Published:Updated:

குடியுரிமை மசோதா... எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கொள்கைக்கு உலை... எடப்பாடி, பன்னீர் கொடுத்த விலை!

``ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஒருபோதும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்திருக்க மாட்டார்'' என்கிற வாதத்துக்கு வலு சேர்க்கிறது கடந்த கால வரலாறு.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்

``என் மாநிலத்துக்கும் மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதிநிதியாக இருப்பதற்காக மிகவும் அவமானப்படுகிறேன். குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்ததின் மூலம் எடப்பாடியின் உண்மையான நிறம், அவருடைய நேர்மையின் அளவு, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. உங்களுடைய தற்காலிக அதிகாரத்தை அனுபவித்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஒருபோதும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்திருக்க மாட்டார். ஜெயலலிதா இல்லாதபோது அவருடைய பண்பாட்டை அ.தி.மு.க அழிக்கிறது’' - நடிகர் சித்தார்த் போட்ட ட்வீட் இது!

சித்தார்த்
சித்தார்த்
விகடன்

`அண்ணா தி.மு.க' ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு `அடிமை தி.மு.க' என்கிற அவப்பெயரைத் தாங்கி நிற்கிறது. அது சித்தார்த் வரையில் வந்து சந்தி சிரிக்கிறது. ``ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஒருபோதும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்திருக்க மாட்டார்'' என சித்தார்த் சொல்வதும் உண்மைதான் என்கிறது கடந்த கால வரலாறு.

``ஜெயலலிதா இல்லாதபோது அவருடைய பண்பாட்டை அ.தி.மு.க அழிக்கிறது'' என்பதை நிரூபணமாக்கியிருக்கிறது குடியுரிமை மசோதா. மத ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளான, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத பிற சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது. ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்து சட்டமாகிவிட்டது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. வன்முறையால் கொழுந்துவிட்டு எரிகிறது அஸ்ஸாம். குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன எதிர்க்கட்சிகள். ``குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் கறுப்பு தினம்'' என எதிர்க்கட்சிகள் வர்ணிக்க... பிரதமர் மோடியோ, ''சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள்'' என்கிறார்.

``அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அநீதி இழைக்கவா உங்களைத் தேர்வு செய்தார்கள்?'' எனக் கேள்வி எழுப்புகிறார் ப.சிதம்பரம். ''ஆளத்தான் அதிகாரம் அளித்தார்கள். நாட்டைத் துண்டாக்க அல்ல'' எனக் கொதிக்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி. வைகோவோ, ''குடியுரிமை மசோதாவைக் கடலில் எறியுங்கள்'' எனக் கர்ஜிக்கிறார்.

குடியுரிமை மசோதாவை எதிர்த்துப் பேசும் அ.தி.மு.க அல்லாத எம்.பி-கள்
குடியுரிமை மசோதாவை எதிர்த்துப் பேசும் அ.தி.மு.க அல்லாத எம்.பி-கள்
விகடன்
`சிவசேனா வெளிநடப்பு; 20 வாக்குகள் வித்தியாசம்!' - குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் #CAB

இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற முக்கிய கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்த சிவசேனாகூட தனது நிலைப்பாட்டையே மாற்றிக் கொண்டது.

``மக்களவையில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை, மாநிலங்களவையில் அதே வடிவத்தில் ஏற்க மாட்டோம்'' என்றார் மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே. கட்சிகள்தான் வேறு. பி.ஜே.பி கொள்கையும் சிவசேனா கொள்கையும் ஒன்றுதான். ஆனாலும்கூட பி.ஜே.பி கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கிறது சிவசேனா. ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வழி செய்யாத இந்த மசோதாவை அ.தி.மு.க ஆதரித்திருப்பது ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கே எதிரானது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
`சிவசேனா என்றால் `சிவன் படை’ அல்ல. மராட்டிய சிவாஜியின் படை!’- சிவசேனா கடந்துவந்த பாதை

இந்த மசோதா மாநிலங்களவையில் வைக்கப்பட்ட போது அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்திருக்கிறது. விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி. விஜிலா சத்யானந்த், ``மசோதா வரம்புக்குள் இலங்கை தமிழ் அகதிகளையும் கொண்டு வர வேண்டும்'' என்பதோடு கடமையை முடித்துக் கொண்டார்.

