Published:Updated:

`முதல்வரே என்னைப் பாராட்டினார்!’ - அரியலூர் ஆலோசனைக் கூட்டத்தில் கொறடா ராஜேந்திரன் உற்சாகம்

அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டமன்றத் தேர்தலைவிட நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றிருந்தோம். முதல்வரே என்னை அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

 ராஜேந்திரன்
ராஜேந்திரன்

தி.மு.க-வின் பொய் பிரசாரங்கள் இனி மக்கள் மத்தியில் எடுபடாது. அ.தி.மு.க-வை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இனி நமக்கு நல்ல காலமே. நாடாளுமன்றத் தேர்தலில் பெயர் எடுத்துக்கொடுத்ததுபோல் உள்ளாட்சித் தேர்தலில் செய்ய வேண்டும் உங்களுக்கு நான் துணையாக இருக்கிறேன் என்று கொறடா தொண்டர்களை உற்சாக மூட்டினார்.

`முதல்வரே என்னைப் பாராட்டினார்!’ - அரியலூர் ஆலோசனைக் கூட்டத்தில் கொறடா ராஜேந்திரன் உற்சாகம்

அரியலூரில் அ.தி.மு.க, சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அரசுக் கொறடாவும் மாவட்டச் செயலாளருமான தாமரை. எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ, ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கொறடா தாமரை ராஜேந்திரன், ``தி.மு.க-வின் பொய் பிரசாரங்கள் இனி மக்கள் மத்தியில் எடுபடாது. அ.தி.மு.க-வை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இனி நமக்கு நல்ல காலமே. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். ஆனால், அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டமன்றத் தேர்தலைவிட நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றிருந்தோம். முதல்வரே என்னை அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.

`முதல்வரே என்னைப் பாராட்டினார்!’ - அரியலூர் ஆலோசனைக் கூட்டத்தில் கொறடா ராஜேந்திரன் உற்சாகம்

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். முக.ஸ்டாலினின் பொய் பிரசாரம் எடுபடவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென்றால் நாம் இப்போதிலிருந்தே முழுமூச்சாகப் பாடுபட வேண்டும். தி.மு.க.-வினரின் பொய் பிரசாரம், தவறான வாக்குறுதிகள், நமது அரசு செய்த சாதனைகள், திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

நாம் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்க வேண்டும். அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் வருகிற 15, 16 ஆகிய இரு தினங்களிலும் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான வளர்மதி, அரசுக் கொறடாவும் மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சதன்பிரபாகர் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நகர்மன்றத் தலைவருக்கு ரூ.10,000, நகர்மன்ற வார்டு உறுப்பினருக்கு ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1,500, பேரூராட்சி தலைவருக்கு ரூ.5,000, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.5,000, ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.3,000 செலுத்தி விருப்ப மனுக்கள் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

`முதல்வரே என்னைப் பாராட்டினார்!’ - அரியலூர் ஆலோசனைக் கூட்டத்தில் கொறடா ராஜேந்திரன் உற்சாகம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ? அவரது வெற்றிக்கு நாம் அயராது பாடுபட வேண்டும் என்றார். இந்த முறையும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பீர்கள் என நம்புகிறேன்” என்று முடித்துக்கொண்டார்.