கோவை மாநகராட்சி மேயர் பதவி 2016 வரை பொது ஒதுக்கீடாக இருந்தது. 2016-ம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்தலில், அப்போதைய அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திரசேகரின் மனைவி ஷர்மிளாவுக்காக கோவை மேயர் பதவி பெண்கள் ஒதுக்கீடுக்கு மாற்றப்பட்டது. 2021-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றமானாலும், கோவையில் ஒரு தொகுதியைக்கூட தி.மு.க-வால் வெல்ல முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனால் மேயர் பதவிக்கு ஆளுமைமிக்க ஓர் ஆண் நிர்வாகி கொண்டு வரப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் ஒதுக்கீடு என்கிற அரசாணை பல உடன்பிறப்புகளின் கனவைக் கலைத்துவிட்டது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``மாநகரப் பகுதிகளில் வரும் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க-வினர். வேலுமணி, வானதி சீனிவாசன் போன்ற ஆளுமைகளைச் சமாளிக்க வேண்டும். மாநகராட்சி கடும் நிதிப் பற்றாக்குறையில் உள்ளது. தலைமை மீண்டும் தவறிழைத்துவிட்டது" என்று புலம்பியபடி உள்ளடி வேலைகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

'செந்தில் பாலாஜி தனக்கு நிகராக இன்னோர் ஆளுமை உருவாவதை விரும்ப மாட்டார். அதனால்தான் கோவை மாநகராட்சியில் கடைசி நேர மேஜிக் ஏதும் நடைபெறவில்லை' என்கின்றனர் உடன்பிறப்புகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதேநேரத்தில், கோவை பெண்களுக்குத்தான் கிடைக்கும் என்று ஆரம்பத்திலிருந்து எதிர்பார்த்த உடன்பிறப்புகள் பயங்கர உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் `வாக்காளப் பெருமக்களே...’ என்று பரப்புரையைத் தொடங்கிவிட்டனர். `நமக்குத்தான் கொடுத்துவெக்கலை. சம்சாரத்தையாச்சும் மேயராக்கிடலாம்' என சில மூத்த நிர்வாகிகள் முயன்றுவருகின்றனர்.

சிலர் சமூக வலைதளப் பக்கங்களை புரோமோஷன் செய்துகொண்டிருக்கின்றனர். பதிவுகளுக்கு அதிக லைக், கமெண்ட்ஸ் வருவதற்கு, ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தனியார் நிறுவனங்களிடம் பேக்கேஜ் போட்டுவருகின்றனராம்.
தங்களது ஆட்சியில் கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்று தீவிரமாக இருந்த அ.தி.மு.க-விடம் கடந்த காலங்களில் இருந்த உற்சாகம் சற்றே மிஸ்ஸாகிறது. 2016-ல் ஆர்வத்துடன் இருந்த பலரும் இப்போது தயக்கம் காட்டவே, 'கோவை நம்ம தன்மானப் பிரச்னை.

சட்டசபைத் தேர்தல்ல 10 தொகுதிகளையும் ஜெயிச்சுட்டு, மேயர் பதிவிய விட்டுக்கொடுக்க முடியாது. தி.மு.க என்ன வேணாலும் பண்ணட்டும். அவங்க ஈஸியா ஜெயிச்சுரக் கூடாது' என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறிவருகிறாராம்.
ஒவ்வொரு வார்டிலும் சற்று செல்வாக்குடன் இருப்பவர்களையே அ.தி.மு.க., வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. இது தவிர வேலுமணியின் நிழலாக வரும் `நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர், ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் என்று பல வி.ஐ.பி-களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே `டிக்’ அடிக்கப்பட்டவர்கள்தான் இப்போதும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பூத் கமிட்டியில் அ.தி.மு.க அசுர பலத்துடன் இருக்கிறது. அதுதான் கடந்த சட்டசபைத் தேர்தலிலும் அவர்களுக்குக் கைகொடுத்தது. இது உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அ.தி.மு.க-வுக்குக் கூடுதல் பலம்.
வேலுமணி கோலோச்சும் அதே அ.தி.மு.க-வின் தேர்தல் வித்தைகளை நன்கறிந்த செந்தில் பாலாஜிதான் கோவை தி.மு.க-வுக்குப் பொறுப்பு. பூத் கமிட்டிதான் நம் பலவீனம் என்று அறிந்து கடந்த சில மாதங்களாக அதை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். கோவை உடன்பிறப்புகள் பலர் உள்ளடி வேலைகளுக்குப் பெயர்போனவர்கள் என்பதால்,

வேட்பாளர் பட்டியலில் அதைச் சமாளிக்கும்விதமாகச் சில சர்ப்ரைஸ்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்காக கரூர் மாவட்டத்திலிருந்து பலரும் கோவை வந்து வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.
கரூரிலிருந்து வந்திருக்கும் பலரும் ஃபைனான்ஸியர்கள். எனவே பண விஷயத்தில் அ.தி.மு.க-வுக்கு இணையான பலத்துடன் தி.மு.க களமிறங்குகிறது. அதனுடன் பூத் கமிட்டியையும் பலப்படுத்தியிருப்பதால் கோவை தேர்தல் களம் கடுமையான போட்டி நிறைந்ததாகவே இருக்கும். இது செந்தில் பாலாஜிக்கும் வேலுமணிக்கும் நடக்கும் அதிகார யுத்தம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

`உண்மையில், இது களத்தில் கரூர் ஃபைனான்ஸியர்களுக்கும், கோவை ரியல் எஸ்டேட் பிரமுகர்களுக்கும் நடக்கும் போட்டி. பணம்தான் முக்கியப் பங்காற்றும்’ என்று மூத்த அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.