Published:Updated:

“தமிழீழச் சிந்தனையில் இப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறேன்!”

 கல்யாண சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண சுந்தரம்

- அ.தி.மு.க-வில் கல்யாண சுந்தரம்

“தமிழீழச் சிந்தனையில் இப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறேன்!”

- அ.தி.மு.க-வில் கல்யாண சுந்தரம்

Published:Updated:
 கல்யாண சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண சுந்தரம்
‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்...’ என்ற `பிக் பாஸி’ன் வார்த்தைகளைத் தமிழக அரசியல் களத்தில் இனி அடிக்கடி எதிர்பார்க்கலாம். இந்த வரிசையில், ‘நாம் தமிழர் கட்சி’யின் இளைஞரணிப் பொறுப்பிலிருந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம், அண்மையில் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்...
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘திராவிட அரசியலுக்கு எதிராக தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திவந்த நீங்கள், திடீரென திராவிட அரசியலில் கால் பதித்ததன் நோக்கம் என்ன?’’

‘‘தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்த போராட்டமாகத்தான் தமிழ்த் தேசிய அரசியலில் என் பயணம் இருந்திருக்கிறது. ‘நாம் தமிழர்’ கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, தமிழ்நாட்டு மக்களின் நலன் பேணும் ஓர் இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்ள விரும்பியபோது, என்னுடைய தேர்வு அ.தி.மு.க-வாக இருக்கிறது. காரணம், சாதி, மதம் கடந்து எல்லா மக்களுக்குமான இயக்கமாக அ.தி.மு.க செயல்பட்டுவருவது தான்!’’

‘‘தமிழ், தமிழர் நலனை முன்வைத்து அரசியல் களமாடிவரும் ‘திராவிடக் கட்சிகளை தமிழ்த் தேசியவாதிகள் எதிர்ப்பது அரசியல் புரிதலின்மை’ என்ற வாதத்தை இப்போது ஏற்றுக்கொள்கிறீர்களா?’’

‘‘இதை அப்படிப் பார்க்க வேண்டாம். கோட்பாட்டுரீதியாக திராவிடத்தை ஏற்கிறோமா மறுக்கிறோமா என்பதெல்லாம் வேறு. அதெல்லாம் ‘திராவிடர் கழகம்’ போன்ற அமைப்புகளோடு நாம் நடத்த வேண்டிய மிகப்பெரிய விவாதம். பெரியாரின் ‘கடவுள் மறுப்புக் கொள்கை’யில் பெரிய அளவில் அ.தி.மு.க மாறுபட்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது. எல்லா சமயங்களைப் பின்பற்றுபவர் களுக்கும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களுக்குமான ஓர் அமைப்பாகத்தான் அ.தி.மு.க இருக்கிறது. திராவிடமா, தமிழ்த் தேசியமா என்ற தத்துவார்த்த அடிப்படை களையெல்லாம் தாண்டி, யதார்த்த அரசியல் களத்தில், தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் அ.தி.மு.க-வை நான் பார்க்கிறேன். அதன் அடிப்படையிலேயே கட்சியிலும் இணைந்திருக்கிறேன்!’’

‘‘தமிழீழம் அமைய வேண்டும் என்ற உங்களது நீண்டகால கோரிக்கையை, தற்போது நீங்கள் இணைந்துள்ள அ.தி.மு.க ஏற்காதே?’’

‘‘2009 இறுதிப்போரில் நடந்திருப்பது இனப்படுகொலை. இந்த இனப்படுகொலைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றுதான் அம்மையார் ஜெயலலிதாவே தீர்மானம் நிறைவேற்றியிருக் கிறார். இனப்படுகொலைக்குத் தீர்வு என்று சொல்கிறபோதே, இரண்டு தனி நாடுகளாகத்தானே அது பார்க்கப்படும்.’’

‘‘தமிழீழம் என்ற வார்த்தை தீர்மானத்தில் பயன்படுத்தப்படவில்லை. அந்தக் கோரிக்கையையும் அ.தி.மு.க ஆதரிப்பது இல்லை. எனில், இந்த விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?’’

