Published:Updated:

`அதிமுக ஆட்சியில் மட்டும் போராட்டமா?!' - டாஸ்மாக் விவகாரத்தில் திமுக-வைக் கேள்வி கேட்கும் வேலுமணி

வேலுமணி
News
வேலுமணி

``டாஸ்மாக்கை மூட வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை எல்லோரும் வலியுறுத்துகிறோம். ஆனால்...” - எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

மனு
மனு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக கொறாடா எஸ்.பி.வேலுமணி, ``கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனடியாகக் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் பகுதி மற்றும் பேருந்துகளில் மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கொரோனா வார்டுகள் அமைத்து ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த நடவடிக்கை வேண்டும்.

மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலை பணியாளர்களுக்கு ஆர்.டி‌.பி‌.சி‌.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும். மாவட்ட எல்லைகளில் வாகனங்களைச் சரியான முறையில் ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

வேலுமணி
வேலுமணி

கோவை திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லாக் கடைகளும் மூடப்பட்டு, டாஸ்மாக் மட்டும் திறந்திருந்தால் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும். அ.தி.மு.க ஆட்சியில், டாஸ்மாக்கை மூட வேண்டும் என இப்போதிருக்கும் முதல்வர்கூட போராட்டம் நடத்தினார். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்றுதான் எதிர்க்கட்சித் தலைவர் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை எல்லோரும் வலியுறுத்துகிறோம்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

கோவை மாவட்டத்தில் பல வளர்ச்சிப் பணிகளை எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம். அந்த அற்புதமான திட்டங்களை, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஒதுக்காமல் முறையாகப் பராமரிக்க வேண்டும். பணிகளை வேகமாக முடிக்க வேண்டும்.” என்றார்.