விஜிலா சத்யானந்த்
விஜிலா சத்யானந்த்
`நேர்கொண்ட பார்வை', `சூரரைப் போற்று', `புதுமைப் பெண்'... தமிழ் சினிமாவும் பாரதியார் ரெஃபரென்ஸும்!

இன்னொரு எம்.பி-யான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ''குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத் தமிழரைச் சேர்க்காதது வருத்தம் தருகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும்'' என்றார்.

ஜெயலலிதாவுடன் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
ஜெயலலிதாவுடன் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
5 ரயில்கள்; 15 பேருந்துகளுக்குத் தீவைப்பு!-குடியுரிமை சட்டப்  போராட்டத்தால் ஸ்தம்பித்த மேற்கு வங்கம்

மக்களவையிலும் இதே நிலைதான். மக்களவையின் ஒரே அ.தி.மு.க எம்.பி-யான பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மசோதாவுக்கு ஆதரவு அளித்தார். தனது லெட்டர் பேடிலேயே அ.தி.மு.க-வின் உறுப்பினர் அல்லாத மோடியின் படத்தைப் போடும் ரவீந்திரநாத் குமாரும் சரி, அவருடைய கட்சியும் சரி, குடியுரிமை மசோதாவை ஆதரித்ததில் ஆச்சர்யம் இல்லை.

சட்டசபையில் ஜெயலலிதா
சட்டசபையில் ஜெயலலிதா

''குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்க முதுகெலும்பு இல்லாமல் பயந்து போய், பணிந்து கிடக்கும் அ.தி.மு.க அரசை அடிமை அரசு என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்? தமிழ் இனத்திற்குக் கேடு தர வந்த 'கோடரிக்காம்பு' என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும்!'' எனக் கண்டித்திருக்கிறார் ஸ்டாலின்.

''ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஒருபோதும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்திருக்க மாட்டார்'' எனச் சொல்லும் சித்தார்த்தின் வாதத்துக்கு வலு சேர்க்கின்றன ஜெயலலிதாவின் கடந்தகால நிகழ்வுகள். விடுதலைப் புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதா, ஈழத் தமிழர்களை ஆணித்தரமாக ஆதரித்துதான் வந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களே அதற்குச் சாட்சிகளாக இருக்கின்றன.

1.போர்க் குற்றங்கள் நிகழ்த்திய இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் - 2011 ஜூலை 8.

2.`தனி ஈழம்' அமைப்பது குறித்து இலங்கைத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - 2013 மார்ச் 27.

சட்டசபையில் ஜெயலலிதா
சட்டசபையில் ஜெயலலிதா

3.இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது - 2013 அக்டோபர் 24.

4.இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் - 2013 நவம்பர் 12.

5.இலங்கை மீதான போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் - 2015 செப்டம்பர் 16.

இப்படி அடுத்தடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. சட்டசபையில் தீர்மானங்கள் கொண்டு வந்த போதெல்லாம் ஜெயலலிதா ஆற்றிய உரைகள் மத்திய அரசை உரசிப் பார்த்தன. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தலைவி கொண்டு வந்த தீர்மானங்களை மேஜையைத் தட்டி ஆதரித்த பன்னீரும் எடப்பாடியும் ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்காத மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள்.

பன்னீரும் எடப்பாடியும்
பன்னீரும் எடப்பாடியும்

அன்றைக்கு ஜெயலலிதா செயல்பாட்டில் இருந்தது ஆளுமை. இன்றைக்கு எடப்பாடி, பன்னீர் ஆதரவில் இருப்பது அச்சம். ஜெயலலிதா இருந்தபோது தமிழகச் சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்கள் ஆதரவு நிலைப்பாடு. அவர் செத்த பிறகு நாடாளுமன்றத்தில் எதிரான நிலைப்பாடு. நல்ல ஆளுமை இல்லாமல் அ.தி.மு.க அல்லாடுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

'இலங்கை போர்க் குற்றங்களுக்குச் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என வலியுறுத்தி 2015 செப்டம்பர் 16-ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்த அந்தத் தீர்மானத்தை எடப்பாடியும் பன்னீரும் திரும்பிப் படிக்க வேண்டும்.

அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தும் ஜெயலலிதா
அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தும் ஜெயலலிதா

`` `ஒரு லட்சியத்தை ஈடேற்ற எத்தகைய தியாகத்தையும் செய்வது சாமானியமான காரியமல்ல. அதில் வெற்றி வாகை சூடுவோம் என்ற திட நம்பிக்கை இருத்தல் வேண்டும்' என்றார் பேரறிஞர் அண்ணா. அவரின் அமுதமொழிக்கு ஏற்ப, இலங்கைக்கு எதிராகச் சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்று, இந்தியப் பேரரசை, தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது'' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் ஜெயலலிதா.

அந்த அண்ணாவின் அமுத மொழியும் ஜெயலலிதாவின் உறுதி மொழியும் இன்றைக்குக் குடியுரிமை மசோதாவில் உருக்குலைந்து நிற்கிறது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அன்றைக்குத் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஜெயலலிதா. இன்றைக்குப் பன்னீரும் எடப்பாடியும் வழிமொழியவில்லை. ``பி.ஜே.பி-யின் கொள்கைதான் அ.தி.மு.க-வின் கொள்கை என்றால், அதில் அண்ணாவின் பெயர் எதற்கு?" என மு.க.ஸ்டாலின் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

சட்டசபையில் ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்
சட்டசபையில் ஜெயலலிதாவுடன் பன்னீர்செல்வம்
`ஜெயலலிதா அறிவித்த திட்டம்!' - சிப்காட் சர்ச்சையும் காரைக்குடி இளைஞர்களின் தேர்தல் புறக்கணிப்பும்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைக்கூடத் தமிழகத்தில் நடத்தவிடாமல் 2013-ல் தடுத்து நிறுத்திய ஜெயலலிதாவின் தீரம் எங்கே? கட்சியை டெல்லிக்கு அடமானம் வைத்துவிட்ட இவர்களின் வீரம் எங்கே? குடியிருப்பு மசோதாவைக் கொண்டு வந்த அமித் ஷாவுக்கு ஆதரவு அளித்து, அ.தி.மு.க-வை 'அமித் ஷா தி.மு.க' ஆக்கிவிட்டார்கள்.

'ஈழத் தமிழர் ஆதரவு' என்கிற எம்.ஜி.ஆரின் கொள்கைக்கும் ஜெயலலிதாவின் உறுதிக்கும் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளித்ததன் மூலம் உலை வைக்கப்பட்டுவிட்டது. குடியுரிமை மசோதாவை எதிர்த்தவர்களிடம் எல்லாம் ஆதரவு கேட்டது பி.ஜே.பி. ஆனால், கேட்காமலேயே வலிய போய் கை தூக்கி நின்றது அ.தி.மு.க.

எடப்பாடியும் பன்னீரும்
எடப்பாடியும் பன்னீரும்

``இலங்கையிலிருந்து வந்துள்ள இந்துக்களையும், பூடானிலிருந்து வந்துள்ள கிறிஸ்தவர்களையும் மியான்மரிலிருந்து வந்த முஸ்லிம்களையும் குடியுரிமை திருத்தச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வராதது ஏன்?'' என்கிற கேள்வியை எழுப்பக்கூட அ.தி.மு.க-வுக்கு திராணி இல்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வீற்றிருந்த பொதுச் செயலாளர் பதவி இப்போது அ.தி.மு.க-வில் இல்லை. ஆனால், டெல்லி சைலன்ட் தலைவர் சொற்படி கட்சி ஆடிக்கொண்டிருக்கிறது.

``மராத்தியர் அல்லாதவர்கள் பம்பாயைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை, வெளியேற்றுவோம். மராத்தி மண் மராத்தியருக்கே’' என பால்தாக்கரே முழக்கமிட்டுத்தான் சிவசேனா என்கிற கட்சி பிறந்தது. அன்றைக்கு பால்தாக்கரே கர்ஜித்தபோது அங்கே இருந்த தமிழர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த பால்தாக்கரேவின் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்றைக்கு நாடாளுமன்றத்தில், ''இலங்கை தமிழ் இந்துக்கள் பற்றி மசோதாவில் எதுவுமே இல்லை'' எனக் கேட்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பக்கூடச் சக்தியற்று நிற்கிறது. பேசாமல் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை கமலாலயத்தின் ஒரு மூலையில் நடத்திக்கொள்ளலாம்.

Vikatan

பி.ஜே.பி எம்.பி-கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் குரலாக ஒலிக்கின்றன'' என்கிறார். அ.தி.மு.க-வோ பி.ஜே.பி-யின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

``எனது மாநிலத்தை எடப்பாடி பழனிசாமி பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன்'' எனச் சொல்லும் துணிச்சல் சித்தார்த்துக்கு இருக்கிறது. பட வாய்ப்புகள் மறுக்கப்படலாம். வருமானவரி சோதனைக்கு ஆட்படலாம். ஆனாலும் துணிச்சலாகக் கருத்தை வைக்கிறார். ஆனால், ஓர் இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் மாநிலத்தை ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் தலைமை அஞ்சுகிறது என்றால் 'எதற்கோ அவர்கள் பயப்படுகிறார்கள்' என்றுதானே அர்த்தம் கொள்ளவேண்டியிருக்கிறது. ''அதுவரையில் தற்காலிக அதிகாரத்தை அனுபவியுங்கள்'' என சித்தார்த் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது.

சித்தார்த்
சித்தார்த்
விகடன்

சித்தார்த் சொன்னதற்கு ''விளம்பரத்திற்காக சில நடிகர்கள் இவ்வாறு கேள்வி கேட்பார்கள்'' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சித்தார்த்திடம் சீற்றம் காட்டுகிறார்கள்... மோடியிடம் மௌனம் காக்கிறார்கள்.

இந்த விளம்பர நடிகர் சித்தார்த்துக்குத்தான் 2014-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை எடப்பாடி கட்சி அறிவித்தது. `காவியத் தலைவன்' படத்தில் நடித்த சித்தார்த்துக்கு 2017-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த விருதைக்கூட இதுவரை எடப்பாடி ஆட்சி தரவில்லை. ஆனால், அதிகாரமில்லாதவர்களுக்குப் பதிலடி கொடுப்பதில் மட்டும் வேகமும் வீரியமும் வெளிப்படுகிறது. 'காவியத் தலைவன்' எம்.ஜி.ஆரையும் மதிக்கவில்லை. அதைச் சுட்டிக்காட்டிய 'காவியத் தலைவன்' படக் கதாநாயகனையும் மதிக்கவில்லை.

காவியத் தலைவன் படத்தில் சித்தார்த்
காவியத் தலைவன் படத்தில் சித்தார்த்
``அமெரிக்காவுல பண்றதை தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கனு ஏக்கமா இருக்கு!" - சித்தார்த்

இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவின் அம்சங்கள் இந்தியா குடியரசு ஆன சமயத்தில் வந்திருந்தால் அ.தி.மு.க என்ற கட்சியே உருவாகியிருக்காது. அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் இலங்கை நாட்டில் கண்டியில் பிறந்தவர். 70 ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமை மசோதாவில் இப்போது இருக்கிற விஷயங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் எம்.ஜி.ஆரே இந்தியாவின் குடியுரிமையைப் பெற்றிருக்க முடியுமா எனச் சந்தேகம் எழுகிறது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்
`அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதாவின் மரபுவழி ரஜினி!’ -திரைப் பிரபலங்கள் புகழாரம்

அந்த எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியிருக்க முடியுமா... தமிழகத்தின் முதல்வர் ஆகியிருக்க முடியுமா என்கிற கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடியிருந்தால் எடப்பாடியும் பன்னீரும் இந்த மசோதாவை ஆதரித்திருக்க மாட்டார்கள்.

இலங்கை கண்டிக்குச் சென்ற பிரதமர் மோடிகூட ``எம்.ஜி.ஆரைத் தந்த இலங்கை மண்'' எனச் சொல்லிப் பெருமிதப்பட்டார். இலங்கையில் பிறந்ததால்தானே ஈழத் தமிழர்கள் மீது எம்.ஜி.ஆருக்குப் பாசம் இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் பண உதவியும் பயிற்சியும் அளித்தற்குப் பின்னால் இருந்தது எம்.ஜி.ஆரின் ஈழ ஆதரவுதானே! அந்த ஈழத் தமிழ் இந்துக்களைக்கூடச் சேர்த்துக் கொள்ளாத குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருப்பது எம்.ஜி.ஆரையை அவமதிப்பதற்குச் சமம்தானே!

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

``சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்

ஊரார் கால் பிடிப்பார்!

ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்

எப்போதும் வால் பிடிப்பார்!''