Published:Updated:

``எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஓ.பி.எஸ்-ஸுக்கும்..!" - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி. உதயகுமார்

`அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வழி நடத்த வேண்டிய ஒ.பி.எஸ் கருணாநிதியின் பராசக்தி வசனத்தைத் தலைமாட்டில் வைத்துத் தூங்குவேன் என்று சட்டசபையில் கூறினார். யார் மனதைக் குளிர்விக்கும் வகையில் பேசினார்?' - ஆர்.பி.உதயகுமார்

``எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசருக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஓ.பி.எஸ்-ஸுக்கும்..!" - ஆர்.பி.உதயகுமார்

`அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வழி நடத்த வேண்டிய ஒ.பி.எஸ் கருணாநிதியின் பராசக்தி வசனத்தைத் தலைமாட்டில் வைத்துத் தூங்குவேன் என்று சட்டசபையில் கூறினார். யார் மனதைக் குளிர்விக்கும் வகையில் பேசினார்?' - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி. உதயகுமார்

இன்று மதுரையில் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மாபெரும் இயக்கமாக இந்த இயக்கத்தைப் புரட்சித் தலைவர் தொடங்கி 50 ஆண்டுக்காலம் ஆகிறது. இதில் 7 முறை ஆட்சி பீடத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கு மேல் மக்களுக்கு மகத்தான சாதனைத் திட்டங்களைத் தந்து மக்கள் உள்ளங்களில் இந்த இயக்கம் இடம்பிடித்துள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தாயை இழந்து கண்ணீரோடு தவித்த தொண்டர்களுக்கு எடப்பாடியார் மக்கள் மனதிலும் தொண்டர்கள் மனதிலும் நம்பிக்கை விதைத்தார்.

முல்லைப்பெரியாறு, காவிரி விவகாரங்களில் தீர்வு கண்டு மகத்தான சாதனை படைத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கினார். அதேபோல, 6 புதிய மாவட்டங்கள், இரண்டு கோடியே எட்டு லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு என வழங்கி சாமான்ய மக்களிடத்தில் நம்பிக்கை பெற்றுச் சிறப்பாக ஆட்சி செய்தார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இயக்கத்தை வலிமையோடும், பொலிவோடும் கொண்டு செல்ல வேண்டும். புரட்சித் தலைவர் காலம் தொடங்கி எந்த தேர்தலாக இருந்தாலும் களத்தில் முதல் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க-தான் முதலில் வெளியிடும். அதுதான் 90 சதவிகித வெற்றியை உறுதி செய்தது.

ஆனால், அம்மாவிற்குப் பிறகு கூட்டுத் தலைமையால் இலக்கணம் புரியாமல் எல்லா தேர்தலிலும் கடைசியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துப் பின்தங்கும் நிலை ஏற்பட்டது. இளைஞர்கள் குழப்பமடைந்தனர்.

எனக்குப் பின்னால் இந்த இயக்கம் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா கூறினார்கள். அதை நிறைவேற்றச் சீர்திருத்தம் செய்யவேண்டுமென்று அடிமட்ட தொண்டர்கள் முதல் மாவட்ட கழகச் செயலாளர்கள் வரை கருத்தைத் தெரிவித்தார்கள்.

வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை மக்கள் கொடுக்க தயாராக உள்ளார்கள். அதற்குத் தீர்க்கமாக முடிவு எடுக்க ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க-வை எதிர்க்க ஒற்றைத் தலைமையில் முன் வகிக்கும் எடப்பாடியார் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். எடப்பாடியார் அரசியல், பொது வாழ்வில் ஒருநாளும் பின் வாங்கியது கிடையாது

தி.மு.க-வை எதிர்க்க வேண்டும் என்பது அ.தி.மு.க-வினர் ரத்தத்தில் ஊறியதாகும். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வழி நடத்த வேண்டிய ஒ.பி.எஸ் கருணாநிதியின் பராசக்தி வசனத்தைத் தலைமாட்டில் வைத்துத் தூங்குவேன் என்று சட்டசபையில் கூறினார். யார் மனதைக் குளிர்விக்கும் வகையில் பேசினார்? இதை எந்த தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

புரட்சித் தலைவிமீது 26 பொய் 26 வழக்குகளைப் போட்டு தி.மு.க பழி வாங்கியது. அப்போதெல்லாம் அம்மா அவர்கள் இந்த இயக்கத்தையும், தொண்டர்களையும், காப்பாற்ற நீதிமன்றப் படிக்கட்டுகளில் சென்று அதைத் தகர்த்து எறிந்தார்.

ஆனால், ரவீந்திரநாத் குமார் தி.மு.க முதல்வரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த அரசு சிறப்பாகச் செயல்படுகிறது எனப் பேசி வந்துள்ளார். இது அ.தி.மு.க-வை சோர்வடையச் செய்துள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் எதற்காகத் தொடங்கினார்? அதனைத் தொடர்ந்து கழகம் இணையும்போது மூன்று நிபந்தனைகளை விதித்தார். அதில் அம்மாவின் மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், சசிகலாவைக் கட்சியில் சேர்க்கக்கூடாது, அம்மாவின் இல்லத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று கூறினார். அந்த கோரிக்கையை எடப்பாடியார் நிறைவேற்றினார்.

