Published:Updated:

``வழக்குதானே போட முடியும்... தூக்கிலா போட்டுவிடுவார்கள்?!" - ஐடி விங்குக்கு சிக்னல் கொடுத்த வேலுமணி

வேலுமணி

'`வழக்குதானே போட முடியும்... தூக்கில் போட்டுவிடுவார்களா... முதல்வருக்கோ, திமுக-வுக்கோ அவ்வளவு பெரிய அதிகாரம் இருக்கிறதா?' - வேலுமணி.

``வழக்குதானே போட முடியும்... தூக்கிலா போட்டுவிடுவார்கள்?!" - ஐடி விங்குக்கு சிக்னல் கொடுத்த வேலுமணி

'`வழக்குதானே போட முடியும்... தூக்கில் போட்டுவிடுவார்களா... முதல்வருக்கோ, திமுக-வுக்கோ அவ்வளவு பெரிய அதிகாரம் இருக்கிறதா?' - வேலுமணி.

Published:Updated:
வேலுமணி

மண்டல அளவிலான அதிமுக ஐடி விங் கூட்டம் கோவை தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, “நீங்கள் நிறைய வேலை செய்கிறீர்கள். அந்த வேலைகள் பொதுமக்களைச் சென்று சேர வேண்டும். திமுக-வை திட்டுவது மட்டும் நம் பணி இல்லை, அவர்கள் செய்ய மறுத்த வேலைகள் என்னென்னவென்று மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

அதிமுக ஐடி விங் கூட்டம்
அதிமுக ஐடி விங் கூட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூத் வாரியாக அந்தந்த மக்களிடம் அவர்களின் பிரச்னைகளை எடுத்துச் செல்லும்விதமாக இருக்க வேண்டும். வருங்காலத்தில் ஐடி விங்கை வைத்துத்தான் கட்சி இயங்கும். மக்களுக்கு டி.வி பார்க்கவோ, பொதுக்கூட்டம் செல்லவோ எல்லாம் நேரம் இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் கையில் உள்ள செல்போனில் எளிமையான வகையில் செய்திகளைச் சேர்க்க வேண்டும். ஐடி விங்-தான் கட்சியின் இதயம். திமுக ஆட்சிக்கு வந்ததும், ஐடி விங் மீது பல்வேறு வழக்குகளைப் போடுகின்றனர். அந்த வழக்குகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.

அதிமுக ஐடி விங் கூட்டம்
அதிமுக ஐடி விங் கூட்டம்

என்மீதும் தொடர்ச்சியாக வழக்குகளைப் போட்டுவருகின்றனர். நாம் புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள். முதல்வர் மு.க,ஸ்டாலின் உள்ளிட்டோர் நம்மை வழக்கு போட்டு முடக்கிவிட முடியாது. நீங்கள் எங்கள் அருமைத் தம்பிகள். எங்கள் குழந்தைகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எடப்பாடி அண்ணனும், ஓ.பி.எஸ் அண்ணனும், நானும், மாவட்டச் செயலாளர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். திமுக ஆட்சி, விளம்பரத்தில் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களின் பொய்ப் பிரசாரங்களை முறியடியுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் உலகமகா பித்தலாட்டம் செய்தனர்.

கோவை
கோவை

இயந்திரத்திலேயே மோசடி செய்துதான் திமுக வெற்றிபெற்றது. இதையெல்லாம் நீங்கள்தான் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கோவை மாவட்டத்தில் மட்டும் அலுவலகமெல்லாம் அமைத்து 200 வழக்கறிஞர்கள் உள்ளனர். எல்லா பக்கமும் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளனர்.

வழக்குதானே போட முடியும்... தூக்கில் போட்டுவிடுவார்களா... முதல்வருக்கோ, திமுக-வுக்கோ அவ்வளவு பெரிய அதிகாரம் இருக்கிறதா... பொய் வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்காது. நீங்கள் தைரியமாக இருங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். திமுக எதிர்ப்பில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

வேலுமணி
வேலுமணி

இதில் தெளிவாக இல்லாவிடில், அம்மா நம்மைச் சும்மா விட மாட்டார்கள். நமக்கு அம்மாவின் ஆசீர்வாதம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவது உறுதி. யார் என்ன செய்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism