அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கூப்பிட்டுக் கண்டித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னொரு பக்கம் பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடர்வது குறித்தும் கட்சிக்குள் முணுமுணுப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் செய்தித்தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் பேசினோம்.

‘‘அ.தி.மு.க அரசு, தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது என்ற தொடர் குற்றச்சாட்டுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?”

‘‘நிச்சயமாகக் கிடையாது. பொத்தாம் பொதுவாகப் பேசக் கூடாது. மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றுதான் மத்திய அரசை ஆதரிக்கிறோம். மற்றபடி, மக்களுக்கு எதிரான பல திட்டங்களுக்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்போதுகூட ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ‘நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும்’ என்றும் கேட்டுள்ளார். எதிர்க்கட்சிகள்போல் வறட்டுத்தனமாக எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம்; கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஆதரிக்கவும் மாட்டோம்.’’

‘‘ `பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ளதால் திராவிடக் கொள்கையிலிருந்து அ.தி.மு.க விலகிவிட்டது. பா.ஜ.க-வின் சார்பு அணியாக உள்ளது’ என்றெல்லாம் விமர்சிக்கிறார்களே?”

“அ.தி.மு.க என்றும் திராவிடக் கட்சிதான். அது தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகளை எப்போதும் தாங்கிப் பிடித்திருக்கும் கட்சிதான். பெரியார் வலியுறுத்திய பெண்ணுரிமை, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவது, சாதி, மத வேற்றுமையிலிருந்து மக்களை மாற்றுவது, சிறுபான்மையினர் நலம் காப்பது என பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் கட்சியும் அ.தி.மு.க-தான்.’’

‘‘ஆனால், பெரியார் பற்றியும் திராவிட இயக்கங்கள் பற்றியும் உங்கள் கூட்டணியில் உள்ள பா.ஜ.க கடுமையாக விமர்சித்துவருகிறதே?’’

‘‘பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் முன்னிறுத்தி சிலர் விமர்சிக்கிறார்கள். அது அவருடைய கொள்கை. ஆனால், அவருடைய பல்வேறு சிந்தனைகள் சமூகத்துக்கு அத்தியாவசியமானவை. பெண்ணுரிமை, சமூகநீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட அவரின் கருத்துகளை யார் விமர்சித்தாலும் அ.தி.மு.க விட்டுக்கொடுக்காது.’’

‘‘பெரியார் பற்றி ரஜினியின் பேச்சு சர்ச்சையானபோது முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ரஜினியைக் கண்டித்தார்கள். ஆனால் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ரஜினி கருத்தை ஆதரித்துப் பேசுகிறார்களே?’’

‘‘கட்சித் தலைமையிலிருந்து வருவது மட்டும்தான் கட்சியின் கருத்து. மற்றவர்கள் பேசியது அவர்களின் சொந்த கருத்து. எப்போதுமே குறிவைக்காமல் எய்தும் அம்பும், குறிப்பெடுக்காமல் பேசும் பேச்சும் வெற்றியைத் தராது. இதை கட்சி நிர்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும்.’’

‘‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியில் வர வேண்டும். அதற்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கூறியது பற்றி?’’

‘‘அதுவும் அவரது சொந்த கருத்துதான்.”