Published:Updated:

``அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது” - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்த எஸ்.பி.வேலுமணி

வேலுமணி

``அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது. இது மிரட்டல் இல்லை. இயற்கையாகவே வரும். மேலே இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.” - எஸ்.பி.வேலுமணி.

``அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது” - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்த எஸ்.பி.வேலுமணி

``அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது. இது மிரட்டல் இல்லை. இயற்கையாகவே வரும். மேலே இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.” - எஸ்.பி.வேலுமணி.

Published:Updated:
வேலுமணி

சொத்து வரி உயர்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படவிருக்கிறது. இந்நிலையில், கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி,

அதிமுக ஆலோசனை
அதிமுக ஆலோசனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஜனநாயகத்தைப் படுகொலை செய்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அது திமுக-வுக்கு கைவந்த கலை. அதிகாரிகள், திமுக, போலீஸ் கூட்டணியாகச் செயல்படுகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்கள் புகாரளிக்க காவல் நிலையம் சென்றால் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பின்வழியாக ஓடிவிடுகின்றனர். காவல்துறை சுயநலமாக இல்லாமல், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும். எங்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தால்,

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

அந்தப் பழி உங்களுக்குத் திருப்பி வரும். அதற்குக் காலம் பதில் சொல்லும். அந்தப் பாவம் உங்களைச் சும்மாவிடாது. இது மிரட்டல் இல்லை. இயற்கையாகவே வரும். மேலேயிருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இருக்கையில் ஸ்டாலின் மட்டும் உட்கார்ந்திருக்கிறாரா? எத்தனையோ ஜாம்பவன்கள் இருந்த இடம். எதுவுமே நிரந்தரம் இல்லை. கட்சிக்கும், தொண்டர்களுக்காகவும் எதற்கும் துணிந்து நிற்போம். சொத்து வரி உயர்வு என்பது மக்கள் விரோதச் செயல். கொலுசு, ஹாட்பாக்ஸ் வாங்கியதற்கு வரி உயர்வு கூடுதல் பரிசு.

முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.

எல்லாவற்றிலும் மத்திய அரசாங்கம் சொல்வதைக் கேட்க மாட்டோம் என எதிர்க்கும் திமுக அரசு, வரி உயர்வில் மட்டும் மத்திய அரசின் பேச்சை ஏன் கேட்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism