Published:Updated:

நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க... தமிழக விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க... இந்தி திணிப்பு பா.ஜ.க...

பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னையன்

மாநில உரிமையை பறிக்கும் பா.ஜ.க... சிங்கள அரசுக்கு துணை நிற்கும் பா.ஜ.க... போட்டு தாக்குகிறார் அ.தி.மு.க பொன்னையன்

நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க... தமிழக விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க... இந்தி திணிப்பு பா.ஜ.க...

மாநில உரிமையை பறிக்கும் பா.ஜ.க... சிங்கள அரசுக்கு துணை நிற்கும் பா.ஜ.க... போட்டு தாக்குகிறார் அ.தி.மு.க பொன்னையன்

Published:Updated:
பொன்னையன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னையன்

பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க ஒட்டி உறவாடினாலும், அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாராவது பா.ஜ.க-வை விமர்சித்த வண்ணம்தான் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் புதிதாக இடம்பிடித்திருப்பவர் கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பொன்னையன். அவருடன் ஒரு பேட்டி...

“ `செயல்பாட்டின் அடிப்படையில், பா.ஜ.க-தான் தமிழ்நாட்டின் உண்மையான எதிர்க்கட்சி’ என்று அந்தக் கட்சியினர் சொல்கிறார்களே..?”

“சட்டமன்றத்தில் இருக்கும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், அ.தி.மு.க-தான் பிரதான எதிர்க்கட்சி என்பது பாமரக் குடிமகனுக்கும் தெரியும். கட்சி சாராத ‘லெட்டர் பேடு’ அமைப்புகள்கூடத்தான் ஆயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றன. செயல்பாட்டின் அடிப்படையில், அவைதான் உண்மையான எதிர்க்கட்சிகள் என்று சொல்லிவிட முடியுமா... பிரச்னைக்கேற்ப நாங்களும் போராட்டங்களை நடத்துகிறோம், ஆட்சியின் குறைகளைச் சட்டமன்றத்தில் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறோம். தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில், வேறூன்ற முடியாத இயக்கமாக இருப்பதாலோ என்னவோ, இப்படிப்பட்ட கற்பனைக் கருத்துகளை பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.”

நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க... தமிழக விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க... இந்தி திணிப்பு பா.ஜ.க...
நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க... தமிழக விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க... இந்தி திணிப்பு பா.ஜ.க...

“ஆனால், ‘பா.ஜ.க வளர்வது அ.தி.மு.க-வுக்கு நல்லதல்ல’ என்று கட்சிக் கூட்டத்தில் நீங்களே பேசியதாகச் செய்திகள் வருகின்றனவே?”

“கட்சி ரகசியக் கூட்டத்தில் நான் பேசியது, வெளியே திரித்துக்கூடக் கூறப்பட்டிருக்கலாம். உண்மைநிலை என்னவென்றால், நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க., இந்தியைத் திணித்து தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் சிதைக்க நினைக்கும் பா.ஜ.க., நதிநீர் விவகாரங்களில் தமிழக விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் பா.ஜ.க., மாநில உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் பா.ஜ.க., ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்து நிதி அதிகாரத்தை டெல்லியில் குவித்து மாநில அரசுகளை கிராமப் பஞ்சாயத்துகள்போல நடத்திவரும் பா.ஜ.க., ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்த சிங்கள அரசுக்கு உறுதுணையாக நின்றுவரும் பா.ஜ.க., தமிழ்நாட்டு மக்களுக்குப் பயனுள்ள வகையில் எதைச் செய்ய முடியும் என்பதைப் பற்றி மட்டும் யோசிப்பதேயில்லை. தங்களது கொள்கைகளை மாற்றி, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, திட்டங்களைத் தீட்டிச் செயல்படுவார்களென்றால் தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சியடையும். இதுதான் யதார்த்த உண்மை. தமிழின விரோதக் கொள்கையுடன் பா.ஜ.க செயல்படுமேயானால், அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே நல்லதல்ல!”

“ஆனால் இன்னும் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடர்கிறீர்களே..?”

“நான் சொன்னது, ‘தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி பா.ஜ.க தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் நல்லது’ என்கிற அடிப்படையில் கூறப்பட்ட கருத்தேயொழிய வேறில்லை. இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை. நல்ல உறவோடு கூட்டணி தொடர்கிறது.”

நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க... தமிழக விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க... இந்தி திணிப்பு பா.ஜ.க...
நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க... தமிழக விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க... இந்தி திணிப்பு பா.ஜ.க...