பிறகு எதற்கு டி.டி.வி.தினகரனோடு ஓ.பி.எஸ் ரகசிய உறவாடுகிறார்... யாரை வீழ்த்த பேசுகிறார்?

அ.தி.மு.க பிளவுபட்டதற்கு முதன்முதலாகப் பிள்ளையார் சுழி போட்டார். அதனைத் தொடர்ந்து அவர் வைத்த பஞ்சாயத்துதான் தற்போது வரை நீண்டுகொண்டே போகிறது. எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். கடைசி சொட்டு ரத்தம் வரை நடுநிலையோடு இருக்க வேண்டும். சந்தேகமற்ற அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும்.

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் உணவைச் சாப்பிட்ட நாங்கள் ஒரே உணர்வோடுதான் இருப்போம். எங்களுக்குச் சந்தேக தலைமை வேண்டாம். நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும். அதனைத் தான் ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்பி உள்ளனர். அதனால்தான் இந்த சீர்திருத்தப் பேச்சு வந்துள்ளது.

கட்சி நலனை, தொண்டர்கள் நலனை நினைத்திருந்தால் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பார். ஊடகங்களில் மட்டும் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனப் பேசினார். அம்மா கண்ட கனவை நனவாக்கப் பொறுத்துக் கொண்டோம்.

ஒற்றைத் தலைமை என்ற நிர்வாக சீர்திருத்தம் ஏற்படுவது காலத்தின் கட்டாயம். நல்லவராக இருந்தால் தொண்டர்கள் கட்சியினர் நலனைக் காக்க வேண்டும். புரட்சித் தலைவர் காலம் முதல் காவல்துறைக்குச் சென்று பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் எனக் கடிதம் கொடுத்த வரலாறு இல்லை. விவாதிக்கத்தான் பொதுக்குழு. அதில்தான் கருத்துகளைப் பரிமாற முடியும். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், பொதுக்குழுவை ரத்து செய்ய மனு கொடுத்தார் ஓ.பி.எஸ்.

கூட்டத்தைத் தடுத்து நிறுத்தவும் ஒ.பி.எஸ் முயன்றார். அப்போதும் எடப்பாடியார், ஓ.பி.எஸ்-ஸை அண்ணன் என்றுதான் அழைத்தார். தொண்டர்கள் மனக்குமுறல் வெளிப்பட்டதால் விரும்பத்தகாத நிகழ்வு நடந்துவிட்டது. அ.தி.மு.க-வில் மதம், சாதி என்பதே கிடையாது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஏனென்றால் ராமநாதபுரத்தில் சுந்தரராஜனை அம்மா அமைச்சர் ஆக்கினார். தலித் எழில்மலையை மத்திய அமைச்சர் ஆக்கினார். வாணியம்பாடியில் வடிவேலுவை எம்.எல்.ஏ-வாக்கினார். அதனைத் தொடர்ந்து அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் உருவாகி ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களும் நம்பிக்கை பெற்ற இயக்கமாக இந்த இயக்கம் உள்ளது.

அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையே குஸ்தி சண்டை நடைபெறுகிறது. அதற்கு தகுதியுடையவராக எடப்பாடியார் மட்டுமே உள்ளார்.

அ.ம.மு.க-வை எதிர்ப்பதில் ஓ.பி.எஸ் மனஉறுதியோடு இல்லை. தி.மு.க-வோடு மோதவிட்டு பாருங்கள் எடப்பாடியார் வெற்றி பெறுவார். அனுதாபத்தை தேடி ஓ.பி.எஸ் தொண்டர்களை கஷ்டப்படுத்த வேண்டாம்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டும், ஒ.பி.எஸ்-ஸை தள்ளி வைத்து இயக்கத்தை நடத்த வேண்டும் என நினைத்ததில்லை. ஒ.பி.எஸ் கட்சி சீர்திருத்தத்திற்கு உடன்பட வேண்டும். அதற்கு உடன்பட்டால் அவர் கட்சித் தொண்டர்களின் மனதில் நிறைந்திருப்பார், நிலைத்திருப்பார். ஜூலை 11 அன்று பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம்.

எஸ்.டி.எஸ் எம்.ஜி.ஆரை எதிர்த்தார். திருநாவுக்கரசு அம்மாவை எதிர்த்தார். அ.தி.மு.க-வை எதிர்த்தவர்கள் வாழ்ந்ததில்லை. அந்த நிலை ஓ.பி.எஸ்-க்கு வந்துவிடுமோ என்ற கவலை எனக்கு உள்ளது. இ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்குப் பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். கழக பொதுக்குழு உறுப்பினர்களும், ஒன்றரை கோடி தொண்டர்களும் எடப்பாடியாரின் ஒற்றைத் தலைமையைத்தான் விரும்புகிறார்கள். எடப்பாடியாருக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது" என்றார்.