Published:Updated:

``யார் தவறு செய்தாலும் நடவடிக்கை வேண்டும்; மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்” - எஸ்.பி வேலுமணி

வேலுமணி

``முதல்வருக்கு பி.ஏ போல டேவிட்சன் அவர் எங்கு சென்றாலும் உடன் செல்கிறார். டேவிட்சன் உள்ளிட்ட அதிகாரிகள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுகின்றனர்” - வேலுமணி

``யார் தவறு செய்தாலும் நடவடிக்கை வேண்டும்; மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்” - எஸ்.பி வேலுமணி

``முதல்வருக்கு பி.ஏ போல டேவிட்சன் அவர் எங்கு சென்றாலும் உடன் செல்கிறார். டேவிட்சன் உள்ளிட்ட அதிகாரிகள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுகின்றனர்” - வேலுமணி

Published:Updated:
வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி பாதி தான் வந்துள்ளது. பாதி வரவில்லை. அந்த நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும். கோவையில் எல்லா சாலைகளும் பழுதடைந்துள்ளன.

வேலுமணி
வேலுமணி

அவற்றை வேகமாக செப்பனிட வேண்டும். கோவை மாவட்டத்தில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல, மீண்டும் நடந்து விடுமோ என்ற பயம் உள்ளது. அதில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1998  குண்டு வெடிப்பு சம்பவங்களினால் கோவை வளர்ச்சி 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது. அது தற்போது தான் சரியாகி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உளவுத்துறை ஐ.‌ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் எந்த வேலையும் பார்க்கவில்லை. உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.

டேவிட்சன் தேவாசீர்வாதம்
டேவிட்சன் தேவாசீர்வாதம்

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வருக்கு பி.ஏ போல டேவிட்சன் அவர் எங்கு சென்றாலும் உடன் செல்கிறார். டேவிட்சன் உள்ளிட்ட அதிகாரிகள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.

கஞ்சா விற்பதை கூட தடுப்பதில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றனர். வரக்கூடிய செய்திகள் எல்லாம் வேறு மாதிரியாக இருக்கிறது. அரசு இனியாவது விழித்துக் கொண்டு கோவை மக்களை பாதுகாக்க வேண்டும். இங்கு மதப்பிரச்னைகள் எல்லாம் எப்போதும் இல்லை.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம். எந்த மதத்தையும் ஒதுக்கக் கூடாது. அதேநேரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக ஜமாத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கோவை மக்கள் அமைதியை விரும்புகிறோம்.

கோவை மாவட்டத்தில் நசுங்கிப் போன தொழில் எல்லாம் இப்போதுதான் வளர்கிறது. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட இரண்டு சமூக மக்களும், தற்போதுவரை அதில் இருந்து மீளவில்லை. காவல்துறை எந்த வேலையும் பார்ப்பதில்லை.

எஸ்.பி வேலுமணி
எஸ்.பி வேலுமணி

மு.க. ஸ்டாலினுக்கும், அவர் குடும்பத்துக்கும் புரோக்கராக இருந்து பணம் வாங்கித் தரும் வேலையை மட்டும் ஜ.ஜி டேவிட்சன் செய்கிறார். பழிவாங்கும் வேலையை விட்டுவிட்டு, மக்களை பாதுகாக்கும் வேலையை காவல் துறை பார்க்க வேண்டும். கோவை மக்கள் ஒற்றுமையை தான் விரும்புகிறோம்.” என்றார்.