Published:Updated:

அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார்? - ரேஸில் முந்தும் இருவர்!

அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களில் ஓர் இடம் பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இரு இடங்களுக்கு அ.தி.மு.கவில் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது.

`ராஜ்யசபா ரேஸில் முந்தப்போவது யார்?’ - அ.தி.மு.க-வில் நடக்கும் உச்சக்கட்ட விவாதம்!
`ராஜ்யசபா ரேஸில் முந்தப்போவது யார்?’ - அ.தி.மு.க-வில் நடக்கும் உச்சக்கட்ட விவாதம்!

தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஆறு பேரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் இரண்டு பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் அந்தப் பதவிக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
விகடன்

மொத்தம் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியிடங்களில் தி.மு.கவுக்கு மூன்று இடங்களும், அ.தி.மு.கவுக்கு மூன்று இடங்களும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் தி.மு.க சார்பில் ஓர் இடம் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடத்துக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவிர, தொ.மு.ச பொதுச் செயலாளர் பி.சண்முகமும், மூத்த வழக்கறிஞர் வில்சனும் மற்ற இரு வேட்பாளர்களாக தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டு அவர்கள் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்களில் ஓர் இடம் பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இரு இடங்களுக்கு அ.தி.மு.க-வில் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும், மூத்த தலைவர் தமிழ்மகன் உசேனும் எம்.பி பதவிக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.

தமிழ்மகன் உசேன் - கே.பி.முனுசாமி
தமிழ்மகன் உசேன் - கே.பி.முனுசாமி
விகடன்

இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று அ.தி.மு.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்து, தர்மயுத்தம் தொடங்கியபோது, அவருடன் கே.பி முனுசாமியும் ஆதரவாளராக களமிறங்கினார். தொடர்ந்து ஓ.பி.எஸ் அணியில் இருந்துவந்த அவர், மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்தபோது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரானார். மேலும், அ.தி.மு.க மனுக்கள் குழு உறுப்பினராகவும் முனுசாமி இருந்துவருகிறார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தச் சூழலில் அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் இரு வேட்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட உள்ளார்.

இசக்கி சுப்பையா அ.தி.மு.க-வுக்கு ஏன் போகிறார்?- டி.டி.வி சொல்லும் வேறு காரணம்

இதேபோல் தமிழ்மகன் உசேன், கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அ.தி.மு.க-வில் இருப்பவர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதும், தமிழ்மகன் உசேனுக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.