Published:Updated:

``எடப்பாடி ஆட்சி எப்போது வரும் என மக்கள் ஏங்குகின்றனர்" - பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

``சொத்துவரி உயர்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்த முடிவெடுக்கவே தயக்கம் இருக்கிறது. இதை யாரும் விரும்பவில்லை.” - பொள்ளாச்சி ஜெயராமன்

``எடப்பாடி ஆட்சி எப்போது வரும் என மக்கள் ஏங்குகின்றனர்" - பொள்ளாச்சி ஜெயராமன்

``சொத்துவரி உயர்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்த முடிவெடுக்கவே தயக்கம் இருக்கிறது. இதை யாரும் விரும்பவில்லை.” - பொள்ளாச்சி ஜெயராமன்

Published:Updated:
பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக-வின் ஒற்றைத் தலைமையாகத் தேர்ந்தெடுக்க திருப்பூர் மாநகர் அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து முன்னாள் துணை சபாநாயகரும், அந்த மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கட்சி சிறப்பாகச் செயல்பட்டாலும், இன்னும் வேகமாகச் செயல்பட்டு அம்மா, தலைவர் காலத்தில் செயல்பட்டதுபோலக் கொண்டு செல்ல வேண்டும்.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்காக ஒற்றைத் தலைமை என்கிற முடிவை எடுத்திருக்கிறோம். அம்மாவிடம் மிகுந்த பயிற்சி பெற்று நான்கரை ஆண்டுக்காலம் நல்லாட்சி வழங்கி, கட்சியையும் கட்டிக்காத்த அண்ணன் எடப்பாடியார் ஒரே தலைமையாக வர வேண்டும் என்று ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓ.பி.எஸ் அண்ணன், இ.பி.எஸ் அண்ணன் கையெழுத்து போட்டுத்தான் பொதுக்குழு கூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். ஒருமனதாக அண்ணன் இ.பி.எஸ் ஒற்றைத் தலைமையாக வெற்றிகரமாக தேர்ந்தெடுக்கப்படுவார். யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

ஒரே தலைமை இருக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு. கட்சியில் தலைவர் காலத்தில் இருந்தவன் என்கிற அடிப்படையில் சொல்கிறேன். முக்கியத் தீர்மானங்கள் அனைத்தும் பொதுக்குழுவில்தான் கொண்டுவரப்பட்டன. அதிமுக-வில் பொதுக்குழுதான் அதிகாரம்மிக்க அமைப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக-வை, அஇஅதிமுக என பெயர் மாற்றம் செய்தது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அப்படித்தான் எடுக்கப்பட்டன. சொத்து வரி உயர்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்த முடிவெடுக்கவே தயக்கம் இருக்கிறது. இதை யாரும் விரும்பவில்லை. அதைப் போக்கும்விதமாக, இன்றைய சூழலுக்கு வலுவான தலைமை தேவை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக-வை எதிர்த்து எதிர்காலத்தில் நல்லாட்சி தரக்கூடிய சிறந்த தலைமை என்றால் அது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மக்களின் அன்பையும் பெற்ற எடப்பாடியார்தான். எப்போது மீண்டும் எடப்பாடியார் ஆட்சி வரும் என மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அதனால் பொதுக்குழுவில் 100 சதவிகிதம் பேர் எடப்பாடியாரை தலைமையாகத் தேர்ந்தெடுக்கவிருக்கிறோம். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் என்று யாராக இருந்தாலும் தொண்டர்கள், பொதுக்குழுதான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு பவர் கொடுத்து, தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பது அடிமட்ட தொண்டன்தான்.

அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக - பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் பொதுக்குழுவைக் கூட்டவிருக்கிறோம். யாரையும் அவமானப்படுத்த வேண்டிய எண்ணம் இல்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் எங்களுக்கு அண்ணன்தான். தலைமை என்று வரும்போது ஒற்றைத் தலைமையாக அது இ.பி.எஸ்-தான்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism