அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற அன்றே, பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தின் மூலம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் சையதுகான்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப. ரவீந்திரநாத் எம்.பி, கழக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ், இரா.கோபாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், சையதுகான், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், அசோகன், ஓம்சக்தி சேகர், வி.ப.ஜெயபிரதீப், கோவை செல்வராஜ், அம்மன் பி.வைரமுத்து, சைதை பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வினுபாலன், ரமேஷ் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே ஓ.பி.எஸ், தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லாது எனவும், அ.தி.மு.க இப்போதும் தன்னிடம்தான் இருப்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கும் நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 18 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.