Published:Updated:

எடப்பாடி பழனிசாமி கடிதத்தை ஏற்றுக்கொண்ட வங்கிகள் - திண்டுக்கல் சீனிவாசன் வசம் வங்கிக் கணக்குகள்

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்கு வழக்குகளைக் கையாளும் பொறுப்பு, அ.தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் சென்றிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி கடிதத்தை ஏற்றுக்கொண்ட வங்கிகள் - திண்டுக்கல் சீனிவாசன் வசம் வங்கிக் கணக்குகள்

அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்கு வழக்குகளைக் கையாளும் பொறுப்பு, அ.தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் சென்றிருக்கிறது.

Published:Updated:
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக பொதுக்குழுவால், கட்சியின் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினரால் நீக்கப்பட்ட பிறகும், கட்சியின் வங்கிக் கணக்கு விவகாரங்களை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக இப்போதும் தன்னிடம்தான் இருப்பதாக, தேர்தல் ஆணையத்துக்கும் ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார்.

இது ஒருபுறம் நடந்துகொண்டேயிருக்க, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்கு விவகாரங்களைக் கையாளும் பொறுப்பும், அ.தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் சென்றிருக்கிறது. இது தொடர்பாக, வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதியிருந்த அதிகாரபூர்வ கடிதத்தையும் வங்கிகள் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இது குறித்து வங்கிகளும், `எடப்பாடி பழனிசாமியிடமிருந்து ஆதாரங்களுடன்கூடிய கடிதம் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து கடிதம் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓ.பி.எஸ் தரப்பின் போதிய ஆதாரமின்மையால் வங்கிக் கணக்குகளைக் கையாள, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்குகள் யாவும், பேங்க் ஆஃப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றில் இருக்கின்றனவென்பது குறிப்பிடத்தக்கது.