Published:Updated:

`தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும்’ - செல்லூர் ராஜூ சொல்வது அதிமுக-வையா, பாஜக-வையா?

செல்லூர் ராஜூ

`தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும்’ என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

`தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும்’ - செல்லூர் ராஜூ சொல்வது அதிமுக-வையா, பாஜக-வையா?

`தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும்’ என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

Published:Updated:
செல்லூர் ராஜூ

ராம ராஜ்ஜியத்தை நோக்கி இந்தியா முன்னேறுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அதைக் குறிப்பிட்டு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ``பத்தாண்டுக்காலம் தமிழகத்தில் அ.தி.மு.க நடத்தியதுதான் ராம ராஜ்ஜியம்’ என்று பதிலளித்தார்.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

மேலும், `எம்.ஜி.ஆர் நடத்தியது ராம ராஜ்ஜியம். அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக, மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதுதான் ராம ராஜ்ஜியம். அதைத்தான் ஆளுநர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். தி.மு.க ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது. விரைவில் தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் மலரும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ராம ராஜ்ஜியத்தை அ.தி.மு.க கொடுக்கும்’ என்று செல்லூர் ராஜூ கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரான சுப.வீரபாண்டியனிடம் பேசினோம்.

``விரைவில் ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும், அமையப்போகிறது என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். ராம ராஜ்ஜியம் என்றால் எப்படியிருக்கும் என்பதை மக்கள் அறிந்திட வேண்டும். ராம ராஜ்ஜியத்தில்தான் சம்பூகனின் தலை வெட்டப்பட்டது. ராம ராஜ்ஜியத்தில்தான் சீதை காட்டிலே கொண்டுபோய் விடப்பட்டாள். ராம ராஜ்ஜியம் நாட்டுக்கும் நல்லது செய்யவில்லை, வீட்டுக்கும் நல்லது செய்யவில்லை. சம்பூகன் எந்தக் குற்றமும் புரியவில்லை. ஒரு சூத்திரன் எப்படித் தவம் செய்யலாம் என்று கேட்டுத்தான் ராமர் தன் வாளால் சம்பூகனின் தலையைக் கொய்தார்.

தவம் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? இல்லை. அது எந்த வர்ணத்தாருக்கு உரியதோ, அவர்கள் மட்டும் செய்திட வேண்டும்... பிற வருணத்தாருக்கு அது உரியதில்லை என்று வருண அடிப்படையில் அமைந்த ராஜ்ஜியம்தான் ராம ராஜ்ஜியம். அதைப்போலவே, ஒவ்வொரு பெண்ணும் தன் கற்பை ஒவ்வொரு முறையும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், ஆண்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. ஆணாதிக்கச் சிந்தனை கொண்டதாகத்தான் ராம ராஜ்ஜியம் இருந்திருக்கிறது.

`தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும்’ - செல்லூர் ராஜூ சொல்வது அதிமுக-வையா, பாஜக-வையா?

வால்மீகி காட்டுகிற ராம ராஜ்ஜியம் அப்படித்தான் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, கம்பர் யுத்த காண்டத்தோடு தன் காப்பியத்தை முடித்துக்கொண்டார். ராமன் ஆண்ட உத்தரகாண்டத்தை அவர் மொழிபெயர்க்கவே இல்லை. இவற்றையெல்லாம் சொல்கிறவர்கள், அறிந்துதான் சொல்கிறார்களா? கண்டிப்பாக ஆளுநர் ரவி அறிந்துதான் சொல்லியிருப்பார். செல்லூர் ராஜூ அறியாமல்தான் சொல்லியிருப்பார். ஆளுநர் ரவி பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் ரவியாகவே பேசுகிறார். செல்லூர் ராஜூ எப்போதும் செல்லாத ஊர்களுக்கே வழிகாட்டுகிறார். ஆளுநர் ரவி வாளை எடுக்கிறார், செல்லூர் ராஜூக்கள் தங்கள் கழுத்தை நீட்டுகிறார்கள். நாட்டை மக்கள் காப்பாற்றட்டும்” என்றார் சுப.வீரபாண்டியன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினோம்.

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இறையாண்மையுள்ள ஒரு சட்டமன்றத்தின் கோரிக்கையைப் புறக்கணிப்பது என்பது ஆளுநர் ரவியின் ராம ராஜ்ஜியம். செல்லூர் ராஜூ சொல்கிற ராம ராஜ்ஜியம் வேறு. இந்தியாவிலேயே ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்ற முதல்வரைக்கொண்ட கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. அதைத்தான் ராம ராஜ்ஜியத்தின் அடையாளம் என்று செல்லூர் ராஜூ சொல்கிறாரா? இன்றைக்கு வேலுமணிகளும் தங்கமணிகளும் விஜயபாஸ்கர்களும் ஊழல் வழக்குகளில் விசாரிக்கப்படுகிறார்கள். எனவே, ஊழல் சாம்ராஜ்ஜியம்தான், இவர்களின் ராம ராஜ்ஜியமா?

விடுதலை ராஜேந்திரன்
விடுதலை ராஜேந்திரன்

வைகை அணையை தெர்மாகோல் போட்டு மூடியதை ராம ராஜ்ஜியம் என்று சொல்கிறாரா? அண்ணா பெயரில் கட்சி வைத்திருக்கிறார்கள். ராமாயணத்தை அண்ணா எதிர்த்தார். கம்ப ராமாயணத்தை எதிர்த்து நூல்களை எழுதினார். இவர்கள், ராம ராஜ்ஜியம் பற்றி பேசிக்கொண்டிருப்பது வேதனை” என்றார் விடுதலை ராஜேந்திரன்.

அரசியல் விமர்சகரும் வழக்கறிஞருமான அக்னீஸ்வரனிடம் பேசினோம்.

``ஜனநாயகம் என்ற நிலையிலிருந்து சற்று விலகி யோசிப்பதால், ராம ராஜ்ஜியம் என்று இவர்கள் பேசுவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலைகள் கூடிக்கொண்டே போகின்றன. சமையல் வரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துகொண்டே போகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயருகின்றன. இதை என்ன ராஜ்ஜியம் என்று சொல்வீர்கள்?

அக்னீஸ்வரன்
அக்னீஸ்வரன்

வலிமையான தலைவராக இருந்த இந்திரா காந்தி, தான் வளர்த்துவிட்ட தலைவர்களையெல்லாம் சிறையில் தள்ளினார். அது என்ன ராஜ்ஜியம்? நாளை ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது அனுமன் ராஜ்ஜியம் என்று சொல்லப்படுமா? இவர்கள் வார்த்தை விளையாட்டுபோல பேசிக்கொள்கிறார்கள். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படிதான், நாட்டை ஆள முடியும். அதுதான் யதார்த்தம்.

மத்தியில் பா.ஜ.க இருப்பதால், தாங்கள் பலமாக இருப்பதாக அ.தி.மு.க நினைத்துக்கொள்கிறது. எனவேதான், ராம ராஜ்ஜியம் பற்றி ஆளுநர் பேசினால், முன்னாள் அமைச்சர்களும் அது பற்றிப் பேசுகிறார்கள். அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியாக நினைத்து இப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஒரு மாயையை உருவாக்குகிறார்கள்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

அதாவது, எரிகிற எண்ணெய்ச் சட்டியிலிருந்து தப்பிக்க நினைத்து தீயில் விழுந்த கதைதான் நினைவுக்கு வருகிறது” என்றார் அக்னீஸ்வரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism