Published:Updated:

``ஆளுநர் தன் கடமையைச் செய்கிறார்... அரசின் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்!" - ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்

``நீட் விலக்குக்காகத் தமிழக அரசு எடுக்கும் அனைத்துச் சட்ட நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க ஆதரவு தரும்." - ஓ.பி.எஸ்.

``ஆளுநர் தன் கடமையைச் செய்கிறார்... அரசின் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்!" - ஓ.பி.எஸ்

``நீட் விலக்குக்காகத் தமிழக அரசு எடுக்கும் அனைத்துச் சட்ட நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க ஆதரவு தரும்." - ஓ.பி.எஸ்.

Published:Updated:
ஓ.பி.எஸ்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பிய விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதாகச் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., புதிய பாரதம் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், `விரைவில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தி, நீட் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், ``நீட் விலக்குக்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்துச் சட்ட நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க ஆதரவு தரும்" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்காதது குறித்து, "முன்னதாக ஜனவரி 8-ம் தேதி அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே நீட் தேர்வு ரத்து குறித்து அ.தி.மு.க-வின் கருத்துகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ``நீட் தேர்வை எப்போதும் அ.தி.மு.க எதிர்க்கும். இந்த நீட் தேர்வு தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. இன்று ஏற்பட்டிருக்கும் அத்தனை விளைவுகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் ஆட்சிதான் முழுக் காரணம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் தன் கடமையைச் செய்கிறார்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism