Published:Updated:

மதுரை: கொரோனாவைச் சுட்டிக்காட்டி ஓபிஎஸ்-ஸ்டாலினை சாடிய ஆர்.பி.உதயகுமார்!

ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்பாட்டம்

``மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால், இன்றைக்கு மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது." - ஆர்.பி.உதயகுமார்

மதுரை: கொரோனாவைச் சுட்டிக்காட்டி ஓபிஎஸ்-ஸ்டாலினை சாடிய ஆர்.பி.உதயகுமார்!

``மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால், இன்றைக்கு மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது." - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்பாட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஆர்பாட்டம் நடந்தது.

ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்பாட்டம்
ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்பாட்டம்

ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் ஆர்பாட்டத்தில் புள்ளி விவரங்களாகப் பேசி விஜயகாந்தை ஞாபகப்படுத்தினார் ஆர்.பி.உதயகுமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ``மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால், இன்றைக்கு மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் கொடுத்தனர். அதில் குறிப்பாக மாதம்தோறும் மின் கட்டணத்தை கணக்கெடுப்போம் என்றார்கள். தற்போது ஆள் பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

வேளாண் பணிகளுக்கு அம்மா ஆட்சியில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது டெல்டா பகுதிகளுக்கு 12 மணி நேரமும், மற்ற பகுதிகளுக்கு 9 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

அம்மா ஆட்சியில் மின்சாரக் கட்டணம் 200 யூனிட் 170 ரூபாய், 300 யூனிட் 530 ரூபாய், 400 யூனிட் 830 ரூபாய் என இருந்தது. தற்போது தி.மு.க ஆட்சியில் 200 யூனிட் 225 ரூபாய், 300 யூனிட் 675 ரூபாய், 400 யூனிட் 1,725 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு அம்மா ஆட்சிக்காலத்தில் 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். 200 யூனிட் பயன்படுத்தும் 63.35 லட்சம் மின் நுகர்வோர், 300 யூனிட் பயன்படுத்துவோர் 36.25 லட்சம் மின் நுகர்வோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

ஏற்கெனவே சொத்து வரியை உயர்த்தினார்கள். நகர்ப்புறங்களில் 78 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் 600 சதுர அடி வீடுகள் மட்டும் 45.53 லட்சம் உள்ளன. இவர்களுக்கு 25 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1200 சதுர அடி உள்ள வீடுகள் 19.23 லட்சம் உள்ளன. இவர்களுக்கு 50 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 83.18 சதவிகிதம் ஏழை எளிய மக்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சொத்துவரி மூலம் அரசுக்கு 1,750 கோடி கிடைக்கும். இந்த வருவாயை மற்ற துறை மூலம் ஈட்டி மக்கள் சுமையை குறைத்திருக்கலாம்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறை உரிய அறிக்கை கொடுத்தும் காவல்துறை செயல் இழந்துள்ளது. காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் முறையாக வழிகாட்டவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இந்தக் கட்டண உயர்வு, வரி உயர்வு என்பது அவர்களின் வயிற்றில் அடித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும்.

ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்பாட்டம்
ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்பாட்டம்

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்கும் போது இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில்கூட இருவருக்கும் ஒற்றுமை. அப்போது தனிமைப்படுத்திக்கொண்ட இவர்களை தமிழக மக்கள் முழுமையாக தனிமைப்படுத்துவார்கள்" என்று கூறினார்.