Published:Updated:

`எடப்பாடிக்கு வேற வழியே இல்லை...’ பொன்னையனின் பரபரப்பு ஆடியோவும் (?) விளக்கமும்

பொன்னையன்

``நாளைக்கு கே.பி.முனிசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். சாதி அடிப்படையில ஒரு குழு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. பதவியைப் பாதுகாத்துக்கிட்டா போதும்னு எடப்பாடி ஓடிக்கிட்டு இருக்காரு முட்டாள்தனமா..."

`எடப்பாடிக்கு வேற வழியே இல்லை...’ பொன்னையனின் பரபரப்பு ஆடியோவும் (?) விளக்கமும்

``நாளைக்கு கே.பி.முனிசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். சாதி அடிப்படையில ஒரு குழு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு. பதவியைப் பாதுகாத்துக்கிட்டா போதும்னு எடப்பாடி ஓடிக்கிட்டு இருக்காரு முட்டாள்தனமா..."

Published:Updated:
பொன்னையன்

அ.தி.மு.க-வில் பல்வேறுகட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், கடந்த திங்களன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அதேசமயம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார். இருப்பினும், கட்சி தன்னிடம்தான் இருக்கிறது எனத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதமெல்லாம் எழுதியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கோலப்பனிடம், கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னையன் பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ பெரும் பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த ஆடியோவில், ``தொண்டர்களெல்லாம் இரட்டை இலைப் பக்கம்தான் இருக்கிறார்கள். தலைவர்கள் பணம் பக்கம் நிற்கிறார்கள். இப்போ தங்கமணி தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஸ்டாலின்கிட்ட ஓடுறாரு. அதேமாதிரி கே.பி.முனிசாமியும் ஸ்டாலினைத் திட்டுறதை நிறுத்திட்டாரு. குவாரி, எஸ்போர்ட்ல ஒரு மாசத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கறாரு. துரைமுருகனை புடிச்சு வாங்கிட்டாரு கே.பி.முனுசாமி. கே.பி.முனுசாமி நக்சலைட்டோட தொடர்புல இருந்ததுனால அம்மா ஒதுக்கிவெச்சிருந்தாங்க. எல்லாம் கொள்ளையடிச்ச, பணத்தைப் பாதுகாக்க இப்பிடி ஆடுறாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்
எடப்பாடி பழனிசாமி, பொன்னையன்

ஸ்டாலின் தயவுக்காக தி.மு.க-வைத் திட்டுறது கிடையாது நாம. எடப்பாடி மட்டும் என்ன ஆனாலும் பரவால்லை, மம்தா பானர்ஜி மாதிரி ஜெயிலுக்குப் போனாலும் பரவால்லைன்னு ஸ்டாலினைக் கொஞ்சம் திட்டுறாரு. எடப்பாடியோட சம்பந்தி பேர்லயும் ஸ்டாலின் கேஸ் போட்டுட்டாரு. குறைஞ்சது 100 கோடி, 200 கோடி இல்லாத மாவட்டச் செயலாளர் இல்லை. எடப்பாடி பின்னாடி போனாத்தான் இதைப் பாதுகாத்துக்க முடியும். தளவாய் சுந்தரம்தான் பெரிய புரோக்கர். எடப்பாடியை கெடுக்கறதே அவர்தான்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

நான் தீர்மானங்களைப் படிக்கப்போறேன், எனக்கு முன்னே மைக் கிட்ட போய்ட்டு, `ரத்து... ரத்து...’னு கத்துறார் சி.வி.சண்முகம். சமாதானப்படுத்திடலாம் என்று எடப்பாடி சரியாய் இருந்தாரு. எல்லா மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்களைக் கொள்ளையடிக்க விட்டாரு பாருங்க அந்த நாலு வருஷமா, இப்போ எடப்பாடி முதுகுலேயே குத்திட்டாங்க. அதனாலதான் எடப்பாடி அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறாரு. சி.வி.சண்முகம் பகல்லலேயே குடிச்சிட்டு இருப்பாரு. இப்போ அவர் கையில 19 எம்.எல்.ஏ-க்கள். அந்தச் சாதி அடிப்படையில் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறதால அவங்க பின்னாடி தொங்குறாங்க.

 கே.பி.முனிசாமி
கே.பி.முனிசாமி

ஆறு மாவட்டத்துல 42 கொங்குநாட்டு கவுண்டர்கள் எம்.எல்.ஏ-க்கள் இருக்காங்க. அந்த 42 பேருல, எடப்பாடி கையில 9 பேர்தான். மீதி எல்லாத்தையும் காசு கொடுத்து, வேலுமணி, தங்கமணி அவங்கவுங்க கையிலவெச்சிருக்காங்க. இதனால எடப்பாடிக்கு வேற வழியே இல்லை. நாளைக்கு கே.பி.முனிசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். சாதி அடிப்படையில ஒரு குழு வேலை செஞ்சுட்டு இருக்கு. பதவியைப் பாதுகாத்துக்கிட்டா போதும்னு எடப்பாடி ஓடிக்கிட்டு இருக்காரு முட்டாள்தனமா. யாருமே கட்சிக்கும் விசுவாசமா இல்லை, அம்மாவுக்கும் விசுவாசமா இல்லை, தலைவருக்கும் விசுவாசமா இல்லை..." பொன்னையன் பேசியதாக அந்த ஆடியோ முடிகிறது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ குறித்து பொன்னையன், ``Voice technology modulation பயன்படுத்தி என் குரலை யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள். நான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் ஆடியோ உண்மைக்கு மாறானது. அப்படி நான் யாரிடமும் பேசவில்லை” என விளக்கமளித்திருக்கிறார். அதேநேரத்தில் பொன்னையனிடம் போனில் பேசிய கோலப்பன், தன்னிடம் போனில் பேசிய நேரம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.