‘‘தனித் தமிழீழம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆனால், ஓர் இனம் மற்றோர் இனத்தின் மீது தொடுத்த இனப்படுகொலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘2009 இறுதிப்போரில், நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை’ என்பதை நிரூபிக்கத்தான் நாங்களும் போராடிக்கொண்டிருந்தோம். எனவே, இனப்படுகொலை என்று நிரூபிக்கப்பட்டு விட்டால், அது இரண்டு தனி நாடுகளுக்கிடையே நிகழ்ந்த யுத்தம்தான். எனவே, தனி ஈழம் என்ற என் கொள்கைக்கு நெருக்கமாக அ.தி.மு.க நிற்கிறது.’’

“தமிழீழச் சிந்தனையில் இப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறேன்!”

‘‘அப்படியென்றால், ‘தனித் தமிழீழம் அமைவதுதான் நிரந்தரத் தீர்வு’ என்ற கொள்கையில், இப்போதும் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?’’

‘‘இதுவரையிலும் நான் போராடிவந்த என் சிந்தனையில் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். அந்தச் சிந்தனைக்கு நெருக்கமாக இருக்கிற கட்சியாகவே அ.தி.மு.க-வை நான் பார்க்கிறேன். அமைச்சர்கள் மற்றும் முதல்வரோடு ஜனநாயகத் தன்மையோடு நமது கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் தன்மை அ.தி.மு.க-வில் இருக்கிறது. எனவே, எனக்கு வாய்ப்பு கிடைக்கிறபோது என் மனதிலுள்ள கருத்துகளையும் அவர்களோடு பகிர்ந்துகொள்வேன்.’’

‘‘நாம் தமிழர் கட்சியிலேயே சாதிரீதியாக வேட்பாளரை நிறுத்த முயன்ற கல்யாண சுந்தரம், தற்போது அ.தி.மு.க-விலும் அவர் சார்ந்த சாதியப் பின்புலத்துடனேயே இணைந்திருக்கிறார் என்கிறார்களே?’’

‘‘நாம் தமிழர் கட்சியில் நான் இருந்தபோதும்கூட இப்படியொரு பார்வையை வேண்டுமென்றே என்மீது சிலர் வைத்தனர். மூன்று மாதங்களுக்கு முன்புவரை அண்ணன் சீமானுடன்தான் பயணித்திருக்கிறேன். அவரும் நானும் ஒரே சாதி அல்ல. வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதும் அண்ணன் சீமான்தான். எனவே, இந்தக் குற்றச் சாட்டை அவரும் என்மீது சுமத்த முடியாது. வேட்பாளராக என்னால் பரிந்துரைக்கப்பட்டவர் களிலும் பலர் மாற்றுச் சாதியைச் சேர்ந்தவர்கள். நான் நியமனம் செய்திருந்த 10 மாவட்டப் பொறுப்பாளர்களில், ஒருவர் மட்டுமே என் சுய சாதியைச் சேர்ந்தவர். அந்த ஒருவரும்கூட இப்போதும் நாம் தமிழர் கட்சியில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார். என்னோடு வெளியே வரவில்லை. இதுதான் உண்மை நிலை!

2016 தேர்தலின்போது, இதே அமைச்சர் வேலுமணியை எதிர்த்து பரப்புரை செய்திருக்கிறேன். அப்படியென்றால், அன்றைக்கு அவரும் நானும் வேறு வேறு சாதியா? எனக்கு 37 வயதாகிறது. இன்றைய தேதி வரையில் எந்தவொரு சாதிச் சங்கத்திலும் என் பெயரும் இல்லை... சாதிச் சங்கத்துக்காக ஒரு ரூபாய்கூட நான் கொடுத்ததும் இல்லை.’’

‘‘பா.ஜ.க ஆதரவு மனநிலைகொண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே கல்யாண சுந்தரத்தைக் கட்சியில் சேர்த்திருக்கிறார் இ.பி.எஸ் என்கிறார்களே..?’’

‘‘இது தவறான செய்தி. முதல்வர் தலைமையில் நான் கட்சியில் இணைந்த பிறகு, துணை முதல்வரையும் நேரில் சந்தித்தேன். அவரும் என்னை அன்போடு வாழ்த்தினார்.’’