Published:Updated:

`2021-லும் அ.தி.மு.கதான் ஆட்சி அமைக்கும்!' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அ.தி.மு.கவே வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார்.

MR Vijayabhaskar
MR Vijayabhaskar

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க சார்பாக, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

MR Vijayabhaskar
MR Vijayabhaskar

மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பொரணி கே.கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

Vikatan

தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆலம் கே.தங்கராஜ், தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

ADMK Meeting
ADMK Meeting

தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆலம் கே.தங்கராஜ், தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, சிறப்புரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் பேசிய, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில்,``தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, அனைத்து குளம், ஏரிகளையும் தூர்வார உத்தரவிட்டுள்ளார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சென்னையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது, போர்க்கால அடிப்படையில் அதைச் சரிசெய்வதற்கு ரயில்கள் மூலம் சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்படி, சென்னை மக்களுக்கு ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டை ஒரு சில நாள்களில் சரி செய்தவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டசபையில் கூறியதைப் போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிக்கும்.

MR Vijayabhaskar
MR Vijayabhaskar

`அம்மாவுக்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிந்துபோகும்' எனச் சிலர் நினைத்தனர். ஆனால், தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, இந்த ஆட்சியின் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும். அடுத்து 2021ல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது" என்று பேசினார்.