரம், மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வேளாண் சட்டத்தை ஆதரித்து தனது கருத்தைப் பதிவுசெய்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேசியதோடு, ‘மாநிலங்களவையில் பேசியது தொடர்பாக எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்கப்படும்’ என்றும் சொல்லியிருந்தார்.

அ.தி.மு.க வட்டாரத்தில் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், எஸ்.ஆர்.பி-யிடம் பேசினோம்.

‘‘வேளாண் சட்ட மசோதாவை நீங்கள் எதிர்ப்பதற்கு என்ன காரணம்?’’

‘‘விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) என்பதை எந்தக் காலத்திலும் மாற்றக் கூடாது. அது, விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்று. அது இல்லாவிட்டால், விவசாயப் பொருள்களுக்கான நியாயமான விலை கிடைக்காமல் போய்விடும் என்கிற விவசாயிகளின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘எம்.எஸ்.பி-யை எக்காரணம் கொண்டும் குறைக்க மாட்டோம்’ எனக் கூறிவிட்டார். நான் பேசி முடித்த பிறகு, எம்.எஸ்.பி-யைக் கொஞ்சம் உயர்த்தியும்விட்டார்கள். அதை இன்னும் அதிகப்படியாகக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறேன்.”

‘‘குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது மட்டுமே போதுமானது என நினைக்கிறீர்களா?”

‘‘அதை எந்தக் காலத்திலும் கைவிட்டுவிடக் கூடாது என்கிறேன்.’’

‘‘மாநிலங்களவையில் மசோதாவை எதிர்த்துப் பேசிவிட்டு, ஆதரித்து வாக்களித்தது முரண்பாடாக இல்லையா?”

``எங்கே நான் வாக்களித்தேன்... சும்மா கையைத் தூக்கச் சொன்னார்கள். வாக்களிப்பது என்பதெல்லாம் தமாஷான வேலை.”

``இதே சட்டத்தை மக்களவையில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆதரித்துப் பேசியதை நீங்கள் விமர்சனம் செய்திருக்கிறீர்களே..?”

‘‘விவசாயப் பிரச்னைகளைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. மக்களவைக்கு அவர் மிகவும் புதியவர். ஏதோ எதிர்பார்ப்பில் எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்.’’

‘‘மாநிலங்களவையில் நீங்கள் பேசியது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறாரே?’’

‘‘அவர் விளக்கமெல்லாம் கேட்க மாட்டார்.’’