“அ.தி.மு.க-வை அழித்துவிட்டு பா.ஜ.க வளர நினைப்பதாகக் கருதுகிறீர்களா?”

“இதுவரை எத்தனையோ பேர் அதற்கு முயன்றிருக்கிறார்கள்; எதுவும் நடக்கவில்லை. தொண்டர்களின் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வை எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது.”

“இரண்டு ராஜ்ய சபா வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய ஏன் இத்தனை களேபரங்கள்?”

“ராஜ்ய சபா சீட் காலியாகிறது என்றால் நிர்வாகிகள் அதை எதிர்பார்ப்பது இயற்கைதான். ஆனால், சீட்டுக்காக எந்த ஒரு சர்ச்சையும் வெடிக்கவில்லை. இறுதி முடிவை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் எடுப்பதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். கட்சி இணைந்ததிலிருந்து, இவர் அணி, அவர் அணி என்கிற பேச்சுக்கே இடமின்றி இ.பி.எஸ்-ஸும் ஓ.பி.எஸ்-ஸும், கண்ணும் இமையும்போல ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.”

“பதவியை அனுபவித்தவர்களுக்கே மீண்டும் மீண்டும் பதவிகள் கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே?”

“பதவி என்பது அனுபவிப்பதற்கு அல்ல, பணியாற்றுவதற்கு. திறமைகளைப் பொறுத்தே ஒருவருக்குப் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. சி.வி.சண்முகம் வழக்கறிஞராக இருக்கிறார், ஆங்கிலப் புலமைகொண்டவர், புள்ளிவிவரங்களுடன் பேசக்கூடியவர் என்பதால்தான் மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.”

“பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டே மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறாரே..?”

“தமிழக மக்களை ஏமாற்ற பொதுவெளியில் பிரதமரிடம் மனுக்களைக் கொடுப்பது, வீரவசனம் பேசுவது என்று வேஷம் போடும் தி.மு.க., மறைமுகமாக பா.ஜ.க-வை காக்கா பிடித்துவருகிறது என்பதுதான் உண்மை. பண நெருக்கடியில் கிட்டத்தட்ட திவால் நிலையில் உள்ள தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஆதாய அரசியலைத்தான் தி.மு.க செய்துவருகிறது. அதன் வெளிப்பாடுதான், கருணாநிதி சிலைத் திறப்புக்கு வெங்கைய நாயுடுவை அழைத்தது.”

நீட் ரத்துக்கு எதிரான பா.ஜ.க... தமிழக விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க... இந்தி திணிப்பு பா.ஜ.க...

“பா.ஜ.க-வின் எட்டு ஆண்டுக்கால ஆட்சி பற்றி உங்கள் கருத்து?”

``பிரதமர் மோடியின் திட்டங்களும் அணுகுமுறையும் சிறப்பாக உள்ளன. குறிப்பாக, உலகமே பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது, இந்தியாவை அந்தச் சிக்கலிலிருந்து பாதுகாத்து, இந்திய நாணய மதிப்பை உலகமே பாராட்டும் அளவுக்குக் காப்பாற்றியிருக்கிறார் மோடி. வளர்ந்த நாடுகளிலிருந்து நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்து, இந்தியாவை அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக உருவாக்கிச் சாதனை படைத்திருக்கிறது எட்டு ஆண்டுக்கால மோடி அரசு.”

“எனினும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட சறுக்கல்களும் இருக்கத்தானே செய்கின்றன?”

“விலைவாசி உயர்வுக்கு, பிரதமர் மோடி மட்டுமா காரணம்... உலகச் சந்தை நிலவரமும் காரணம் இல்லையா... கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் நிகழும் இந்த மாற்றத்துக்கு மோடியை மட்டும் குறைசொல்ல முடியாது. கச்சா எண்ணெயை நம்பி இருக்கிற நமது பொருளாதாரநிலையை மாற்ற, மாற்று எரிசக்தி, மின் வாகனம் போன்ற முயற்சிகளை மோடி அரசு எடுப்பதையும் பார்க்க வேண்டும்.”

“சசிகலா, அ.தி.மு.க-வில் தொண்டராகவாவது இணைய வாய்ப்பிருக்கிறதா?”

“சட்டத்தின் உச்சநிலையில் உள்ள உச்ச நீதிமன்றமே `சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் தொடர்பில்லை; அவர் கட்சிக்கொடியைப் பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்லிவிட்டது. எனவே, அவர் சேர்க்கப்படுவாரா என்கிற கேள்விக்கே இடமில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism