Published:Updated:

`அதிமுக-வால் உயர்ந்தவர்களை வைத்துக்கொண்டு முதல்வர் இப்படிப் பேசலாமா?’-ஆர்.பி.உதயகுமார் கேள்வி

ஆர்.பி.உதயகுமார் - ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

"அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, வளர்ந்தவர்களை அபகரித்து அருகில் வைத்துக்கொண்டே அ.தி.மு.க-வை விமர்சிப்பது சர்வாதிகாரப் போக்கின் உச்சம்." - ஆர்.பி.உதயகுமார்

`அதிமுக-வால் உயர்ந்தவர்களை வைத்துக்கொண்டு முதல்வர் இப்படிப் பேசலாமா?’-ஆர்.பி.உதயகுமார் கேள்வி

"அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, வளர்ந்தவர்களை அபகரித்து அருகில் வைத்துக்கொண்டே அ.தி.மு.க-வை விமர்சிப்பது சர்வாதிகாரப் போக்கின் உச்சம்." - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார் - ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

"அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, வளர்ந்தவர்களை அபகரித்து அருகில் வைத்துக்கொண்டே அ.தி.மு.க-வை விமர்சிப்பது சர்வாதிகாரப் போக்கின் உச்சம்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தி.மு.க-வை விமர்சித்திருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற நலத்திட்ட விழா, பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் பேசியவிதம் முரணானது. ஆளுங்கட்சியின் அவலநிலை, நிர்வாகச் சீர்கேடு, மக்கள் விரோதப் போக்கு, அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தாதது, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா கொண்டாடுவது, 150 சதவிகித சொத்து வரி உயர்வு, 52 சதவிகித மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, மக்கள் அச்சத்துடன் இருப்பது குறித்து ஆதாரத்துடன் தொடர் அறிக்கைகளை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் வெளியிட்டுவருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆட்சியின் அவலநிலையை எடுத்துக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்கு தார்மிக உரிமை உண்டு. ஆனால், முதலமைச்சரோ, `நான் பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன்' என்று கூறிவிட்டு, `கேள்வி கேட்பதற்கு அ.தி.மு.க-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை’ என்றும் பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க-வில் பயிற்சி பெற்று, அதன் மூலம் வாழ்வு பெற்று, அதிகாரம் பெற்று, தன் கையில் இரட்டை இலையைப் பச்சை குத்திக்கொண்டிருந்தவர்களை காலத்தின் கோலத்தால், தொண்டர்களின் உழைப்பால் கோபுரக் கலசமாக உயர்ந்தவர்களை நீங்கள் அபகரித்ததை என்னால் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்.

முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி
முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி

உதாரணமாக எ.வ.வேலு தொடங்கி செல்வகணபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு, கம்பம் செல்வேந்திரன், சத்தியமூர்த்தி, தென்னவன், ரகுபதி, பழனியப்பன், தங்க தமிழ்ச்செல்வன் தற்போது செந்தில் பாலாஜி வரை சொல்ல முடியும்.

அ.தி.மு.க தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, அபகரித்துத் தன் அருகில் வைத்துக்கொண்டு, அ.தி.மு.க-வுக்குக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது என்று முதலமைச்சர் கூறலாமா?

50 ஆண்டு பொன்விழா கண்டு, 30 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்து மக்களுக்குச் சேவை செய்த இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் இருக்கும்போது தி.மு.க-வைக் கோட்டைப் பக்கம் வர விடாமல் தோல்வியைத்தான் மக்கள் பரிசாக வழங்கினர். ஏழு முறை ஆட்சி செய்த இந்த இயக்கத்தில் ஒன்றரைக் கோடித் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடியார் இந்த இயக்கத்தை வலுவோடும் பொலிவோடும் தற்போது நடத்திவருகிறார்.

அ.தி.மு.க-வுக்குத் தகுதி இல்லை என்று கூறுவதன் மூலம் ஜனநாயகப் பாதையிலிருந்து சர்வாதிகாரப் பாதையில் முதலமைச்சர் பயணிக்க தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வி எழுகிறது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

பத்தாண்டுக்காலம் எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது அம்மாவும் எடப்பாடியாரும் எதிர்க்கட்சிக்குரிய மரியாதையை வழங்கினார்கள். இன்றைக்கு 48 ஆண்டுக்கால பொது வாழ்கையில் உள்ள எடப்பாடியார் உங்களைப் போன்று தந்தையின் மடியில் தவழ்ந்து அதிகாரம் பெறாமல் தன் தியாகத்தால், உழைப்பால், விசுவாசத்தால் முதலமைச்சர் ஆனார். இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, மக்கள் நலன் சார்ந்த கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் அதற்கு முதலமைச்சர், அ.தி.மு.க-வில் அதிகாரப் போட்டி என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வண்ணம் பொத்தாம் பொதுவாகப் பேசுகிறார்.

தி.மு.க-விலும், உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் அதிகாரப் போட்டி இல்லையா... அதேபோல் வைகோ அதிகாரப் போட்டியால்  தி.மு.க-விலிருந்து செல்லவில்லையா... பேறிஞர் அண்ணா காலம் தொடங்கி எத்தனை அதிகாரப் போட்டிகள் நடைபெற்றன என்பது உங்களுக்குத் தெரியாதா?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இன்றைக்கு 1.4 கோடி மக்கள் வாக்களித்து எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார் இருக்கிறார். நீங்கள் கொங்கு மண்டலம் சென்றபோது அங்கே கூட்டத்தைக் கூட்டச் செய்த ரகசியங்களை ஊடகங்கள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஆனால், இன்றைக்கு எடப்பாடியாரும் அங்கு சென்றார்... அங்கு இயற்கையான கூட்டம் கூடியது. எடப்பாடியார் கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலைக் கூற வேண்டும். ஆனால் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை ஏகடியம் பேசுவதை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது உங்கள் பேச்சில் இருந்த நாகரிகம், கண்ணியம் இப்போது இல்லாமல் போனது ஏன்? இது போன்ற பேச்சை மக்கள் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.